உடல் மன ஆரோக்கியம்

தாய் சீயின் அற்புத பலன்கள்

பண்டைய சீனாவில் தோன்றிய தாய் சீ ஒரு அற்புதமான உடல்-மன பயிற்சியாகும்.  இது இயக்கத்தோடு கூடிய தியானம் (Moving meditation) என்றும் அழைக்கப்படுகிறது. தாய் சீ, சண்டைக் கலையாகத் தோன்றி, காலங்கள் செல்லச் செல்ல சிறந்த உடல், மன நலத்துக்கான பயிற்சியாகத் தற்காலத்தில் பயிலப்பட்டு வருகிறது.

தாய் சீ பயில்வதால் ஏற்படும் நன்மைகள்

தாய் சீ பயில்வதால் ஏற்படும் நன்மைகள் பலவும் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. தாய் சீ பயிற்சியின் முக்கிய பலன்களில் சில:

 • உடலின் சமநிலையை மேம்படுத்துகிறது.
 • உடல், மன ஒருங்கிணைப்பை செழுமைப்படுத்துகிறது.
 • உடலின் நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது.
 • நினைவாற்றலை வளர்க்கிறது; குறிப்பாக, வயது மூத்தவர்களுக்கு ஏற்படக் கூடிய நினைவாற்றல் குறைவைத் தவிர்க்க உதவுகிறது.
 • அதிக இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
 • இருதய நலனை மேம்படுத்துகிறது.
 • அதிக உடல் எடையைக் குறைக்க உதவுவது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மத்திய வயதுடையவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் மத்தியப் பகுதியிலுள்ள அதிக தசையைக் குறைப்பதாக ஆய்வு மூலம் நிரூபணமாகியுள்ளது.
 • உடலின் நெகிழ்வுத்தன்மை மேம்படுகிறது.
 • மூட்டழற்சியினால் உண்டாகும் வலியைப் போக்க உதவுவதாய் ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.
 • தசைகள் வலுவாகின்றன.
 • உடல் சோர்வைப் போக்குகிறது.
 • ஆரோக்கியமான உறக்கத்தைப் பெற உதவுவதாக ஆய்வு அறிவிக்கிறது.
 • கால்களை வலுவாக்குகிறது.
 • எலும்புகளைப் பலப்படுத்துகிறது.
 • வயதில் மூத்தவர்கள் தொடர்ந்து தாய் சீயைப் பயில்வதால், கீழே விழுதல், எலும்பு முறிதல் ஆகியவை பெருமளவில் தவிர்க்கப்படுவதாய் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. பார்கின்சன்ஸ் நோய் உள்ளவர்கள் தாய் சீயைப் பயில்வதால் கீழே விழும் ஆபத்து குறைவதாக ஆய்வு மூலம் நிரூபணமாகியுள்ளது.
 • தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
 • மன ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கிறது
 • மன அழுத்தம் எனப்படும் உணர்வுகளின் அழுத்தத்தைப் போக்குவது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தாய் சீ கலையைக் கற்க  விரும்புவோர் எங்களை அணுகலாம்: 

S.R. Thamizharasu,

HEALING TAI CHI

9841770302 / 7092597732

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • Subscribe

  * indicates required
 • தேடல்
 • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
 • தமிழ்