Yoga Pose for Day 91 - Plough Pose (Halasana)

முந்தைய பதிவுகளில் ஒன்றில் அர்த்த ஹலாசனம் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது ஹலாசனம். ‘ஹலா’ என்றால் ‘ஏர் கலப்பை’ என்று பொருள். இவ்வாசனத்தில் உடல் ஏர் கலப்பை வடிவில் இருப்பதால் இப்பெயர் பெறுகிறது. இது பொதுவாக சர்வாங்கசனத்திற்குப் பின் செய்யப்படுகிறது. இது ஆங்கிலத்தில் Plough Pose (Plow Pose) என்று அழைக்கப்படுகிறது. ஹலாசனம் பயில்வதால் மணிப்பூரகம், அனாகதம் மற்றும் விசுத்தி சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இதன் காரணமாக பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் திறன் வளர்கிறது; அன்பு, பரிவு […]