உடல் மன ஆரோக்கியம்

துளசி (Benefits of Tulsi)

Share on facebook
Share on twitter
Tulsi

சமையலறையின் ராணி மஞ்சள் என்றால் தோட்டத்து ராணி துளசிதான்; அது மட்டுமல்ல, மூலிகைகளுக்கே ராணியாகவும் துளசி கருதப்படுகிறது. ஒரே ஒரு செடி வைக்கத்தான் இடம் உண்டு என்றால் பெரும்பாலானவர்கள் வைப்பது துளசி செடியைத்தான். தெய்வீகமான செடியாகக் கருதப்படும் துளசியில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன.

துளசி தேநீர் தயாரிப்பு முறையும், நன்மைகளும் பற்றி படிக்க, இங்கே click செய்யவும்.

துளசியின் தன்மைகள்

ஆயுளை நீட்டிக்கும் அமுதமாக துளசி கருதப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு. துளசியின் தன்மைகளில் சிலவற்றை பார்ப்போம்:

 • Antibacterial (bacteria-வை அழித்தல் மற்றும் தடுத்தல்)
 • Antifungal (fungi-யை அழித்தல் மற்றும் தடுத்தல்)
 • Antioxidant (cells, protein மற்றும் DNA-க்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்தல்)
 • Anti-inflammatory (வீக்கம், வலி போக்குதல்)
 • Antipyretic (சுரம் குறைத்தல்)
 • Analgesic (வலியை குறைத்தல்)
 • Antidiabetic (இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல்)
 • Anticancer (புற்று நோய் ஏற்படாமல் தடுத்தல்)
 • Antilipidemic (இரத்தத்தில் கொழுப்பு அளவை குறைத்தல்)

துளசியின் மருத்துவ குணங்கள்

துளசியின் எண்ணற்ற மருத்துவ குணங்களில் சில:

 • சளி, இருமலை போக்குகிறது.
 • நுரையீரலின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.
 • இருதய நலனை பாதுகாக்கிறது.
 • நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது.
 • சுரத்தை தணிக்க உதவுகிறது.
 • நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
 • கண் கோளாறுகளை போக்க உதவுகிறது.
 • சர்க்கரை நோயை தவிர்க்கிறது
 • அதிக கொழுப்பை சரி செய்கிறது.
 • வயிற்று போக்கை சரி செய்கிறது.
 • சீரணக் கோளாறுகளை போக்க உதவுகிறது.
 • சருமத்தின் நலனை பாதுகாக்கிறது.
 • வாந்தியை போக்குகிறது.
 • நினைவாற்றலை வளர்க்கிறது
 • மன அழுத்தத்தை போக்குகிறது.

பொலிவான தோற்றத்திற்கும் முடி உதிர்வுக்கும்  துளசியை பயன்படுத்தும் முறை பற்றி அறிய இங்கே click செய்யவும்.

மஞ்சளின் மருத்துவ குணங்களைப் பற்றி அறிய இங்கே click செய்யவும்.

 • தேடல்
 • Subscribe

  * indicates required
 • Yoga Mats

 • தமிழ்