உடல் மன ஆரோக்கியம்

அசீரணத்தைப் போக்கும் 6 சிறந்த முத்திரைகள்

முந்தைய பதிவொன்றில் அசீரணத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள் குறித்து பார்த்திருந்தோம். இன்றைய பதிவில் அசீரணத்தைப் போக்கும் முத்திரைகள் குறித்துப் பார்க்கலாம்.

அசீரணத்தைப் போக்கும் முத்திரைகள்

செரிமானக் கோளாறுகளைப் போக்கி சீரணத்தை மேம்படுத்தும் முத்திரைகளில் முக்கியமான சில:

1) அபான முத்திரை

செய்முறை

 • பதுமாசனம், வஜ்ஜிராசனம் போன்ற தியான ஆசனங்களில் ஒன்றில் அமரவும்.
 • இரண்டு கை விரல்களையும் நீட்டிக் கொள்ளவும்.
 • பெருவிரலை வளைத்து, நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகளை  பெருவிரல் நுனியோடு சேர்த்து வைக்கவும்.
 • சுட்டும் விரல் மற்றும் சிறுவிரலை நீட்டி வைக்கவும். 
 • 15 நிமிடங்கள் அபான முத்திரையில் இருக்கவும். 

2) பிருத்வி முத்திரை

செய்முறை

 • பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
 • மோதிர விரல் மற்றும் பெருவிரலின் நுனிகளை ஒன்றாக சேர்த்து வைக்கவும்.
 • மீதமுள்ள மூன்று விரல்களையும் நீட்டியவாறு வைக்கவும்.
 • இரண்டு கைகளாலும் ஒரே நேரத்தில் பயிலவும்.
 • 30 முதல் 45 நிமிடங்கள் வரை இம்முத்திரையில் இருக்கவும்.

3) சூரிய முத்திரை

செய்முறை

 • பதுமாசனம், வஜ்ஜிராசனம் போன்ற தியான ஆசனங்களில் ஒன்றில் அமரவும்.
 • கை விரல்களை நீட்டிக் கொள்ளவும்.
 • மோதிர விரலை மடித்து அதன் நுனிப்பகுதியை பெருவிரலின் கீழ் உள்ள மேட்டின் மீது வைக்கவும்.
 • பெருவிரலை மடித்து, மடித்து வைத்திருக்கும் மோதிர விரலின் மீது மெதுவான அழுத்தத்தில் வைக்கவும்.
 • மற்ற மூன்று விரல்களையும் நீட்டியவாறே வைக்கவும்.
 • முத்திரை மீது கவனம் வைக்கவும். சீரான மூச்சில் இருக்கவும்.
குறிப்பு

சுரம், அதிகக் களைப்பு உள்ள நேரங்களில் சூரிய முத்திரையைப் பயில்வதைத் தவிர்ப்பது நல்லது. கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலங்களில் சூரிய முத்திரையைத் தவிர்ப்பது நல்லது.

4) லிங்க முத்திரை

செய்முறை

 • பதுமாசனம், வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். 
 • இரண்டு உள்ளங்கைகளையும் மார்புக்கு நேராக வணக்கம் சொல்வது போல் சேர்த்து வைக்கவும். இரண்டு கைவிரல்களையும் ஒன்றோடு ஒன்று பிணைக்கவும். 
 • இடது கை பெருவிரலை மட்டும் உயர்த்தி வலது கை பெருவிரல் மற்றும் சுட்டும் விரலாலே அதைச் சுற்றிப் பிடிக்கவும். 
 • கண்களை மூடியவாறு முத்திரையில் கவனம் வைக்கவும். 
 • 30 நிமிடங்களுக்கு இம்முத்திரையில் இருக்கவும். 

5) சுரபி முத்திரை

செய்முறை

 • இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக சேர்த்து வைக்கவும்.
 • இடது கையின் சிறுவிரல் நுனியை வலது கை மோதிர விரல் நுனியோடு சேர்த்து வைக்கவும்.
 • வலது கை சிறுவிரல் நுனியை இடது கை மோதிர விரலோடு சேர்த்து வைக்கவும்.
 • இடது கை நடு விரல் நுனியை வலது கை சுட்டும் விரல் நுனியோடு சேர்த்து வைக்கவும்.
 • வலது கை நடு விரல் நுனியை இடது கை சுட்டும் விரல் நுனியோடு சேர்த்து வைக்கவும்.

சூரிய உதயம் அல்லது சூரிய அத்தமன நேரத்தில் 15 முதல் 45 நிமிடங்கள் வரை பயிலும் போது பலன்கள் கூடுதலாகக் கிடைக்கும்.

6) பூஷன் முத்திரை

மற்ற முத்திரைகளைப் போல் அல்லாமல் பூஷன் முத்திரையை இரண்டு கைகளால் இரண்டு விதமாகச் செய்ய வேண்டும்.

செய்முறை

 • வலது கையின் சுட்டும் விரல், நடு விரல் மற்றும் பெருவிரல் நுனிகளை ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும். இது வியான முத்திரையாகும்.
 • அதே சமயம், இடது கையின் நடுவிரல், மோதிர விரல் மற்றும் பெருவிரல் நுனிகளை ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும். இது அபான முத்திரையாகும். 
 • இவ்விரண்டு முத்திரைகளையும் மேற்கூறியுள்ள விதத்தில் செய்வதே பூஷன் முத்திரையாகும்.

பூஷன் முத்திரையை நாளொன்றுக்கு 20 நிமிடங்கள் வரை செய்யலாம். உணவு அருந்திய பின் இந்த முத்திரையை பழகி வந்தால் செரிமானம் மேம்படும்.

மேற்கூறப்பட்டுள்ள 6 அசீரணத்தைப் போக்கும் முத்திரைகளையும் தொடர்ந்து பழகி வர அசீரணக் கோளாறு நீங்கி செரிமானம் மேம்படும்.

இணையதளத்தில் முத்திரைகள் குறித்த அற்புதமான தகவல்கள் கொண்ட புத்தகங்களைத் தேர்வு செய்ய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

மலச்சிக்கலைப் போக்கும் முத்திரைகள்

முந்தைய பதிவு ஒன்றில் மலச்சிக்கலைப் போக்கும் ஆசனங்கள் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று மலச்சிக்கலைப் போக்கும் முத்திரைகள் குறித்துப் பார்க்கலாம். மலச்சிக்கலைப் போக்கும் முத்திரைகள் மலச்சிக்கலைப் போக்கும் முக்கிய முத்திரைகளில் சில: 1) சூரிய முத்திரை

Read More »

கழுத்து வலியைப் போக்கும் முத்திரைகள்

முந்தைய பதிவு ஒன்றில் கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள் பற்றிப் பார்த்தோம். கழுத்து வலியைப் போக்கும் முத்திரைகளில் சிலவற்றைப் பற்றி இன்று பார்க்கலாம். முத்திரைகள் எவ்வாறு கழுத்து வலியைப் போக்குகின்றன? குறிப்பிட்ட முத்திரைகள் கழுத்து

Read More »

நுரையீரல்களைப் பலப்படுத்தும் முத்திரைகள்

நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பல்வேறு அருமையான கலைகளில் ஒன்று முத்திரைக் கலை. உலகளவில் பல்வேறு கலாச்சாரங்களால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயின்று வரப்படும் முத்திரைகளில் நுரையீரல்களைப் பலப்படுத்தும் முத்திரைகள் பற்றிப் பார்க்கலாம். அதற்கான

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
 • தமிழ்