Yoga Pose for Day 97 - Wide Legged Seated Forward Fold (Upavistha Konasana)

இதற்கு முன்னர் நாம் சில கோணாசன வகைகளைப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது உபவிஸ்த கோணாசனம். வடமொழியில் ‘உபவிஸ்த’ என்றால் ‘அமர்ந்த’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். உபவிஸ்த கோணாசனம் ஆங்கிலத்தில் Wide Legged Seated Forward Fold என்றும் Wide Angle Seated Forward Bend என்றும் அழைக்கப்படுகிறது. உபவிஸ்த கோணாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், குரு, ஆக்ஞா மற்றும் சஹஸ்ரார சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனத்தைத் தொடர்ந்து பயின்று வர சக்கரங்களின் இயக்கம் […]

Yoga Pose for Day 95 - Legs Up the Wall Pose (Viparitakarani)

ஆசனங்களின் அரசன் என அழைக்கப்படும் சிரசாசனம் மற்றும் ஆசனங்களின் அரசி என்று அழைக்கப்படும் சர்வாங்காசனம் ஆகியவற்றைப் பயில முடியாதவர்கள் விபரீதகரணியைப் பயில்வதன் மூலம் மேற்கண்ட ஆசனங்களின் பலன்களின் பெரும்பாலானவற்றை அடையலாம். இவ்வாசன நிலையை மிக எளிதாக அனைவரும் செய்யும் முறை கீழே குறிப்புப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. (சர்வாங்காசனம் செய்முறையைப் பார்க்க, இந்தப் பக்கத்துக்குச் செல்லவும்). வடமொழியில் ‘விபரீத’ என்றால் ‘தலைகீழ்’ என்றும் ‘கரணீ’ என்றால் ‘செய்தல்’ என்றும் பொருள். இவ்வாசனம் ஆங்கிலத்தில் Legs Up the Wall […]

Yoga Pose for Day 87 - Crocodile Pose (Makarasana)

குப்புறப் படுத்த நிலையில் ஓய்வாசனம் செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஆம், இன்று நாம் பார்க்கப் போகும் மகராசனம் குப்புறப் படுத்த நிலையில் உடலுக்கு ஓய்வு தருவதுதான். வடமொழியில் ‘மகர’ என்பது முதலையைக் குறிக்கும் சொல்லாகும். மகராசன நிலை முதலையைப் போன்று இருந்தாலும், இவ்வாசனத்தில் உதரவிதான சுவாசத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது; இது முதலை மூச்சு விடுவதை ஒட்டி இருப்பதாலும் மகராசனம் என்ற பெயர் பொருத்தமாகிறது. உதரவிதான சுவாசம் செய்யும் போது உதரவிதானம், வயிறு மற்றும் வயிற்று தசைகள் […]

Yoga Pose for Day 36 – Revolved Head-to-Knee Pose (Parivrtta Janu Sirsasana)

நாம் முன்னரே ஜானு சிரசாசனம் பற்றியும் அதன் பலன்கள், செய்முறை பற்றியும் பார்த்தோம். பரிவ்ருத்த ஜானு சிரசாசனத்தில் ஒரு கை உடலை சுற்றி வந்து காலை பிடிப்பதாக இருக்கும். ‘பரிவ்ருத்த’ என்ற சொல்லுக்கு ‘சுற்றி’ என்று பொருள். நாம் முன்னரே பார்த்தது போல் ‘ஜானு’ என்றால் ‘முட்டி’, ‘சிரசா’ என்றால் ‘தலை’ என்று பொருள். ஆக, இது வளைந்து திரும்பி காலை பிடிக்கும் ஆசனமாகும். பரிவ்ருத்த ஜானு சிரசாசனத்தில் சீரண மண்டலம் செம்மையாக இயங்குகிறது. முதுகுத்தண்டை மட்டுமல்லாமல் […]

Yoga Pose for Day 14 – Child Pose (Balasana)

ஒரு குழந்தை கால்களை மடக்கிய நிலையில் குப்புறப்படுத்திருக்கும் நிலையே பாலாசனம். பாலா என்றால் குழந்தை ஆகும். ஏன் குழந்தை குப்புறப்படுக்கிறது? ஆறு அல்லது ஏழாம் மாதத்தில் குழந்தை குப்புற கவிழ்கிறது. அதன் பின் அப்படியே வலம் வரத் துவங்கும். தன் மார்பினாலும் மேற்கையினாலும் உந்தித் தள்ளி வலம் வரும். குழந்தையின் இந்த இயக்கத்தினால்தான் அதன் முதுகு, கழுத்து, தோள்பட்டைகள், கைகள் என உடலின் மேல்பகுதி பலமடைந்து, உட்காருதல், தவழுதல், முட்டிப் போடுதல் என அடுத்த நிலைக்கு குழந்தை […]

English (UK)