Yoga Pose for Day 64 - Wheel Pose (Chakrasana)

பின் வளைந்து செய்யும் ஆசனங்களில் சவாலான ஆசனம் சக்ராசனம். இதன் பெயரிலேயே புரிந்திருக்கும், இவ்வாசனத்தில் உடல் சக்கரமாக வளைந்திருக்கும் என்று. இவ்வாசனம் ஆங்கிலத்தில் Wheel Pose என்று அழைக்கப்படுகிறது. சக்ராசனம் உடலில் உள்ள முக்கியமான எட்டு சக்கரங்களையும் (ஏழு முக்கிய சக்கரங்கள்தானே என்று நினைக்கிறீர்களா, விரைவில் இது பற்றி எழுதுவோம்) தூண்டுவதால், இவ்வாசனம் மிகவும் வலிமையான ஆசனமாகவும் உடலுக்கு ஆற்றலைத் தரும் ஆசனமாகவும் ஆகிறது. சக்ராசனம் பழகுவதால் முழு உடலுக்குமே அற்புதமான அளவில் பயிற்சி கிடைக்கிறது. சக்ராசனத்தின் […]

Yoga Pose for Day 30 – Psychic Union Pose (Yogamudrasana)

யோகமுத்ரா என்பது முத்திரையை ஆசனத்தில் செய்வது. இந்த ஆசனம் மனநல ஆற்றலின் ஓட்டத்தை (Psychic energy flow) சீராக்குகிறது. அதுமட்டுமல்லாமல், வெளிப்புற உடலியக்கத்துக்கான மூளையின் நடவடிக்கைகளை வெளிப்புற உறுப்புகளுக்கு கொண்டு சேர்க்கிறது. யோகமுத்திராவின் மேலும் சில பலன்கள் உடல் முழுமைக்கும் இரத்த ஓட்டத்தை சீராக செலுத்துகிறது. நுரையீரலை பலப்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. கழுத்து மற்றும் முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது. குண்டலினி சக்தி மேலெழும்பச் […]

Yoga Pose for Day 28 – Reverse Table Top Pose (Ardha Purvottanasana)

அர்த்த பூர்வோத்தானாசனம் என்னும் இந்த ஆசனத்தின் வடமொழி பெயரில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘பூர்வ’ என்றால் ‘கிழக்கு’, ‘உத்’ என்றால் ‘தீவிரம்’ (intense), ‘தான்’ என்றால் ‘நீட்டுவது’ (to stretch), ‘ஆசனம்’ என்றால் ‘நிலை’; அதாவது, பாதி கிழக்கு பகுதியை தீவிரமாக நீட்டும் நிலை. இந்த நிலையில் பார்ப்பதற்கு, ஒரு மேசை போலத்தான் இருக்கும். ஆங்கிலத்தில் Reverse Table என்பது சரியான பொருத்தமாகத் தெரியவில்லை. இந்த ஆசனத்தில் நிற்பது மணிக்கட்டு, கை, தோள், கால், தொடை என […]

Yoga Pose for Day 15 – Sphinx Pose (Salamba Bhujangasana)

பாலாசனத்துக்கு மாற்று சலம்ப புஜங்காசனம்  ஆகும். பாலாசனம் என்பது குழந்தை குப்புறப் படுத்த நிலை என்று பார்த்தோம். சலம்ப புஜங்காசனம் என்பது முழங்கைகளைத் தரையில் தாங்கி மேலுடலை உயர்த்துவது. புஜங்காசனத்தை பாதி நிலையில் செய்வது போல் இருக்கும். ‘சலம்பம்’ என்றால் ‘ஆதரவு’ (support). ‘புஜங்க’ என்றால் ‘பாம்பு’. பாதி அளவு பாம்பு படம் எடுத்தது போலுள்ள நிலை என்பார்கள். ஆனால், சரியாகச் சொன்னால், படுத்த நிலையிலுள்ள குழந்தை படுத்து தவழ்வது இந்த நிலையில்தான். முழங்கைகளை ஊன்றி, மார்பினால் […]

English (UK)