உடல் மன ஆரோக்கியம்

பொலிவான தோற்றத்துக்கு இஞ்சி

Share on facebook
Share on twitter

தோற்றப் பொலிவுக்கு இஞ்சி எப்படி உதவுகிறது என்பதை மூலிகை உலகம் – இஞ்சி பகுதியில் பார்த்தோம். பொலிவான தோற்றத்தைப் பெற இஞ்சியை எப்படி பயன்படுத்துவது என்பதை இப்போது பார்க்கலாம்.

இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி படிக்க இங்கே click செய்யவும்.

முகப் பொலிவிற்கு

 • ஒரு அங்குல இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து சாறு எடுக்கவும். அதனுடன் சிறிது ரோஸ்வாட்டர் மற்றும் தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி சுமார் 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும்.
 • இஞ்சிச் சாறுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பருக்கள் மீது பூசவும். காய்ந்த பின் முகத்தைக் கழுவவும்.
 • இஞ்சிச் சாறுடன் சிறிது தேன் சேர்த்து பருக்கள் மீது பூசவும். சுமார் 20 நிமிடங்களுக்குப் பின் முகத்தைக் கழுவவும்.
 • இஞ்சிச் சாறுடன் சிறிது தேன் சேர்த்து கருந் திட்டுக்கள் மீது பூசவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும்.
 • இஞ்சிச் சாறுடன் சிறிது தயிர் சேர்த்து நன்றாகக் கலக்க்வும். இந்தக் கலவையை முகத்தில் பூசி 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவவும்.

கூந்தல் பராமரிப்பிற்கு

 • இஞ்சி சாறுடன் வெங்காய சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை தலையில் நன்றாகத் தேய்த்து சுமார் அரை மணி நேரம் கழித்து கூந்தலை அலசவும்.
 • ஒரு தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன், ஆறு முதல் எட்டு தேக்கரண்டி தேங்காய் பால், சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது தேன் சேர்த்து நன்றாகக் கலந்து தலையில் பூசவும். சுமார் அரை மணி நேரம் கழித்து தலைமுடியை நன்றாக தண்ணீரில் அலசவும்.
 • சிறிது இஞ்சிச் சாறுடன் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும்.

முகத்திற்கும் கூந்தலுக்கும் இஞ்சி essential எண்ணெய்யையும் பயன்படுத்தலாம்.

இஞ்சி தேநீர் மற்றும் செய்முறைப் பற்றிப் படிக்க இங்கே click செய்யவும்.

 

 • தேடல்
 • Subscribe

  * indicates required
 • Yoga Mats

 • தமிழ்