வெட்டவெளியில் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

மொட்டை மாடி பயிற்சி பற்றி எவ்வளவு எழுதினாலும் போதாது போலிருக்கிறது. சென்ற வருடக் கொரோனா லாக்டவுனில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்த இடம் பெரும்பாலான வீடுகளின் மொட்டைமாடிகள்தான். காலம் காலமாக பெண்கள் வேலை செய்வதற்கான இன்னொரு தளம் போல துணி உலர்த்தவும் வடாம் காய வைக்கவும், திடீரென்று மழை பெய்தால் பெண்களுக்கு மட்டுமே அனுமதி உள்ள இடம் போல அவர்கள் மட்டுமே (வீட்டு வேலைகளில் சமபங்கு எடுக்கும் ஆண்கள் பொறுத்துக் கொள்ளவும்) படிகளை இரண்டிரண்டாகத் தாவி மழையிலிருந்து துணிகளைப் […]