தொலைக்காட்சி விளம்பரங்களில் “இதுல மஞ்சள் இருக்கு” என்று அழகு சாதனங்களின் விளம்பரங்களில் ஒலிக்கும் வசனத்தை காது வலிக்க கேட்டிருப்பீர்கள். தோற்றப் பொலிவுக்கு, மஞ்சள் இருக்கிற அழகு சாதனத்தை விட்டு விட்டு, மஞ்சளை நேரடியாகவே பயன்படுத்தலாமே.
மஞ்சளின் மருத்துவ குணங்கள் பற்றி அறிய இங்கே click செய்யவும்.
முகப் பொலிவுக்கு
- தினசரி குளியலின் போது மஞ்சள் பொடியை தேய்த்து குளிக்கவும்.
- மஞ்சள், எலுமிச்சை சாறு மற்றும் தயிர் ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து முகத்திலும் கை, கால்களிலும் பூசி 20 நிமிடம் கழித்து கழுவவும்.
- மஞ்சளுடன் சிறிது தேன் சேர்த்து நன்றாகக் கலந்து பூசி, காய்ந்த பின் முகத்தை கழுவவும்.
மஞ்சள் தேநீரின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இங்கே click செய்யவும்.
முகப்பருவை போக்க
- மஞ்சளுடன் சிறிது தேன் சேர்த்து நன்றாகக் கலந்து முகப்பருவின் மீது தடவி சுமார் 20 நிமிடம் கழித்து கழுவவும்.
- ஒரு கைப்பிடி வேப்பிலையை எடுத்து அரைத்து மஞ்சளுடன் கலந்து முகப்பருவின் மீது பூசி, நன்றாகக் காய்ந்த பின் கழுவவும்.
- மஞ்சளுடன் சிறிது கடலை மாவை சேர்த்து முகப்பரு மீது தடவி சுமார் 20 நிமிடம் கழித்து கழுவவும்.
- சிறிது மஞ்சள் மற்றும் கத்தாழையை எடுத்து கலந்து முகப்பரு உள்ள இடத்தில் பூசி சுமார் 20 நிமிடம் கழித்து கழுவவும்.
உதட்டு கருமையை போக்க
- மஞ்சளுடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து உதடுகள் மீது பூசி காய்ந்த பின் கழுவவும்.
- மஞ்சளுடன் சிறிது பால் மற்றும் தேன் சேர்த்து நன்றாகக் கலந்து உதடுகள் மீது பூசி காய்ந்த பின் கழுவவும்.
- மஞ்சளுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து உதடுகள் மீது பூசி காய்ந்த பின் கழுவவும்.
இவற்றுடன் சமச்சீரான உணவை எடுப்பதும், அதிக எண்ணெய் பொருட்களை தவிர்ப்பதும் மிக அவசியமானதாகும்.