உடல் மன ஆரோக்கியம்

மஞ்சள் (Benefits of Turmeric)

Share on facebook
Share on twitter

சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றான மஞ்சளுக்கு இப்போது உலகளவில் மவுசு அதிகமாகியிருக்கிறது. தமிழரின் சமையலில் மஞ்சளுக்கு என்றுமே முக்கிய இடம் இருந்திருக்கிறது. பருப்பை வேக வைக்க, காயில் உள்ள கிருமியை போக்க ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போடுவது தன்னிச்சையான ஒன்று. ஆனால், நாலு மாதம் முன்பு வரை சமையலறையை எட்டிப் பார்க்காத, பருப்பு இருக்கா, எண்ணெய் இருக்கா என்று கேட்கவே செய்யாத பெரும்பாலான ஆண்கள், மஞ்சள் இருக்கா என்று உறுதிப்படுத்திக் கொள்வதை காலத்தின் கோலம் என்று சொல்வதா கொரோனா காலம் என்று சொல்வதா?

நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்திய மூலிகை வகைகளில் முக்கியமான ஒன்று மஞ்சள். பழங்கால சித்த மருத்துவ குறிப்பேடுகளில் மஞ்சளின் பயன்பாடு பற்றி கூறப்பட்டுள்ளது. மஞ்சள், நோய் தீர்க்க,  உணவைப் பதப்படுத்த, மேனி அழகை பராமரிக்க என பல வகைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பொழுது, கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க, மஞ்சள் கலந்த நீர், மஞ்சள் சேர்த்த பால் என்று பலரும் குடித்து தள்ளுகிறோம்.

மஞ்சளின் தன்மைகள்

மஞ்சளில் நூற்றுக்கும் அதிகமான கூறுகள் (compounds) இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானதான curcumin-தான் மஞ்சளின் பெரும்பாலான மருத்துவ குணங்களின் பின்னிருக்கும் காரணியாகும். மஞ்சளின் தன்மைகளில் சில:

 • Anti-inflammatory (வீக்கம், வலி போக்குதல்)
 • Antimicrobial (bacterial, virus மற்றும் fungi-களை அழித்தல் மற்றும் தடுத்தல்)
 • Antioxidant (Cells, protein மற்றும் DNA-க்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்தல்)
 • Anticancer (புற்று நோய் ஏற்படுவதைத் தடுத்தல்)
 • Antimutagen (கதிர்வீச்சு போன்றவற்றால் DNA-வில் ஏற்படும் மாற்றத்தைத் தடுத்தல்)

மஞ்சளின் மருத்துவ குணங்கள்

மஞ்சளின் மருத்துவ குணங்களில் சில:

 • சளி, இருமலை போக்க உதவுகிறது.
 • ஆஸ்துமா, சைனஸ் பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.
 • சீரணத்தை பலப்படுத்துகிறது.
 • வலி, வீக்கம் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது.
 • இருதயத்தைப் பலப்படுத்துகிறது.
 • நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது.
 • உடற்பயிற்சிக்கு பின் தசைகளில் ஏற்படக் கூடிய வலியை போக்க உதவுகிறது.
 • காயங்களை ஆற்ற உதவுகிறது.
 • அதிக கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
 • மூளையின் திறனை ஊக்குவிக்கிறது.
 • புற்று நோய் உண்டாவதைத் தடுக்கிறது.
 • மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வலியை போக்க உதவுகிறது.
 • மூட்டுகளில் வலி, வீக்கம் ஆகியவற்றை போக்க உதவுகிறது.
 • சரும நோய்களை போக்க உதவுகிறது.
 • மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.

மஞ்சள் தேநீர் பயன்கள் மற்றும் செய்முறை பற்றிய விவரங்களுக்கு, இங்கே click செய்யவும்.

மஞ்சளும் எழிலான தோற்றமும்

மஞ்சள் பூசிக் குளிப்பது பெண்களுக்கானது என்று எழுதப்படாத விதி இருப்பதால், இழப்பு ஆண்களுக்குத்தான். மஞ்சள் என்பது ஒரு மூலிகை, அது தரும் பலன்கள் அனைவருக்கும் உண்டானதுதான். முகப் பொலிவை கூட்ட, சரும நோயிலிருந்து விடுபட என எழிலான, நலமான தோற்றத்தை மஞ்சள் தருகிறது. சரும நலனில் மஞ்சளின் பங்கு என்ன என்று பார்ப்போம்:

 • சருமத்திற்கு பொலிவூட்டுகிறது.
 • இளமையான தோற்றம் பெற உதவுகிறது.
 • கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்களை போக்குகிறது.
 • சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்குகிறது.
 • சூரிய கதிர் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

தோற்றப் பொலிவுக்கு மஞ்சளை பயன்படுத்தும் முறை பற்றி அறிய இங்கே click செய்யவும்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

 • தேடல்
 • Subscribe

  * indicates required
 • Yoga Mats

 • தமிழ்