உடல் மன ஆரோக்கியம்

உடற்பயிற்சி

Share on facebook
Share on twitter
யோகாசனம் ஒரு நுணுக்கமான, விரிவான, ஆழமான கலை. சித்தர்கள் உருவாக்கிய 84 லட்சம் ஆசனங்களில் இன்றைய காலகட்டத்தில் நம்மிடம் இருப்பது சில நூறு ஆசனங்களே. அவற்றிலும் குறிப்பிட்ட சில ஆசனங்களை தொடர்ந்து செய்து வந்தாலே நாம் நலமான வாழ்க்கை வாழலாம். யோகக் கலையின் பல்வேறு சிறப்பு அம்சங்களில் ஒன்று அதன் பன்முகத்தன்மை. பயிற்சி செய்பவரின் உடலுக்கேற்றவாறு ஆசனத்தை எளிமைப்படுத்தவோ கடினப்படுத்தவோ முடியும். அந்த பன்முகத்தன்மையை எப்படி உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தப் போகிறோம் என்பதை இப்போது பார்க்க போகிறோம். ஆசனம் செய்வதே உடற்பயிற்சிதானே என்று நீங்கள் கேட்கலாம். ஆசனம் செய்வது கண்டிப்பாக உடற்பயிற்சிதான். ஆனால் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளில் முக்கியமானது, ஒவ்வொரு ஆசன்த்தின் போதும் குறிப்பிட்ட நேரத்துக்கு அந்த ஆசனத்தில் இருக்க வேண்டியிருக்கும். ஆனால், உடற்பயிற்சியில் நீங்கள் தொடர்ந்து அசைவில் (movement-ல்) இருப்பீர்கள். வாரத்தில் அய்ந்து நாட்கள் ஆசனம், ஒரு நாள் உடற்பயிற்சி, ஒரு நாள் ஓய்வு என்று அமைத்துக் கொள்வது சிறப்பாக இருக்கும். இந்த உடற்பயிற்சி பகுதியில் நீங்கள் இதுவரை ‘இன்று ஒரு ஆசனம்’ பகுதியில் பார்த்து வந்த முதல் 10 ஆசனங்களை எப்படி உடற்பயிற்சியாக movement-ல் செய்வது என்று பார்க்கலாம். இதை இரண்டு அல்லது மூன்று முறை செய்யவும்.  
  • தேடல்
  • Subscribe

    * indicates required
  • Yoga Mats

  • தமிழ்