உடல் மன ஆரோக்கியம்

கொரில்லா கற்றுத் தரும் பாடம்

“கொரில்லா” என்கிற வார்த்தையை கேட்டதுமே நம்மில் பலரது மனதிலும் உடனடியாக தோன்றுவது பலம், மூர்க்கத்தனம் அல்லது ஆபத்து. ஆனால், வனத்தில் இருக்கும் கொரில்லாக்களை நாம் கூர்ந்து கவனித்தோமானால், அவை மென்மையான குணம் கொண்டவை என்பதை அறிந்து கொள்ள முடியும். IUCN தரவரிசைப்படி, கொரில்லா, endangered species-ஆக, அதாவது, அழியும் நிலையில் இருக்கும் விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உலகின் மிகவும் வலிமையான விலங்குகளில் ஒன்று கொரில்லா. ஆனாலும், இவை உலகின் மென்மையான விலங்குகளிலும் ஒன்றாகும்.

சில்வர்பேக் கொரில்லா (Silverback gorilla) அச்சுறுத்தலால் வழிநடத்துவது கிடையாது. ஆளுமை நிறைந்த தன் இருப்பினாலேயே வழிநடத்தும் தன்மை கொண்டது.

ஒரு கொரில்லா குடும்பத்திற்குள்:

  • பூசல்கள் மிகவும் அபூர்வமானது.
  • குட்டிகள் அக்கறையுடனும் பொறுமையுடனும் பாதுகாக்கப்படும்.
  • பலப்பிரயோகம் மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படும்.

உண்மையான பலம் வன்முறையில் இல்லை என்பதற்கான சிறந்த உதாரணமாக விளங்குகிறது கொரில்லா.

பாதுகாக்கும் வலிமை

கொரில்லாக்கள் நெருக்கமான குடும்பப் பிணைப்பை கொண்டவை.

அவை ஒன்றோடொன்று சப்தங்கள், சைகைகள் மற்றும் உடல் மொழியின் மூலமாக தங்களுக்குள தொடர்பு கொள்ளும். பெரும்பாலான நேரங்களில், அவை மோதலைத் தவிர்க்கவே விரும்பும்.

கொரில்லாக்கள் மார்பில் அடித்துக் கொள்வது மூர்க்கத்தனத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது; ஆனால், உண்மையில் அது ஒரு எச்சரிக்கைதான் – வன்முறையைத் தவிர்ப்பது நல்லது என்கிற அறிவுறுத்தல்தான்.

வலிமை உள்ள இடத்தில் பரிவும் நிறைந்திருக்க முடியும் என்பதற்கான சிறந்த அடையாளம் கொரில்லா. 

கொரில்லாக்கள் ஏன் அழியும் அபாயத்தில் இருக்கின்றன?

IUCN-ன் அறிக்கையின்படி, உலகில் அழியும் அபாயத்தில் இருக்கக் கூடிய விலங்குகளில் கொரில்லாவும் ஒன்று.

கொரில்லாக்களின் இன்றைய நிலைக்கான காரணங்கள்:

  • வாழ்விடம் அழிந்து போதல்
  • சட்டத்துக்குப் புறம்பான வனவிலங்கு வணிகம்
  • மனிதர்களின் பயம் மற்றும் தெளிவான புரிதல் இல்லாமை

 

இயல்பில் கொரில்லாக்கள் மூர்க்கக் குணம் கொண்டவை அல்ல – மனிதர்களின் தவறான நடவடிக்கைகளே அவற்றை மூர்க்கத்தனத்தை மேற்கொள்ள வைக்கின்றன.

கொரில்லாக்களைப் பற்றிய எங்களின் காணொளிக்கான இணைப்பு:

கொரில்லாக்கள் காடுகளின் சமநிலையைப் பாதுகாக்க உதவுகின்றன.

கொரில்லாக்களைப் பாதுகாப்போம். காடுகளை மீட்போம்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.
எங்களுடைய பிற வலைப்பக்கம் மற்றும் YouTube channel-கள்:
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
http://www.youtube.com/@letnaturelive_YT

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்