உலகம் முழுவதிலும் பல்வேறு நாகரிங்களாலும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முத்திரை பயிற்சி செய்யப்பட்டு வந்திருக்கிறது. கை விரல்களினால் செய்யப்படும் முத்திரைகள் குறித்து பல்வேறு புராதனமான நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
அய்ந்து மூலகங்களும் முத்திரைகளும்
பிரபஞ்சத்தில் இருக்கும் அய்ந்து மூலகங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவையே மனித உடலிலும் உள்ளன; மனித உடல், மனம் ஆகியவற்றை இயக்கவும் செய்கின்றன. உடல், மன நலத்திற்கு இந்த அய்ந்து மூலகங்களும் சீரான அளவில் இருத்தல் இன்றியமையாததாகும்.
மனித உடலின் ஒவ்வொரு விரலோடும் ஒவ்வொரு மூலகம் தொடர்புடையது.
பெருவிரல் – நெருப்பு
சுட்டு விரல் – காற்று
நடு விரல் – ஆகாயம்
மோதிர விரல் – நிலம்
நீர் – சிறு விரல்
குறிப்பிட்ட விரல்களை குறிப்பிட்ட முறைகளில் சேர்க்கும் பொழுது அவ்விரல்களோடு தொடர்புடைய மூலகத்தின் இயக்கம் சீராகிறது.
முத்திரைகள் செய்வதால் ஏற்படும் பலன்கள்
ஒவ்வொரு முத்திரைக்கும் குறிப்பிட்ட சில பலன்கள் உண்டு. அவ்வாறான முத்திரைகளைப் பயிலும்போது ஏற்படும் நன்மைகளில் சில:
- நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது
- உடலின் மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமன்படுத்துகிறது
- நுரையீரல் நலனைப் பாதுகாக்கிறது
- இருதயத்தின் செயல்பாடுகளைச் சீராக்குகிறது
- மூளையில் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
- நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது
- பிராண ஆற்றலை வளர்க்கிறது
- சருமத்தைப் பாதுகாக்கிறது
- சீரண இயக்கத்தை சரி செய்கிறது
- தூக்கமின்மையைப் போக்குகிறது
- அமைதியின்மையைப் போக்குகிறது
மேற்கூறப்பட்டுள்ள பலன்களையும் மேலும் பல பலன்களையும் தரக் கூடிய முத்திரைப் பயிற்சிகளை வரும் நாட்களில் பார்க்கலாம்.
முத்திரை குறித்த கேள்வி பதில்
பல்வேறு முத்திரைகளின் செய்முறை மற்றும் பலன்கள் குறித்துப் பார்ப்பதற்கு முன், முத்திரை குறித்த சில முக்கியமான கேள்விகளையும் அவற்றிற்கான விடைகளையும் பார்க்கலாம்.

தூய்மைப்படுத்தும் முத்திரை
முத்திரைப் பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் செய்ய வேண்டிய முதல் முத்திரை தூய்மைப்படுத்தும் முத்திரையாகும். இம்முத்திரையை ஒரு வாரத்திலிருந்து 10 நாட்கள் வரை