உடல் மன ஆரோக்கியம்

பொலிவு

Share on facebook
Share on twitter

பொலிவு என்னும் இப்பகுதி வெறும் அழகைப் பற்றியது அல்ல. புற அழகு என்பது அவரவர் பார்வையை பொறுத்தது; தோற்றப் பொலிவு என்பது நமது ஆரோக்கியத்தின் குறியீடு. பிரகாசமான கண்கள் நமது கல்லீரல் செம்மையாக வேலை செய்வதின், நாம் சரியான அளவு உறங்குவதின், நாம் கண்ணுக்கு நலம் தரும் உணவுகளை உண்ணுவதின் குறியீடு. ஆரோக்கியமான, அடர்ந்த கூந்தல் நமது தைராய்டு சுரப்பு சரியாக இயங்குவதின், நம் உடலில் சுண்ணாம்புச் சத்து போதுமான அளவு இருப்பதின், இரத்தம் சரியான அளவு இருப்பதின், நாம் சமச்சீரான உணவை உண்ணுவதின் குறியீடு. அதுபோல்தான் உதடுகளும்,  அது போல்தான் சருமமும். ஆக, நாம் பொலிவாக இருப்பது, ஆரோக்கியமாக இருப்பதின் குறியீடே. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது மனம் பற்றியது மட்டுமல்ல, நம் உடல் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியம் முகத்தில் தெரியும் என்பதாகும்.

கூந்தல் தொடங்கி கால் நகம் வரை இயற்கை முறையில் பராமரிப்பது பற்றிய குறிப்புகள் இப்பகுதியில் இடம்பெறும். 

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • Herbal Facial Glow

  • Deal of the Day

  • தமிழ்