உடல் மன ஆரோக்கியம்

இரணகள்ளி தேநீர்

Share on facebook
Share on twitter

இரணகள்ளியின் பலன்களைப் படித்த பின் அதைத் தேநீராகக் குடிக்கா விட்டால் எப்படி? இதோ உங்களுக்காக, இரணகள்ளி தேநீர் தயாரிக்கும் முறை:

(இரணகள்ளி சிறுநீரகக் கற்களைப் போக்கும் என்று அறிவீர்களா? இரணகள்ளியின் மேலும் பல மருத்துவ குணங்களைப் பற்றிப் படிக்க இங்கே click செய்யவும்.)

செய்முறை 

 • மூன்று முதல் அய்ந்து இரணகள்ளி இலைகளையும் இளம் தண்டுகளோடு பறித்து சுத்தம் செய்து, சற்றுக் கசக்கி ஒரு கோப்பைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் தீயைக் குறைத்து மேலும் சில நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
 • அடுப்பை அணைத்து, சிறிது நேரத்துக்குத் தண்ணீரை மூடி வைக்கவும்.
 • வடிகட்டி, தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துப் பருகவும்.

பலன்கள்

 • சளி, இருமல் ஆகியவற்றைப் போக்குகிறது
 • மூச்சுக் கோளாறுகளை சரி செய்கிறது
 • அசீரணக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது
 • தலைவலியைப் போக்குகிறது
 • இரத்தத்தை சுத்தம் செய்கிறது
 • வயிற்றுப் போக்கை சரி செய்கிறது
 • சிறுநீரகக் கற்களைக் கரைக்கிறது
 • கல்லீரலைப் பாதுகாக்கிறது
 • அதிக இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
 • தசைகளுக்குப் புத்துணர்வு ஊட்டுகிறது
 • மூல நோயைக் குணப்படுத்த உதவுகிறது
 • சிறுநீர், மலம் வெளியேற்றத்துக்கு உதவுகிறது
 • கூந்தல் நலத்தைப் பாதுகாக்கிறது
 • தேடல்
 • Subscribe

  * indicates required
 • Yoga Mats

 • தமிழ்