உடல் மன ஆரோக்கியம்

பொலிவான தோற்றத்துக்கு துளசி

Share on facebook
Share on twitter

தோற்றப் பொலிவை மேம்படுத்துவதிலும் துளசி பெரும்பங்கு வகிக்கிறது. சரும நலனை பாதுகாக்கவும், கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் துளசி உதவுகிறது. தோற்றப் பொலிவுக்கு துளசியை கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம்:

துளசி எவ்வாறு தோற்றப் பொலிவை அதிகரிக்கிறது?

 • துளசி சருமத் துளைகளில் உள்ள அழுக்கை போக்கி சருமத்தை பிரகாசிக்க வைக்கிறது.
 • வயதாவதால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து சருமத்தை பாதுகாத்து புத்துணர்ச்சி அளிக்கிறது.
 • பாக்டீரியாவை அழித்து முகப்பரு போன்றவற்றிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
 • பொடுகுத் தொல்லையை போக்குகிறது.
 • இளநரை ஏற்படாமல் தவிர்க்கிறது.
 • தலைமுடி உதிர்தலை போக்குகிறது.

துளசியின் மருத்துவ குணங்கள் பற்றி படிக்க இங்கே click செய்யவும்.

முகப் பொலிவிற்கு

 • ஒரு கைப்பிடியை துளசி இலைகளை நன்றாகக் கழுவி அரைத்துக் கொள்ளவும். சிறிது சந்தனத்தை சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் பூசி காய விடவும். சுமார் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு பிறகு நீரால் முகத்தை கழுவவும். தொடர்ந்து செய்து வர முகப்பருக்கள் மறையும்.
 • ஒரு கைப்பிடி துளசி இலைகளை கழுவி, அரைத்து அதோடு பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் பூசவும். சுமார் 20 நிமிடங்களுக்கு பின் தண்ணீரால் கழுவ முகம் பிரகாசிக்கும்.
 • சிறிது துளசி இலைகளை எடுத்து கழுவி அத்துடன் சிறிது ஓட்மீல் (oatmeal) சேர்த்து அரைத்து கொள்ளவும். இத்துடன் சிறிது பால் சேர்த்து கலக்கி முகத்தில் பூசவும். சுமார் 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.
 • துளசி இலைகளையும் சிறிது புதினா இலைகளையும் கழுவி நன்றாக அரைக்கவும். இதை முகத்தில் பூசி 15 அல்லது 20 நிமிடங்களுக்கு பின் முகத்தை கழுவவும்.
 • துளசி இலைகளுடன் சிறிது வேப்பிலையை எடுத்து கழுவி அரைத்துக் கொள்ளவும். இத்துடன் சிறிது தேன் அல்லது தயிர் சேர்த்து முகத்தில் பூசி இருபது நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவவும்.

கூந்தல் பராமரிப்புக்கு

துளசி தலையில் உள்ள பொடுகை போக்குகிறது. தலை அரிப்பை சரி செய்கிறது. முடி உதிர்வைத் தடுத்து முடி வளர உதவுகிறது. இள நரையை போக்குகிறது.

ஒரு கைப்பிடி துளசி இலைகளை கழுவி அரைத்து சாறு எடுக்கவும். இரவு படுக்கும் முன், துளசி சாறுடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். காலையில் தலையில் சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.

சிறிது துளசி இலைகளை எடுத்து கழுவி அரைக்கவும். அத்துடன் சிறிது நெல்லிக்காய் பொடி மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை தலையில் பூசி 30 நிமிடங்களுக்கு பின் தண்ணீரால் அலசவும். இந்த கலவையுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்தலாம்.

இள நரைக்கு

இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காய்களின் சாறு எடுத்து அவற்றை துளசி சாறுடன் கலக்கவும். இதை நரை முடி மேல் பூசி 30 நிமிடங்கள் கழித்து தலையை அலசவும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இவ்வாறு செய்வது நல்ல பலன் கொடுக்கும். காய்ந்த நெல்லிக்காய்களையும் ஊற வைத்து பயன்படுத்தலாம்.

துளசி தேநீர் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி படிக்க இங்கே click செய்யவும்.

 • தேடல்
 • Subscribe

  * indicates required
 • Yoga Mats

 • தமிழ்