Table of Contents
சமையலறையின் முடிசூடா ராணியான மஞ்சளைப் பயன்படுத்தி செய்யக்கூடிய சில எளிய உணவு வகைகளைப் பார்க்கலாம்.
மஞ்சளின் மருத்துவ குணங்கள் பற்றி அறிய இங்கே click செய்யவும்.
மஞ்சள் சோறு

இதை ஒரு முறை சுவைத்துப் பார்த்தால் மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும்.
தேவையான பொருட்கள்
வடித்த சோறு – 1/2 cup
மஞ்சள் தூள் – 1 teaspoon
வெங்காயம், பெரியது – 1
சீரகம் – 1/4 teaspoon
ஏலக்காய் – 1
இலவங்கம் – 1
நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்துமல்லி – சிறிதளவு
செய்முறையைப் பார்க்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
https://www.whiskaffair.com/turmeric-rice-recipe/
முந்திரி, வேகவைத்த வேர்க்கடலையை சேர்த்து சத்தையும் சுவையையும் கூட்டலாம். தேவையென்றால் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
மஞ்சள் தேநீர்
மஞ்சளைத் தேநீராகத் தயாரித்து பருகுவதன் மூலம் மஞ்சளின் பயன்களை முழுமையாக அடையலாம். மஞ்சள் தேநீர், இயற்கை அங்காடிகளிலும், இணையதள வர்த்தக நிறுவனங்களிலும் கிடைக்கிறது.
மஞ்சள் தேநீர் செய்முறை
- 2 கோப்பை தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் ஏற்றவும்.
- அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் கொதிக்க தொடங்கியதும், தீயை சிறிதாக்கி மேலும் சில நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும்.
- தண்ணீர் சிறிது சுண்டியதும், அடுப்பை அணைத்து, தேநீரை வடிகட்டவும்.
- தேவைப்பட்டால், சுவையை கூட்ட, தேன் அல்லது சிறிது எலுமிச்சை சாறை சேர்த்து பருகலாம்.
மஞ்சள் தேநீரின் பலன்கள்
- நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது.
- இருதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.
- மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றை போக்க உதவுகிறது.
- புற்று நோய் ஏற்படுவதைத் தவிர்க்க உதவுகிறது.
- மூளையின் திறனை வளர்க்கிறது.
- மூளை சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.
முகப் பொலிவிற்கு மஞ்சளை பயன்படுத்தும் முறை பற்றி அறிய இங்கே click செய்யவும்.