உடல் மன ஆரோக்கியம்

துளசி உணவுகள்

Share on facebook
Share on twitter

Table of Contents

போகிற போக்கில் பறித்து சாப்பிடத் தூண்டும் சில மூலிகை செடிகளில் ஒன்று துளசி. துளசியைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளும் அப்படியே. இங்கே உங்களுக்காக சில துளசி உணவுகள்.

அதற்கு முன்னால், துளசி செடியின் மருத்துவ குணங்களைப் பற்றி படிக்க, இங்கே click செய்யவும்.

துளசி ரசம்

ரசம் விரும்பிகளின் பட்டியலில் அவசியம் இருக்க வேண்டியது இந்தச் சுவையான, மருத்துவ குணம் வாய்ந்த துளசி ரசம். ரசம் விரும்பிகள் அல்லாதவர்கள் யாரேனும் இருந்தால், துளசி ரசம் பருகிய பின்னர் கண்டிப்பாகக் கட்சி மாறக் கூடிய வாய்ப்பு அதிகம். 

இதைக் குறைவான நேரத்தில் செய்து முடிக்க முடிந்தது. சுவையும் அபாரம். 

துளசி ரசம் செய்யத் தேவையான பொருட்கள்:

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு

துளசி இலை – 30 – 40 வரை

தக்காளி – 2 அல்லது 3

ரசப் பொடி – 2 மேசைக் கரண்டி

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எலுமிச்சை சாறு – சிறிதளவு

கொத்துமல்லித் தழை

செய்முறையைப் பார்க்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

https://vegeyum.wordpress.com/2016/03/22/tulasi-rasam/

துளசி சோறு

வித்தியாசமான, அருமையான சுவையோடிருந்தது துளசி சோறு. 

துளசி சோறு தயாரிக்க குறைவான நேரமே பிடித்தது. இதன் சுவையும் அருமையாக இருந்தது. அடுத்த முறை புளி சேர்க்காமல் செய்து பார்க்கலாம் என்றிருக்கிறேன். 

துளசி சோறு செய்யத் தேவையான பொருட்கள்

துளசி இலை – 1 கிண்ணம் அளவு

சிகப்பு மிளகாய் – 8

கடலைப்பருப்பு – 2 மேசைக்கரண்டி

சீரகம் – 1 மேசைக்கரண்டி

பூண்டு – 5

புளி – 1 மேசைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

நெய் – 1 மேசைக்கரண்டி

வடித்த சோறு – 1 கிண்ணம்

துளசி சோறு செய்முறையைப் பார்க்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

 https://cookpad.com/in/recipes/4454059-tulsi-rice

துளசி தேநீர்

துளசி தேநீரின் சுவையும் அலாதியானதுதான்.  துளசி தேநீர் தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம்.

 Tulsi Tea

 செய்முறை
 •  ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை எடுத்து கொள்ளவும்.
 • இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அலசிக் கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி துளசி இலைகளை சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
 • துளசி தண்ணீர் கொதிக்க தொடங்கியதும், தீயை நன்றாகக் குறைத்து மேலும் சில நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து பின் தீயை அணைக்கவும்.
 • வடிகட்டிய பின் துளசி தேநீரை பருகவும். சுவையைக் கூட்ட சிறிது தேன் சேர்த்துக் கொள்ளவும்.

துளசி தேநீரின் பலன்கள்

 • சளி, இருமல் ஆகியவற்றை போக்குகிறது.
 • நுரையீரல் செயல்பாட்டை ஊக்குவித்து நுரையீரல் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
 • நோய் எதிர்ப்பு திறனை வளர்க்கிறது.
 • சுரத்தை தணிக்கிறது.
 • வயிற்று போக்கை சரி செய்கிறது.
 • வாந்தியை போக்குகிறது.
 • சீரணத்தை மேம்படுத்துகிறது.
 • அதிக இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
 • இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது.
 • மூட்டு பிரச்சினைகளை போக்க உதவுகிறது.
 • சரும நலத்தை பேணுகிறது; தோற்றத்தில் பொலிவை ஏற்படுத்துகிறது.
 • மன அழுத்தத்தை போக்குகிறது.
 
 
 
Slide 1 Heading
Take a handful of Tulsi leaves
Click Here
Slide 2 Heading
Rinse the leaves to remove dirt
Click Here
Slide 3 Heading
Make fresh tea and enjoy good health
Click Here
Previous
Next
 • தேடல்
 • Subscribe

  * indicates required
 • Yoga Mats

 • தமிழ்