உடல் மன ஆரோக்கியம்
Share on facebook
Share on twitter

எங்களைப் பற்றி

வணக்கம். எங்களின் தளத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு எங்களின் நன்றியும் வாழ்த்துகளும். 

yogaaatral.com-ல் பதிவுகளை உருவாக்கும் என் கணவர் தமிழரசு மற்றும் இரமா தமிழரசு ஆகிய நாங்கள் இருவரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் இருந்து வந்திருக்கிறோம். 

தமிழரசு, தொடு சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வருகிறார். மேலும் அவர் கராத்தே, குங்ஃபூ, ஜுஜுட்சு ஆகிய தற்காப்புக் கலைகளில் தேர்ச்சிப் பெற்றிருக்கிறார். தாய்ச்சி பயிற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். 

yogaaatral-லில் உள்ள பல பதிவுகளிலும் என்னைப் பற்றிய ஆசிரியர் குறிப்பு வருவதால் அதைத் தாண்டி மீண்டும் ஒரு முறை என்னைப் பற்றி எழுதுவதைத் தவிர்க்க விரும்புகிறேன்.

யோகப் பயிற்சிக்கான தளமாக இத்தளத்தைத் தொடங்க நினைத்தாலும், இதற்கு வனப்பு என்ற பெயரைத் திட்டமிட்டவுடன், உடல், மன வனப்புக்கான  தளமாக இதை உருவாக்க விரும்பினோம்.  உடல், மன வனப்பிற்காகப் பல கோணங்களையும் கருத்தில் கொண்டு எங்களால் இயன்ற வரையில் தகவல்களைப் பகிர தொடர் முயற்சி செய்கிறோம். 

இந்தக் கட்டத்தில் முக்கியமான இருவருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் freelance எழுத்துப் பணியில் மிகத் தீவிரமாக பணி செய்து வந்த காலத்தில் எனக்கு பல்வேறு தலைப்புகளில் எழுத வாய்ப்புத் தந்த என்னுடைய இரண்டு clients-ன் தொழில்நுட்ப உதவியால்தான் இத்தளத்தை உருவாக்க முடிந்தது. அவர்கள் இருவருக்கும் என்  மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • Herbal Facial Glow

  • Deal of the Day

  • தமிழ்