உடல் மன ஆரோக்கியம்

கற்பூரவல்லி உணவுகள்

Share on facebook
Share on twitter

Table of Contents

மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லியைப் பயன்படுத்தி செய்யக் கூடிய உணவு வகைகளில் சிலவற்றைப் பார்க்கலாம்:

கற்பூரவல்லி ரசம்

மூலிகை ரசம் என்றால் மருந்து மாதிரி இருக்கும் என்று எண்ணமிருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள். கற்பூரவல்லி ரசத்தின் மருத்துவ குணங்கள் மட்டுமல்ல, அதன் சுவையும் அபாரம்தான்.

கற்பூரவல்லி சட்னி

இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏற்ற சுவையான சட்னிகளில் நீங்கள் தாராளமாகக் கற்பூரவல்லி சட்னியைச் சேர்த்துக் கொள்ளலாம்.

செய்முறை
 • சுமார் 20 கற்பூரவல்லி இலைகளை நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
 • அவ்விலைகளோடு இரண்டு அல்லது மூன்று பச்சை மிளகாய், இரண்டு அல்லது மூன்று மேசைக்கரண்டி தேங்காய், சிறிது இஞ்சி, தேவையான உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
 • தேவையென்றால் கடுகு தாளித்துக் கொள்ளலாம். கற்பூரவல்லி இலைகளை சிறிது எண்ணெய் விட்டு வதக்கியும் அரைக்கலாம். சிறிது உளுத்தம் பருப்புடன் இரண்டு சிவப்பு மிளகாயை சேர்த்து எண்ணெயில் வதக்கி இலைகளுடன் அரைத்தும் கற்பூரவல்லி சட்னி செய்யலாம். 

கற்பூரவல்லி தேநீர்

கற்பூரவல்லியின் வாசனையே உங்களை சுண்டி இழுக்கும். அதில் தேநீர் தயாரித்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளும் அப்படித்தான்.

செய்முறை
 • நான்கு அல்லது ஐந்து கற்பூரவல்லி இலைகளை எடுத்து நன்றாகக் கழுவவும்.
 • ஒரு கோப்பைத் தண்ணீரில் கற்பூரவல்லி இலைகளைச் சற்று நொறுக்கி சேர்த்து கொதிக்க வைக்கவும்.
 • தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், தீயை சிறிதாக்கி மேலும் சில நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
 • அடுப்பை அணைத்து கற்பூரவல்லி தேநீரை வடிகட்டவும். தேவையென்றால் சுவையை அதிகரிக்க சிறிது தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்க்கலாம்.

கற்பூரவல்லி தேநீரின் பலன்கள்

 •  சளி, இருமலைப் போக்குகிறது
 • சுரத்தைத் தணிக்கிறது
 • அசீரணத்தை போக்குகிறது
 • வயிற்று உபாதைகளை சரி செய்கிறது
 • தலைவலியைப் போக்க உதவுகிறது
 • இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது
 • மாதவிடாய் காலத்து வலியைப் போக்க உதவுகிறது

கற்பூரவல்லியின் பலன்களைப் பற்றி படிக்க, இங்கே click செய்யவும்.

உடற்பயிற்சி செய்யும் நாட்களில், leg roller-ஐ பயன்படுத்தி விட்டு ஒரு கோப்பை கற்பூரவல்லி தேநீர் குடித்தால்…சுவைத்துப் பாருங்கள் தெரியும்.

 

 • தேடல்
 • Subscribe

  * indicates required
 • Yoga Mats

 • தமிழ்