உடல் மன ஆரோக்கியம்

சூரிய வணக்கம் / சூரிய நமஸ்காரம் (Sun Salutation)

Share on facebook
Share on twitter
வடமொழியில் சூரிய நமஸ்காரம் என்கிற இந்த சூரிய வணக்கம் சூரியனைப் பார்த்து செய்யக்கூடியது என்ற தவறான கருத்து உள்ளது. சூரிய வணக்கம் என்பது சூரியனை தொழுதல் ஆகும், அதாவது, போற்றுதல் ஆகும். போற்றுதல் என்றால் உடலின் சில அசைவுகளால் போற்றுதல். எதை போற்றுதல் என்றால் சூரியனை. இப்பொழுதுதான் தவறான கருத்து என்றோம் அல்லவா? இல்லை, சரியான கருத்துதான்; வெளியே உள்ள சூரியனை அல்ல, உள்ளே உள்ள சூரியனை. அது என்ன? நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் நமது மூளையே நமது சூரியன். அப்படியானால் நமது மூளையை போற்றுதல் ஆகும். மூளையை எப்படி போற்றுவது? சிலைகளுக்கு அபிஷேகம் செய்து எப்படி போற்றுகிறார்களோ நமது சூரியனையும் அப்படி போற்ற வேண்டும். எதைக் கொண்டு? நம் உடல் முழுவதும் இயங்கக் காரணமான இரத்தத்தைக் கொண்டு. இந்த பயிற்சியை செய்யும் போது இரத்த ஓட்டம் வேகமாக உடல் முழுவதும் சுற்றி தலைக்கு பாய்கிறது. அதன் மூலம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் பெறுகிறது. குறிப்பாக, மூளையின் அனைத்து பகுதிகளும் இரத்த ஓட்டம் பெற்று சிறப்பாக இயங்குகிறது. மூளைதான் உடலை இயக்குகிறது. ஆனால், அந்த மூளை இயங்க இரத்த ஓட்டம் தேவை. அதை அளிப்பது நமது இருதயம். உடலின் வெப்பத்தை சமமாக வைத்திருப்பது இருதயமே. ஆக, உடலின் ஒளி இருதயம். அந்த ஒளியைத் தந்து இயக்கும் சூரியன் நமது மூளை, குறிப்பாக ஆழ்மனம், மூளையிலேயே குறிப்பிட்ட பகுதி ஆகும். மொத்தத்தில் இரத்த ஓட்டத்தை நன்றாக நடத்தக் கூடியது இந்த சூரிய வணக்கம். பல ஆசன நிலைகளின் தொகுப்பே இந்த சூரிய வணக்கம். இதை தொடர்ந்து செய்வதால் இரத்த ஓட்டம் சீராகி, மூளை உற்சாகமடைந்து புத்துணர்வு பெற்று உடலை இயக்கி, அதன் மூலம் தானும் இரத்த ஓட்டத்தை பெற்றுக் கொள்கிறது. அதனால் இது சூரிய வணக்கம் ஆகிறது.

சூரிய வணக்கத்தின் மேலும் சில பலன்கள்

 • நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது.
 • நுரையீரலின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
 • முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது.
 • சீரணத்தை பலப்படுத்துகிறது.
 • ஹார்மோன் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.
 • சீரற்ற மாதவிடாயை ஒழுங்குப்படுத்துகிறது.
 • தசைகளை பலப்படுத்துகிறது.
 • ஆற்றலை அதிகரிக்கிறது.
 • உடலின் சமநிலையை (balance) செம்மைப்படுத்துகிறது.
 • உடலின் நெகிழ்வுத்தன்மையை (flexibility) அதிகரிக்கிறது.
 • உடல் மன ஒருங்கிணைப்பை (body-mind co-ordination) ஊக்குவிக்கிறது.
 • கவனத்தை கூர்மையாக்குகிறது.
 • மன அழுத்தத்தை போக்குகிறது.

குறிப்பு

செய்முறையை காணொளியில் காண்க: சூரிய வணக்கத்தை ஆறு முதல் 12 முறை வரை செய்யலாம். ஒரு முறை என்பது வலது, இடது என இரு கால்களும் ஒவ்வொரு சுழற்சியை நிறைவு செய்வதாகும். குடலிறக்கம், தீவிர முதுகு வலி, தீவிர மணிக்கட்டு வலி உள்ளவர்கள் இந்த பயிற்சியை தவிர்ப்பது நல்லது.  
 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • Herbal Facial Glow

 • Deal of the Day

 • தமிழ்