உடல் மன ஆரோக்கியம்

உயிர் காக்கும் சக்கரங்கள்

Share on facebook
Share on twitter

இது வரை பார்த்த பல ஆசனங்களிலும் சக்கரங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இன்று சக்கரங்கள் என்றால் என்ன, உடலில் உள்ள சக்கரங்கள் எவ்வளவு மற்றும் அவை உடலில் எங்கே இருக்கின்றன, அவற்றின் சுரப்புகள் எது, அவற்றின் பணிகள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

சக்கரங்கள் ஏழு அல்ல – எட்டு

பொதுவாக, சக்கரங்கள் என்பது உடலின் ஆற்றல் மையம் என்றும் உடலில் பல சக்கரங்கள் உண்டு எனவும் முக்கிய சக்கரங்கள் ஏழு என்றும் அவை ஒவ்வொன்றும் ஒரு நாளமில்லா சுரப்பியோடு தொடர்புடையது என்றும் பரவலாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலரின் திருமந்திரத்தில் முக்கிய சக்கரங்களாக எட்டு சக்கரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சக்கரங்கள் என்பது நாளமில்லா சுரப்புகள் என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

நாளமில்லா சுரப்புகளும் உயிர் வளர்ப்பும்

நாளமில்லா சுரப்புகள் தாங்கள் சுரக்கும் ஹார்மோன்களை நேரடியாக இரத்தத்தில் செலுத்துகிறது. இதன் விளைவாக ஹார்மோன்கள் உடலில் உள்ள பாகங்களில் உள்ள அணுக்களை அடைகின்றன. நாளமில்லா சுரப்புகளின் சீரான இயக்கமே உடல் மன நலத்துக்கான அடிப்படை.

நாளமில்லா சுரப்புகள் யாவை

நாளமில்லா சுரப்புகள் மற்றும் அவற்றின் முக்கியப் பணிகள்:

பீனியல் சுரப்பு

தூக்கம் விழிப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்துகிறது

ஹைப்போதலாமஸ் சுரப்பு

உடல் வெப்பம், பசி மற்றும் தூக்கம் விழிப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்தல்

பிட்யூட்டரி சுரப்பு

உடல் வளர்ச்சி மற்றும் மறு உற்பத்திக்கான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. மூளை நலனைப் பாதுகாக்கிறது. பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது. மிக முக்கியமாக அனைத்து சுரப்பிகளையும் ஒழுங்குப்படுத்துகிறது.

தைராய்டு மற்றும் பாராதைராய்டு சுரப்புகள்

தைராய்டு சுரப்பு உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் அவசியமானது. உடலின் வெப்பத்தை ஒழுங்குப்படுத்துகிறது. மேலும் உடலின் ஆற்றலைப் பராமரிக்கிறது. பாராதைராய்டு சுரப்பு எலும்புகளிலும் இரத்தத்திலும் கால்சியம் அளவைப் பராமரிக்கிறது

தைமஸ் சுரப்பு

இச்சுரப்பு குழந்தைகள் பருவம் அடையும் வரை செயல்பட்டுக் கொண்டிருக்கும். இது T cell எனப்படும் ஒரு வெள்ளை இரத்த அணுவின் வளர்ச்சிக்கு உதவும் ஹார்மோன்களை சுரக்கிறது.

அட்ரீனல் சுரப்பு

இரத்த அழுத்தம், இருதயத் துடிப்பு மற்றும் சிக்கலான நிலையில் தக்க முறையில் எதிர்வினை ஆற்றுவதற்கான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. உடலின் உப்பு மற்றும் தண்ணீர் அளவுகளைப் பராமரிக்கிறது

கணையம் சுரப்பு

இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது, சீரணத்தை மேம்படுத்துகிறது

பாலியல் சுரப்புகள்

பிறப்பு உறுப்புகள் முழுமைப் பெற உதவுதல், உடலுறவில் நாட்டத்தை ஏற்படுத்துதல்

நாளமில்லா சுரப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளவற்றில் சில:

 • உடல் வெப்பம்
 • வளர்சிதை மாற்றம்
 • உயிர் மறு உற்பத்தி
 • பசி
 • இருதயத் துடிப்பு, சுவாசம்
 • இரத்த அழுத்தம்
 • உடல் வளர்ச்சி
 • உடலுறவு
 • தூக்கம் விழிப்பு சுழற்சி
 • சீரான மனநிலை, அதாவது மன அழுத்தம் தவிர்த்தல்

ட்டு சக்கரங்கள்

நம் உடலில் உள்ள எட்டு முக்கிய சக்கரங்கள் பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பற்றி பார்ப்போம்:

சக்கரங்கள்

சுரப்புகள்

இடம்

மூலாதாரம் பாலியல் சுரப்புகள் முதுகுத்தண்டின் கீழ்
சுவாதிட்டானம் அட்ரீனல் சுரப்பு தொப்புளிலிருந்து 3 அங்குலம் கீழே
மணிப்பூரகம் கணையம் சுரப்பு தொப்புள் மற்றும் மார்பெலும்புக்கு இடையில் உள்ள பகுதி
அனாகதம் தைமஸ் சுரப்பு மார்பு மத்தி
விசுத்தி தைராய்டு மற்றும் பாராதைராய்டு சுரப்புகள் தொண்டை
ஆக்ஞா பிட்யூட்டரி சுரப்பு புருவமத்திக்கு கீழ்
குரு ஹைப்போதலாமஸ் சுரப்பு புருவமத்தி
சகஸ்ராரம் பீனியல் சுரப்பு உச்சந்தலை

பொதுவாக ஆக்ஞா சக்கரம் என்பது புருவமத்தியில் இருப்பதாகக் கூறுவர். ஆனால் திருமூலரின் திருமந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஆக்ஞா என்பது புருவமத்திக்கு கீழும் குரு என்னும் சக்கரம் புருவமத்தியிலும் அமைந்திருக்கிறது.

மூலாதார சக்கரத்தின் பலன்களும் அதை இயங்க வைக்கும் முறைகளும்

மூலாதார சக்கரம் பற்றிய விரிவான தகவல்கள், அதன் பலன்கள், அது அடைப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் மற்றும் அதை எப்படி நன்றாக இயங்க வைப்பது குறித்த பதிவைப் பார்க்க, இந்தப்

Read More »

சுவாதிட்டான சக்கரத்தின் பலன்களும் சுவாதிட்டான சக்கரத்தை இயங்க வைக்கும் முறைகளும்

சுவாதிட்டான சக்கரம் பற்றிய விரிவான தகவல்கள், அதன் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளவும் சுவாதிட்டான சக்கரம் அடைப்பட்டிருக்கிறதா என்று கண்டறியவும் அச்சக்கரத்தின் செயல்பாட்டை தூண்டுவதற்கான வழிமுறைகளையும் அறிந்து

Read More »

மணிப்பூரக சக்கரத்தின் பலன்களும் மணிப்பூரக சக்கரத்தை இயங்க வைக்கும் முறைகளும்

மணிப்பூரக சக்கரத்தின் பலன்கள் பற்றியும், மணிப்பூரக சக்கரத்தைச் சீராக இயங்க வைக்கும் முறைகள் பற்றியும் பார்க்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

Read More »

அனாகத சக்கரத்தின் பலன்களும் அனாகத சக்கரத்தை இயங்க வைக்கும் முறைகளும்

அனாகத சக்கரம் பற்றிய விரிவான தகவல்கள், அதன் பலன்கள் மற்றும் அனாகத சக்கரத்தைச் சீராக இயங்க வைக்கும் முறைகள் பற்றித் தெரிந்து கொள்ள, இந்தப் பக்கத்துக்குச் செல்லவும்.

Read More »

விசுத்தி சக்கரத்தின் பலன்களும் விசுத்தி சக்கரத்தை இயங்க வைக்கும் முறைகளும்

விசுத்தி சக்கரத்தின் பலன்களையும் விசுத்தி சக்கரத்தைச் சீராக இயங்க வைக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்ள, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

Read More »

ஆக்ஞா மற்றும் குரு சக்கரங்களுக்கான பலன்களும் அவற்றை இயங்க வைக்கும் முறைகளும்

ஆக்ஞா மற்றும் குரு சக்கரங்களுக்கான பலன்களும் அவற்றை இயங்க வைக்கும் முறைகளும் பற்றி அறிய, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

Read More »

சஹஸ்ரார சக்கரத்தின் பலன்கள்

Table of Contents மனித உடலின் முக்கிய எட்டு சக்கரங்களில் எட்டாவதாக உள்ளது சஹஸ்ரார சக்கரம் (சக்கரங்கள் ஏழு அல்ல எட்டு பதிவைப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச்

Read More »
 • தேடல்
 • Subscribe

  * indicates required
 • Yoga Mats

 • தமிழ்