உடல் மன ஆரோக்கியம்

இன்று ஒரு ஆசனம் (42) – பத்த கோணாசனம் (Bound Angle Pose)

வடமொழியில் ‘பத்த’ என்றால் ‘பிணைக்கப்பட்ட’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். இது ஆங்கிலத்தில் Bound Angle Pose, Butterfly Pose மற்றும் Cobbler’s Pose என்றும் அழைக்கப்படுகிறது.

பத்த கோணாசனம் மூலாதாரம் மற்றும் சுவாதிட்டான சக்கரங்களைத் தூண்டுவதால்  நிலையான தன்மையையும் பாதுகாப்பு உணர்வையும் உருவாக்குகிறது. படைப்புத் திறனும் மன உறுதியும் மேம்படுகின்றன. மேலும் இவ்வாசனம் மனதைப் பக்குவப்படுத்துகிறது.

Bound Angle Pose benefits

பத்த கோணாசனத்தின் மேலும் சில பலன்கள்
  • நுரையீரலைப் பலப்படுத்துகிறது.
  • இடுப்புப் பகுதியை விரிக்கிறது.
  • முதுகுத்தண்டை நீட்சியடைய  வைக்கிறது.
  • நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
  • தொடை மற்றும் முட்டியை நீட்சியடையச் செய்கிறது.
செய்முறை
  • விரிப்பில் அமர்ந்து கொள்ளவும்.
  • இரண்டு கால்களையும் மடக்கி பாதங்களை ஒன்றாக சேர்த்து வைக்கவும். இரண்டு கால் விரல்களையும் கைகளால் பற்றவும். கால் முட்டி வெளிப்புறமாக மடங்கி இருக்க வேண்டும்.
  • மூச்சை உள்ளிழுத்து நேராக அமரவும்.
  • 20 நொடிகளுக்கு இந்த நிலையில் இருக்கவும்.
குறிப்பு

இடுப்புக்கும் முட்டிக்கும் வலு சேர்க்கும் ஆசனமாக இருந்தாலும் தீவிரமான இடுப்புப் பிரச்சினை மற்றும் கடுமையான முட்டி வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

இன்று ஒரு ஆசனம் (43) – பரத்வாஜாசனம் (Bharadvaja’s Twist)

பரத்வாஜாசனம் என்னும் ஆசனம் பரத்வாஜ முனிவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. அமர்ந்த நிலையில் செய்யப்படும் ஆசனமான பரத்வாஜாசனம் மூலாதாரம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்களைத் தூண்டுகிறது. மூலாதாரச் சக்கரத்தின் சீரான இயக்கம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.

Read More »

இன்று ஒரு ஆசனம் (41) – ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் (Upward Seated Angle Pose)

நாம் அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் செய்முறையை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அந்த ஆசனத்தில் ஒரு கால் மட்டும் மேலே நீட்டப்பட்டிருக்கும். ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனத்தில் இரண்டு கால்களுமே பக்கவாட்டில் நீட்டப்பட வேண்டும். வடமொழியில் ‘ஊர்த்துவ’

Read More »

இன்று ஒரு ஆசனம் (40) – தண்டயமன பத்த கோணாசனம் (Balancing Bound Angle Pose)

வடமொழியில் ‘தண்ட’ என்றால் ‘கம்பு’, ‘யமன’ என்ற சொல்லுக்குச் ‘சமாளித்தல்’, ‘கட்டுப்படுத்துதல்’, ‘பத்த’ என்றால் ‘பிணைக்கப்பட்ட’, ‘கோனா’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். இந்த ஆசனத்தில் கால்கள் கைகளால் பிணைக்கப்பட்டு உடல் சற்று சாய்ந்து

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்