உடல் மன ஆரோக்கியம்

இயற்கையான முறையில் முகப் பொலிவை அதிகரிக்கும் வழிகள்

Natural remedies for face glow

தோற்றப் பொலிவு என்பது பொதுவாக விளம்பரங்களில் காட்டப்படுவது போல் குறிப்பிட்ட அங்கலட்சணங்களைக் கொண்டிருப்பதும் அல்ல; தோலின் நிறத்திலும் அல்ல.  நலமான உடல் மற்றும் மனமே உண்மையான பொலிவைத் தரும். பின் எதற்காக இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்களையும் முறைகளையும் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே தோன்றும். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தும் சரும நலனைப் பாதுகாப்பதன் மூலம் பொலிவைப் பெறுவதற்கான வழிமுறைகளே.

முகப் பொலிவிற்கான இயற்கை முறைகள்

இதோ உங்களுக்கான சில எளிய குறிப்புகள். வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே இயற்கை முறையில் பொலிவான முகத்தைப் பெறலாம்.

1) மஞ்சள்

மஞ்சள் antioxidant தன்மைகள் கொண்டது. மஞ்சளில் இருக்கும் curcumin, சருமத்தைத் தொய்வில்லாமல் பாதுகாக்கவும், இளமையான தோற்றத்தைத் தரவும் காரணமான collagen உற்பத்தியைத் தூண்டுகிறது.

  • தினசரி குளியலின் போது மஞ்சள் பொடியை தேய்த்துக் குளிக்கவும்.
  • மஞ்சள், எலுமிச்சை சாறு மற்றும் தயிர் ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து முகத்திலும் கை, கால்களிலும் பூசி 20 நிமிடம் கழித்துக் கழுவவும்.
  • மஞ்சளுடன் சிறிது தேன் சேர்த்து நன்றாகக் கலந்து பூசி, காய்ந்த பின் முகத்தைக் கழுவவும்.

மஞ்சளின் மருத்துவ குணங்கள் பற்றி அறிய இங்கே click செய்யவும்.

2) துளசி

துளசி சருமத் துளைகளில் உள்ள அழுக்கைப் போக்கி சருமத்தைப் பிரகாசிக்க வைக்கிறது. வயதாவதால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து சருமத்தைப் பாதுகாத்து புத்துணர்ச்சி அளிக்கிறது. துளசியைப் பின்வருமாறு பயன்படுத்தலாம்.

  • ஒரு கைப்பிடி துளசி இலைகளைக் கழுவி, அரைத்து அதோடு பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் பூசவும். சுமார் 20 நிமிடங்களுக்குப் பின் தண்ணீரால் கழுவ முகம் பிரகாசிக்கும்.
  • சிறிது துளசி இலைகளை எடுத்துக் கழுவி அத்துடன் சிறிது ஓட்மீல் (oatmeal) சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இத்துடன் சிறிது பால் சேர்த்து கலக்கி முகத்தில் பூசவும். சுமார் 20 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவவும்.
  • துளசி இலைகளையும் சிறிது புதினா இலைகளையும் கழுவி நன்றாக அரைக்கவும். இதை முகத்தில் பூசி 15 அல்லது 20 நிமிடங்களுக்குப் பின் முகத்தைக் கழுவவும்.
  • துளசி இலைகளுடன் சிறிது வேப்பிலையை எடுத்து கழுவி அரைத்துக் கொள்ளவும். இத்துடன் சிறிது தேன் அல்லது தயிர் சேர்த்து முகத்தில் பூசி இருபது நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவவும்.

துளசியின் மருத்துவ குணங்கள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

3) இஞ்சி

இஞ்சியில் இருக்கும் gingerol என்கிற antioxidant, சருமத்தை மென்மையாக்கி சரும நிறத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது.

  • ஒரு அங்குல இஞ்சியைத் தோல் நீக்கி சுத்தம் செய்து சாறு எடுக்கவும். அதனுடன் சிறிது ரோஸ்வாட்டர் மற்றும் தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி சுமார் 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும்.
  • இஞ்சிச் சாறுடன் சிறிது தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவவும்.

இஞ்சியின்  மருத்துவ குணங்கள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

4) தேன்

தேன் சருமத்தை வறட்சியிலிருந்து பாதுகாக்கிறது. தேனில் இருக்கும் antioxidants சருமத்திற்கு ஊட்டத்தைத் தருவதோடு இளமையான தோற்றத்தையும் தருகிறது.

  • சிறிது தேனை எடுத்து முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும்.
  • நாட்டுச் சர்க்கரையில் சிறிது தேன் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும்.
5) எலுமிச்சை 

எலுமிச்சையிலிருக்கும் விடமின் C, antioxidant நிறைந்தது. இது சருமத்தில் உள்ள இறந்த அணுக்களை நீக்கி புத்துணர்வு அளிக்கிறது.

  • எலுமிச்சை சாறை முகத்தில் பூசி காய்ந்த பின் கழுவவும்.
  • சிறிது எலுமிச்சை சாறையும் தேனையும் நன்றாகக் கலந்து முகத்தில் பூசி முகம் காய்ந்த பின் கழுவவும்.
6) வாழைப்பழம்

வாழைப்பழம் collagen உற்பத்தியைத் தூண்டுவதனால் சருமம் பாதுகாக்கப்படுவதோடு இளமையான தோற்றத்தையும் தருகிறது.

  • பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதோடு சிறிது தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும்.
  • பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதோடு சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும்.
7) தயிர்

தயிரில் இருக்கும் lactic acid சருமத்தில் உள்ள இறந்த அணுக்களை நீக்கி சருமத்திற்குப் புத்துணர்வு அளிக்கிறது.

  • தயிரோடு சிறிது தேன் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் பூசவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும்.
  • தயிரோடு சிறிது கடலைமாவையும் மஞ்சளையும் கலந்து முகத்தில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும்.
8) சோற்றுக் கற்றாழை

கற்றாழையில் இருக்கும் antioxidant மற்றும் vitamin-கள் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து சருமம் வறட்சியடையாமல் பாதுகாக்கின்றன. சோற்றுக் கற்றாழை collagen உற்பத்தியையும் அதிகரித்து சரும நலனைப் பாதுகாக்கிறது.

  • சோற்றுக் கற்றாழையில் சிறிது தேன் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும்.
  • சோற்றுக் கற்றாழையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் பூசவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும்.
9) ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் இருக்கும் antioxidant-கள் சூரியக்கதிர் தாக்கத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. ஆலிவ் எண்ணெய் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து சருமம் வறட்சியடையாமல் பாதுகாப்பதோடு சருமத்தை இளமையாகவும் வைத்திருக்கிறது.

  • தினம் இரவு உறங்கச் செல்லும் முன் சிறிது ஆலிவ் எண்ணெய்யை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். காலை எழுந்து முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.
  • ஆலிவ் எண்ணெயோடு சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும்.
  • ஆலிவ் எண்ணெயோடு சிறிது தேன் சேர்த்து கலக்கி முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும்.

முகப் பொலிவிற்கு எசன்சியல் எண்ணெய்கள்

முகத்தைப் பிரகாசிக்கச் செய்யும் எசன்சியல் எண்ணெய்கள் சில:

1) Lavender Essential Oil – Lavender essential oil சரும வறட்சியைப் போக்கி சருமத்திற்கு பொலிவூட்டுகிறது.

2) Ylang Ylang Essential Oil – Ylang Ylang essential oil சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. ஈரப்பதத்தைத் தக்க வைத்து சருமத்துக்கு புத்துணர்வு அளிக்கிறது.

3) Sandalwood Essential Oil – Sandalwood essential oil சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து சருமம் வறட்சியடையாமல் பாதுகாக்கிறது.

4) Lemongrass Essential Oil – Lemongrass essential oil சருமத்தின் துளைகளில் உள்ள அழுக்கை நீக்கி சருமத்தைப் பொலிவோடு வைக்கிறது. இது சருமத்தை மென்மையாக வைக்கவும் உதவுகிறது.

5) Myrrh Essential Oil – Myrrh essential oil இரத்த ஓட்டத்தை அதிகரித்து சரும நலனைப் பாதுகாக்கிறது.

எந்த ஒரு எசன்சியல் எண்ணெயைப் பயன்படுத்தும் போதும் அதன் வீரியத்தைக் குறைக்க (dilute) carrier oil கலந்தே பயன்படுத்த வேண்டும்.

இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo-Che1211 என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்