உடல் மன ஆரோக்கியம்

தொப்பையை வயிறாக மாற்றும் 15 சிறந்த ஆசனங்கள்

Share on facebook
Share on twitter

உடல் எடைப் பராமரிப்புப் பகுதியில் முதலில் நாம் தொப்பையைக் கரைக்கும் ஆசனங்கள் பற்றி பார்க்கலாம்:

வயிற்றில் அதிக சதை ஏன் உருவாகிறது?

தொப்பை ஏற்படுவதற்கான காரணங்களில் சில:

 • தவறான உணவுப் பழக்கம்
 • உடற்பயிற்சியின்மை
 • தூக்கமின்மை
 • நார்ச்சத்து குறைவான உணவுகள் எடுத்தல்
 • புரதச்சத்து குறைவான உணவுகள் எடுத்தல்
 • சர்க்கரை அதிகமுள்ள உணவுகள் எடுத்தல்
 • மாதவிடாய் நிற்கும் காலம்
 • ஹார்மோன் குறைப்பாடுகள்
 • வயதாகுதல்
 • மன அழுத்தம்

பெற்றோர், தாத்தா பாட்டி போன்ற குடும்ப உறுப்பினர்களுக்கு தொப்பை இருந்தாலும் உங்களுக்குத் தொப்பை ஏற்படுவதற்கான சாத்தியம் உண்டு.

யோகா எப்படி தொப்பையைக் கரைக்கிறது?

யோகா உடல் உள்ளுறுப்புகளின் இயக்கத்தைச் சீர் செய்கிறது, மனதை அமைதிப்படுத்துகிறது, உடல், மன இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் வயிற்றிலுள்ள அதிக சதையைக் கரைக்க உதவுகிறது.

ஆசனங்களைத் தொடர்ந்து பழகுவதால் உடலும் மனமும் புத்துணர்ச்சி அடைகிறது, உள்ளுறுப்புகளின் சீரான இயக்கத்தால்  சத்துக்களை கிரகித்தலும் மற்றும் கழிவுகள் வெளியேற்றமும் சீராக நடைப்பெற்று சீரண மண்டலத்தின் இயக்கம் செம்மையாகிறது.

யோகாசனங்கள் ஹார்மோன் செயல்பாடுகளை நேர் செய்கிறது. இதனால், ஹார்மோன் கோளாறுகளின் காரணமாக ஏற்படும் தொப்பைக் கரைகிறது.

யோகாசனம் பெண்களுக்கு ஒரு வரம் என்றே சொல்லலாம். அது மாதவிடாய் வலியைப் போக்குகிறது, சுகப்பிரசவத்துக்கு உதவுகிறது, மாதவிடாய் நிற்கும் நேரத்தில் ஏற்படும் உடல், மன பாதிப்புகளைப் போக்கவும், தவிர்க்கவும் செய்கிறது. தொடர்ந்து யோகப்பயிற்சி செய்வதால் மாதவிடாய் நிற்கும் காலத்தில் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அதிக சதை கரைகிறது.

தொடர்ந்து யோகாசனம் பயில்வதால் தவறான உணவுப் பழக்கத்தை தவிர்த்து நல்ல உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கும் மனநிலை வளர்கிறது.

ஆசனங்கள் மன அழுத்தத்தைப் போக்குவதால், மன அழுத்தத்தால் ஏற்படும் தொப்பைக் கரைகிறது.

தொப்பையைக் கரைக்கும் யோகாசனங்கள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொப்பையைக் கரைக்கும் ஆசனங்களைத் தொடர்ந்து பயின்று வரவும். எந்த ஒரு ஆசனத்தையும் முழுமையாகப் பயில் உடலை வருத்தாதீர்கள். முடிந்த அளவில் செய்து வந்தாலே போதுமானது. தொடர்ந்து பயின்று வர நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

1) சூரிய வணக்கம்

சூரிய வணக்கம் செய்வதால் தொப்பைக் கரைகிறது. சூரிய வணக்கம் செய்யும் முறையைப் பார்க்கக் கீழே அளிக்கப்பட்டுள்ள காணொளியைப் பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=A6ytQGnKNxI&t=1s

2) உத்தானாசனம்

உத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

3) அர்த்த சக்ராசனம்

அர்த்த சக்ராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

4) உத்கடாசனம்

உத்கடாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

5) திரிகோணாசனம்

திரிகோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

6) அதோ முக ஸ்வானாசனம்

அதோ முக ஸ்வானாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

7) பாதஹஸ்தாசனம்

பாதஹஸ்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

8) உஸ்ட்ராசனம்

உஸ்ட்ராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

9) நவாசனம்

நவாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

10) பஸ்சிமோத்தானாசனம்

பஸ்சிமோத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

11) புஜங்காசனம்

புஜங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

12) தனுராசனம்

தனுராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

13) சேதுபந்தாசனம்

சேதுபந்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

14) பவனமுக்தாசனம்

பவனமுக்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

15) சர்வாங்காசனம்

சர்வாங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

மேற்கூறப்பட்டுள்ள தொப்பையைக் கரைக்கும் ஆசனங்கள் பயில்வதுடன் சரியான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறைப் பழக்கங்களை மேற்கொள்வதன் மூலம்  அதிக வயிற்று சதையை விரைவில் போக்கலாம். 

இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா மற்றும் தொடு மருத்துவ சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். பல்வேறு நோய்களுக்கான யோகப்பயிற்சிகள், இயற்கை முறையில் நோய் தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் e-புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • Herbal Facial Glow

 • Deal of the Day

 • தமிழ்