Yoga Pose for Day 59 - Four-Limbed Staff Pose (Chaturanga Dandasana)

முந்தைய பதிவு ஒன்றில் கும்பக ஆசனம் (High Plank Pose) பற்றி பார்த்திருக்கிறோம். இன்றைய ஆசனமான சதுரங்க தண்டாசனத்தின் ஒரு வடிவமே கும்பக ஆசனம். ஆரம்ப நிலை பயிற்சியாளர்கள் கும்பக ஆசனத்தைத் தொடர்ந்து பயின்ற பின் சதுரங்க தண்டாசனத்தைப் பழகலாம். வடமொழியில் ‘சதுர்’ என்றால் ‘நான்கு’, ‘அங்க’ என்றால் ‘உறுப்பு’ என்று பொருள். ‘தண்ட’ என்பதற்குக் ‘கம்பு’ என்பது பொதுவான பொருளாக இருந்தாலும், இங்கு ‘தண்ட’ என்பது முதுகுத்தண்டைக் குறிப்பதாகும். இது ஆங்கிலத்தில் Low Plank Pose […]