Table of Contents
சமையலறையின் ராணி மஞ்சள் என்றால் தோட்டத்து ராணி துளசிதான்; அது மட்டுமல்ல, மூலிகைகளுக்கே ராணியாகவும் துளசி கருதப்படுகிறது. ஒரே ஒரு செடி வைக்கத்தான் இடம் உண்டு என்றால் பெரும்பாலானவர்கள் வைப்பது துளசி செடியைத்தான். தெய்வீகமான செடியாகக் கருதப்படும் துளசியில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன.
துளசியின் தன்மைகள்
ஆயுளை நீட்டிக்கும் அமுதமாக துளசி கருதப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு. துளசியின் தன்மைகளில் சிலவற்றை பார்ப்போம்:
- Antibacterial (bacteria-வை அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Antifungal (fungi-யை அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Antioxidant (cells, protein மற்றும் DNA-க்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்தல்)
- Anti-inflammatory (வீக்கம், வலி போக்குதல்)
- Antipyretic (சுரம் குறைத்தல்)
- Analgesic (வலியை குறைத்தல்)
- Antidiabetic (இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல்)
- Anticancer (புற்று நோய் ஏற்படாமல் தடுத்தல்)
- Antilipidemic (இரத்தத்தில் கொழுப்பு அளவை குறைத்தல்)
துளசியின் மருத்துவ குணங்கள்
துளசியின் எண்ணற்ற மருத்துவ குணங்களில் சில:
- சளி, இருமலை போக்குகிறது.
- நுரையீரலின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.
- இருதய நலனை பாதுகாக்கிறது.
- நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது.
- சுரத்தை தணிக்க உதவுகிறது.
- நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
- கண் கோளாறுகளை போக்க உதவுகிறது.
- சர்க்கரை நோயை தவிர்க்கிறது
- அதிக கொழுப்பை சரி செய்கிறது.
- வயிற்று போக்கை சரி செய்கிறது.
- சீரணக் கோளாறுகளை போக்க உதவுகிறது.
- சருமத்தின் நலனை பாதுகாக்கிறது.
- வாந்தியை போக்குகிறது.
- நினைவாற்றலை வளர்க்கிறது
- மன அழுத்தத்தை போக்குகிறது.
மஞ்சளின் மருத்துவ குணங்களைப் பற்றி அறிய இங்கே click செய்யவும்.
போகிற போக்கில் பறித்து சாப்பிடத் தூண்டும் சில மூலிகை செடிகளில் ஒன்று துளசி. துளசியைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளும் அப்படியே. இங்கே உங்களுக்காக சில துளசி உணவுகள்.
துளசி உணவுகள்
துளசி ரசம்
ரசம் விரும்பிகளின் பட்டியலில் அவசியம் இருக்க வேண்டியது இந்தச் சுவையான, மருத்துவ குணம் வாய்ந்த துளசி ரசம். ரசம் விரும்பிகள் அல்லாதவர்கள் யாரேனும் இருந்தால், துளசி ரசம் பருகிய பின்னர் கண்டிப்பாகக் கட்சி மாறக் கூடிய வாய்ப்பு அதிகம்.
இதைக் குறைவான நேரத்தில் செய்து முடிக்க முடிந்தது. சுவையும் அபாரம்.
துளசி ரசம் செய்யத் தேவையான பொருட்கள்:
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
துளசி இலை – 30 – 40 வரை
தக்காளி – 2 அல்லது 3
ரசப் பொடி – 2 மேசைக் கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – சிறிதளவு
கொத்துமல்லித் தழை
செய்முறையைப் பார்க்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
https://vegeyum.wordpress.com/2016/03/22/tulasi-rasam/
துளசி சோறு
வித்தியாசமான, அருமையான சுவையோடிருந்தது துளசி சோறு.
துளசி சோறு தயாரிக்க குறைவான நேரமே பிடித்தது. இதன் சுவையும் அருமையாக இருந்தது. அடுத்த முறை புளி சேர்க்காமல் செய்து பார்க்கலாம் என்றிருக்கிறேன்.
துளசி சோறு செய்யத் தேவையான பொருட்கள்
துளசி இலை – 1 கிண்ணம் அளவு
சிகப்பு மிளகாய் – 8
கடலைப்பருப்பு – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 மேசைக்கரண்டி
பூண்டு – 5
புளி – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – 1 மேசைக்கரண்டி
வடித்த சோறு – 1 கிண்ணம்
துளசி சோறு செய்முறையைப் பார்க்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
https://cookpad.com/in/recipes/4454059-tulsi-rice
துளசித் தேநீர்
துளசித் தேநீரின் சுவையும் அலாதியானதுதான். துளசித் தேநீர் தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம்.
செய்முறை
- ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை எடுத்து கொள்ளவும். இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அலசிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி துளசி இலைகளை சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
- துளசி தண்ணீர் கொதிக்க தொடங்கியதும், தீயை நன்றாகக் குறைத்து மேலும் சில நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து பின் தீயை அணைக்கவும்.
- வடிகட்டிய பின் துளசித் தேநீரை பருகவும். சுவையைக் கூட்ட சிறிது தேன் சேர்த்துக் கொள்ளவும்.
துளசித் தேநீரின் பலன்கள்
- சளி, இருமல் ஆகியவற்றை போக்குகிறது.
- நுரையீரல் செயல்பாட்டை ஊக்குவித்து நுரையீரல் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
- நோய் எதிர்ப்பு திறனை வளர்க்கிறது.
- சுரத்தை தணிக்கிறது.
- வயிற்று போக்கை சரி செய்கிறது.
- வாந்தியை போக்குகிறது.
- சீரணத்தை மேம்படுத்துகிறது.
- அதிக இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
- இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது.
- மூட்டு பிரச்சினைகளை போக்க உதவுகிறது.
- சரும நலத்தைப் பேணுகிறது; தோற்றத்தில் பொலிவை ஏற்படுத்துகிறது.
- மன அழுத்தத்தைப் போக்குகிறது.
இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.