உடல் மன ஆரோக்கியம்

இஞ்சி தேநீர்

Share on facebook
Share on twitter

இஞ்சி தேநீர் உடனடி ஆற்றலைத் தரக்கூடியது. வழக்கமான காபி, டீ பிரியர்களையும் சுண்டி இழுக்கும் சுவை இஞ்சி தேநீருக்கு உண்டு.

இஞ்சியின் மருத்துவ குணங்கள் பற்றி படிக்க, இங்கே click செய்யவும்.

செய்முறை

 • ஒரு அங்குல அளவிற்கு இஞ்சியை எடுத்து நன்றாக அலசிய பின் தோலை சீவவும்.
 • தோல் சீவிய இஞ்சியை மெல்லியதாக சீவிக் கொள்ளவும்.
 • ஒரு கோப்பை தண்ணீரில் மெலிதாக சீவிய இஞ்சியை சேர்த்து அடுப்பில் ஏற்றவும்.
 • தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், தீயை நன்றாகக் குறைத்து மேலும் ஓரிரு நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும். உங்களுக்கு அதிகத் திடமான தேநீர் வேண்டுமானால் சுமார் அய்ந்து நிமிடங்களுக்குக் குறைந்த தீயில் வைக்கவும்.
 • அடுப்பை அணைத்துத், தேநீரை வடிகட்டவும்.
 • கூடுதல் சுவைக்காகச் சிறிது தேன், வெல்லம், நாட்டுச் சர்க்கரை இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சிறிதளவு சேர்த்துப் பருகவும்.

பலன்கள்

 • சளியைக் கரைக்கிறது
 • சீரணத்தை மேம்படுத்துகிறது
 • உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது
 • நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது
 • இருதய நலனைப் பாதுகாக்கிறது
 • வயிற்று கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது
 • தலைவலியைக் குறைக்க உதவுகிறது
 • இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது
 • கர்ப்பிணிப் பெண்களின் மசக்கையை சரி செய்ய உதவுகிறது
 • ஊளைச் சதையைக் குறைக்க உதவுகிறது

மேனி எழிலுக்கு இஞ்சியைப் பயன்படுத்தும் முறைப் பற்றி அறிய, இந்தப் பக்கத்தைப் பார்க்கவும்.

 • தேடல்
 • Subscribe

  * indicates required
 • Yoga Mats

 • தமிழ்