ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு யோகா எவ்வாறு உதவுகிறது என்பதை ஆய்வுகளின் அடிப்படையில் இக்கட்டுரை விளக்குகிறது.
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான செல்வம். சில குழந்தைகளின் உலகத்தைப் புரிந்து கொள்ள சிறிது கூடுதலாக நாமே நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். அப்படியான ஒரு நிலைதான் ஆட்டிசம் கொண்ட குழந்தைகளிடம் நாம் எடுக்க வேண்டும். அவர்கள் பேசும் மொழி, உணரும் வழி, அணுகும் பாணி—அவை அனைத்தும் தனித்துவத் தன்மை கொண்டவை.
ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு யோகப்பயிற்சி உதவுவது ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையில், அந்தச் சிறப்பு குழந்தைகளுக்கு யோகா எப்படி அமைதியும் சமநிலையும் தரும் என்பதைப் பகிர்கிறோம்.
Autism Spectrum Disorder (ASD) என்பது தொடர்பு கொள்ளும் திறன், சமூக உந்துதல் மற்றும் நடத்தை போன்றவைகளை பாதிக்கும் வளர்ச்சி சிக்கலாகும். இதற்கான முழு நிவாரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் யோகா போன்று பயிற்சிகள் ஆட்டிஸம் உள்ளவர்களுக்கு அமைதி மற்றும் சமநிலையை ஏற்படுத்த உதவுவதோடு, அவர்களின் வாழ்நிலையை மேம்படுத்தவும் உதவுகிறது.
ஆட்டிஸத்திற்கான யோகா – ஆய்வுகள் கூறுவது என்ன?
ஆட்டிஸத்திற்கு யோகா எவ்வாறு உதவுகிறது என்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
1. மனஅழுத்தம் குறைகிறது, நிம்மதி அதிகரிக்கிறது
ஆட்டிஸம் உள்ள 13 முதல் 19 வயது உள்ள வர்களுக்கு, யோகப்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைத்து ஆழ்ந்த உறக்கத்தைத் தருவது 2018-ல் Complementary Therapies in Medicine-ன் ஆய்வறிக்கை மூலம் தெரிய வருகிறது.
2. உணர்ச்சி மற்றும் நடத்தை கட்டுப்பாடு மேம்படுகிறது
பள்ளிக்கூட குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வு குறித்து Journal of Child and Family Studies வெளியிட்ட அறிக்கையில் மிகை இயக்கம், ஆக்ரோஷமான தன்மை மற்றும் பிறரிடமிருந்து விலகியிருத்தல் ஆகியவற்றில் யோகப்பயிற்சி நல்ல மாற்றம் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறது.
3. உடல் இயக்கத் திறன்களும் தன்னுணர்வும் மேம்படுகின்றன
Autism Research and Treatment வெளியிட்ட 2011 ஆய்வு முடிவு மூலம், யோகா குழந்தைகளின் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதை அறிய முடிகிறது.
4. உணர்திறனில் முன்னேற்றம் ஏற்படுகிறது
யோகா, ஆழ்ந்த சுவாசம் மற்றும் உடல் இயக்கத்தின் மூலம் உணர்வுக் கட்டுப்பாடுகளை மேம்படுத்தி உணர்திறனிலும் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்குகிறது.
ஆட்டிசம் உள்ளவர்களுக்கு யோகா எப்படி உதவுகிறது?
வழக்கமான கட்டமைப்பு கொண்ட பயிற்சி தரும் பாதுகாப்பு: ஒரே மாதிரியான, சீரான பயிற்சி, ஆட்டிசம் உள்ளவர்களுக்குப் பாதுகாப்பான உணர்வை வழங்குகிறது.
மொழி சார்ந்தில்லாத பயிற்சி: பேசுவதற்கான ஈடுபாடு காட்டாத அல்லது குறைவாகப் பேசும் ஆட்டிஸம் உள்ளவர்களுக்கு பேச்சிற்குத் தேவையில்லாத யோகப்பயிற்சி ஈடுபாட்டை உண்டாக்குகிறது.
கவன மேம்பாடு: யோகப்பயிற்சி கவனத்தை மேம்படுத்துகிறது.
உடல் விழிப்புணர்வு: தன்னுடல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுகிறது.
உணர்ச்சி சமநிலை: சுவாச பயிற்சிகள் மற்றும் யோகநித்திரை போன்ற பயிற்சிகள் மன அமைதியை ஏற்படுத்துகின்றன.
ஆட்டிஸத்திற்கான யோகா
ஆய்வுகளின் அறிக்கைப்படி ஆட்டிஸத்திற்கான யோகா பயிற்சிகள் என்னவென்று பார்ப்போம்.
1) தாடாசனம்
சமநிலையை மேம்படுத்தவும், ஸ்திரத்தன்மை மற்றும் உணர்திறனை ஊக்குவிக்கவும் தாடாசனம் உதவுகிறது.
தாடாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றிப் பார்க்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
2) விருக்ஷாசனம்
விருக்ஷாசனம் சமநிலையை மேம்படுத்த உதவுகிறது.
விருக்ஷாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
3) பஸ்சிமோத்தானாசனம்
உணர்வுகளை அமைதிப்படுத்தவும் கவனத்தை மேம்படுத்தவும் பஸ்சிமோத்தானாசனம் உதவுகிறது.
பஸ்சிமோத்தானசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
4) பத்த கோணாசனம்
பத்த கோணாசனம் இடுப்பிற்கு வலு சேர்க்கிறது. மனதை அமைதிப்படுத்தவும் இந்த ஆசனம் உதவுகிறது.
பத்த கோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
5) மர்ஜரியாசனம் – பிடிலாசனம்
மர்ஜரியாசனம் – பிடிலாசனம் தொடர் யோகாவைப் பயிலும் போது மனம் அமைதி பெறுகிறது. உடல்-மனம் ஒருங்கிணைகிறது.
மர்ஜரியாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
பிடிலாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
6) புஜங்காசனம்
மன அமைதியைத் தூண்டும் புஜங்காசனம் நோய் எதிர்ப்புத் திறனையும் மேம்படுத்துகிறது.
புஜங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
7) பாலாசனம்
பாலாசனம் முட்டியைப் பலப்படுத்தும் அருமையான ஆசனமாகும். இந்த ஆசனம், பதட்டத்தைப் போக்கி மனதில் அமைதியை ஏற்படுத்துகிறது. தூக்கமின்மையை சரி செய்கிறது.
பாலாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
8) சேதுபந்தாசனம்
சேதுபந்தாசனம், தொடர்பாடல் திறன் மற்றும் படைப்புத் திறனை வளர்க்கிறது. தலைவலியைப் போக்கவும், கால் சோர்வைப் போக்கவும் உதவுகிறது.
சேதுபந்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
வீட்டிலேயே யோகா பயிற்சி செய்வதற்கான பயனுள்ள யுக்திகள்
குறைந்த சத்தம் மற்றும் அமைதி உள்ள இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
மென்மையான இசை, கதை சொல்லுதல் போன்றவற்றின் மூலம் ஆர்வத்தைத் தூண்டவும்.
ஒரே நேரம், ஒரே கட்டமைப்பில் பழக்கப்படுத்தவும்.
5–10 நிமிடங்கள் மட்டுமே தொடக்கத்தில் போதுமானது.
சிறு வெற்றிகளைக் கொண்டாடுங்கள், அது பெரும் ஊக்கமாக இருக்கும்.
தேர்ச்சி பெற்ற யோகா நிபுணரை அணுகவும். தேர்ந்த யோகா நிபுணர்கள் மூலம் ஆட்டிஸம் உள்ல குழந்தைகளுக்குப் பயிற்சி அளிப்பது சிறப்பானதாய் இருக்கும். சில சமயங்களில், occupational therapy மற்றும் behavioral therapy-யும் சேர்த்து வழங்கப்படும்.
யோகப்பயிற்சி ஆட்டிஸத்தைப் போக்க முடியாது என்றாலும் ஆட்டிஸம் உள்ள குழந்தைகளின் உடல்நலனில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த உதவும். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் யோகா உதவும்.

இரமா தமிழரசு
வணக்கம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். எங்களுடைய மற்ற வலைப்பக்கத்தையும் YouTube channel-களையும் பார்க்குமாறு உங்களை வரவேற்கிறோம்.
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
https://www.youtube.com/@letnaturelive1 .