உடல் மன ஆரோக்கியம்

தொடர் வரிசை ஆசனங்கள்

Share on facebook
Share on twitter

தொடர்வரிசை ஆசனங்கள்

தொடர் வரிசை ஆசனங்கள் என்பது குறிப்பிட்ட சில ஆசனங்களை தொடர்ச்சியாக செய்வதாகும். ஒரு ஆசனம், அதற்கு மாற்று ஆசனம் என தொடர்ந்து வரிசையாக செய்வதால் ஒவ்வொரு ஆசனத்தின் பலன்களையும் முழுமையாகப் பெற முடியும்.

நீங்கள் முன்னரே பயின்ற ஆசனமாக இருந்தாலும் தொடர் வரிசையில் செய்யும்போது நீங்கள் அந்த ஆசனங்களின் முழு பலன்களை பெறுவதோடு அது உங்கள் யோகப் பயிற்சிக்கு புதிய சவாலையும் புதிய கோணத்தையும் கொடுக்கிறது.  தொடர் வரிசை ஆசனம் உங்கள் மனதையும் உடலையும் ஒருங்கிணைப்பதோடு மட்டுமல்லாமல் உங்களின் சமநிலையை (balance) மேம்படுத்தும்.

தொடர் வரிசை ஆசனத்தை பல வகைகளாகப் பிரித்து செய்ய முடியுமென்பது யோகாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்று. ஆரம்ப நிலை பயிற்சியாளர்கள் முதல் கடின ஆசனங்களை பழகுபவர்கள் வரை அனைவரின் படிநிலைக்கு ஏற்ற வகையில் தொடர் வரிசை ஆசனங்களை உருவாக்க முடியும். மேலும் குறிப்பிட்ட உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் தீர்வாக தொடர் வரிசை ஆசனங்களை உருவாக்க முடியும்.

இன்று நாம் பார்க்கவிருப்பது இதுவரை செய்த கீழ்க்கண்ட  ஆசனங்களின் தொடர் வரிசை.

 • பத்மாசனம்
 • தாடாசனம்
 • உத்தானாசனம்
 • ஊர்த்துவ நமஸ்காராசனம்
 • பாதாங்குஸ்தாசனம்
 • அர்த்த சக்ராசனம்
 • பாதஹஸ்தாசனம்
 • பிறையாசனம்
 • ப்ராசரித பாதோத்தானாசனம்
 • நின்ற தனுராசனம்

Pages

 • தேடல்
 • Subscribe

  * indicates required
 • Yoga Mats

 • தமிழ்