உடல் மன ஆரோக்கியம்

முகப்பருவைப் போக்க இயற்கை மருத்துவக் குறிப்புகள்

Photo by Karl Solano from Pexels

“திடீரென்று முகத்தில் பரு வந்து விட்டது” என்று பலரும் கூறக் கேட்டிருப்போம். எதுவும் திடீரென்று வருவதில்லை. அதுபோல்தான் பருவும். பரு தோன்றுவதற்கான காரணங்களும் பருவை இயற்கை மருத்துவத்தில் சரி செய்து கொள்வதற்கான வழிமுறைகளையும் பார்க்கலாம்.

பருக்கள் தோன்றுவதற்கான காரணங்கள்

சருமத்தின் எண்ணெய் சுரப்பிகளான சவக்கோசு சுரப்பிகள் (sebaceous glands) அதிகமாக எண்ணெய் சுரக்கும் போது இந்த அதிகப்படியான எண்ணெய் இறந்த சரும அணுக்களோடு கலந்து சருமத்தில் உள்ள துளைகளை அடைக்கின்றன. இதன் விளைவாகப் பருக்கள் தோன்றுகின்றன. இவ்வாறு இச்சுரப்பு அதிகப்படியாகச் சுரப்பதற்கான காரணங்களில் சில:

  • துரித வகை உணவுகள், கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் எடுத்தல்
  • ஹார்மோன் கோளாறுகள்
  • மாதவிடாய் சுழற்சி
  • கர்ப்ப காலம்
  • அசீரணம்
  • இரசாயனங்கள் கலந்த முக அழகு சாதனங்கள் பயன்படுத்துதல்
  • பொடுகு
  • தூக்கமின்மை
  • மன அழுத்தம்

இவற்றைத் தவிர குடும்பத்தில் எவருக்கேனும், அதாவது, தாய், தந்தைக்கு இளம் வயதில் பருக்கள் இருந்திருந்தால், உங்களுக்கும் வர வாய்ப்புண்டு.

பருக்களின் வகைகள்

பருக்களின் வகைகளில் சில:

  • வெண்புள்ளிகள் (Whiteheads)
  • கரும்புள்ளிகள் (Blackheads)
  • பருக்கள் (Papules)
  • சீழ் கட்டிகள் அல்லது கொப்புளங்கள் (Pustules)
  • கணுக்கள் போன்றிருக்கும் கட்டிகள் (Nodules)
  • நீர்க்கட்டி வகை பருக்கள் (Cystic acne)
  • Acne conglobata
  • Acne fulminans
  • Gram negative folliculitis

இவற்றில் கணுக்கள் போன்றிருக்கும் கட்டிகளும் நீர்க்கட்டிகளும் தீவிர பருக்கள் வகையைச் சேர்ந்தவை. Acne conglobata, acne fulminans மற்றும் gram negative folliculitis ஆகிய மூன்றும் அரிதான ஆனால் மிகத் தீவிர வகையைச் சேர்ந்தவை.

பருக்களைப் போக்கும் இயற்கை மருத்துவம்

இயற்கை முறையில் வீட்டிலேயே பருக்களைப் போக்குவதற்கான வழிகளைப் பார்க்கலாம்:

1) மஞ்சள்

Photo by Karl Solano from Pexels

மஞ்சளில் antiseptic, antibacterial மற்றும் anti-inflammatory தன்மைகள் உள்ளன. இதனால், மஞ்சள் பருக்கள் மற்றும் பருக்களால் ஏற்படும் தழும்புகளைப் போக்குவதோடு பருக்கள் உருவாகமலும் தடுக்கின்றன.

  • மஞ்சளுடன் சிறிது தேன் சேர்த்து நன்றாகக் கலந்து முகப்பருவின் மீது தடவி சுமார் 20 நிமிடம் கழித்து கழுவவும்.
  • ஒரு கைப்பிடி வேப்பிலையை எடுத்து அரைத்து மஞ்சளுடன் கலந்து முகப்பருவின் மீது பூசி, நன்றாகக் காய்ந்த பின் கழுவவும்.
  • மஞ்சளுடன் சிறிது கடலை மாவை சேர்த்து முகப்பரு மீது தடவி சுமார் 20 நிமிடம் கழித்து கழுவவும்.
  • சிறிது மஞ்சள் மற்றும் கத்தாழையை எடுத்து கலந்து முகப்பரு உள்ள இடத்தில் பூசி சுமார் 20 நிமிடம் கழித்து கழுவவும்.

2) துளசி

துளசி, antibacterial மற்றும் antifungal தன்மைகள் கொண்டது. இது ஒரு antiseptic ஆகவும் செயல்படுகிறது.

  • ஒரு கைப்பிடி துளசி இலைகளை நன்றாகக் கழுவி அரைத்துக் கொள்ளவும். சிறிது சந்தனத்தைச் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் பூசி காய விடவும். சுமார் 15 அல்லது 20 நிமிடங்களுக்குப் பிறகு நீரால் முகத்தைக் கழுவவும். தொடர்ந்து செய்து வர முகப்பருக்கள் மறையும்.
  • தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை துளசித் தேநீர் பருகலாம்.

3) இஞ்சி

இஞ்சி collagen உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் சரும நலத்தைப் பாதுகாக்கிறது. மேலும் இஞ்சி சருமத்தின் கழிவுகளை வெளியேற்றுவதன் மூலம் பருக்களைப் போக்கவும் தவிர்க்கவும் உதவுகிறது.

  • இஞ்சிச் சாறுடன் சிறிது தேன் சேர்த்து பருக்கள் மீது பூசவும். சுமார் 20 நிமிடங்களுக்குப் பின் முகத்தைக் கழுவவும்.
  • இஞ்சிச் சாறுடன் சிறிது தேன் சேர்த்து கருந் திட்டுக்கள் மீது பூசவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும்.
  • இஞ்சித் தேநீர் பருகவும்.

4) எலுமிச்சை சாறு

எலுமிச்சையிலிருக்கும் antiseptic, antifungal மற்றும் antibacterial தன்மைகள் கொண்டது. இது பருக்களை உருவாக்கும் bacteria-க்களை அழிக்கிறது. மேலும் இது அதிக எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது.

எலுமிச்சை சாற்றில் சிறிது பஞ்சை நனைத்து, பருக்களின் மீது பூசவும்.

எலுமிச்சை சாற்றில் சிறிது தேனை சேர்த்து நன்றாகக் கலந்து பருக்கள் மீதி பூசவும். காய்ந்த பின் கழுவவும்.

5) வேப்பிலை

வேப்பிலை anti-fungal, antiviral, antiseptic, antibacterial மற்றும் anti-inflammatory தன்மைகள் கொண்டது. வேப்பிலையில் vitamin C இருப்பதால் அது collagen உற்பத்தியைத் தூண்டி சருமத்தைப் பொலிவோடும் இளமையோடும் வைத்திருக்க உதவுகிறது.

கைப்பிடி அளவு வேப்பிலையை நன்றாகக் கழுவி அரை லிட்டர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீரை மூடி ஆற வைக்கவும். நீரின் நிறம் மாறியிருப்பதை நீங்கள் பார்க்கலாம். ஆறிய வேப்பிலை நீரை ஒரு புட்டியில் பாதுகாப்பாக வைத்து, தேவைப்படும் அளவு எடுத்து பருக்களின் மீது பஞ்சால் ஒற்றவும்.

வேப்பிலையை சுத்தம் செய்து இரவில் தண்ணீரில் போட்டு மூடி வைக்கவும். காலையிலும் மாலையிலும் வேப்பிலை நீரால் முகத்தைக் கழுவவும்.

ஒரு மேசைக்கரண்டி வேப்பிலை சாறு எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து தினமும் பருகி வரவும்.

6) பூண்டு

பூண்டில் இருக்கும் allicin, பருக்களை உருவாக்கும் bacteria-வை அழிக்கிறது. பூண்டு antibacterial, antiviral, antimicrobial மற்றும் antifungal தன்மை கொண்டது.

வெள்ளைப் பூண்டை அரைத்துப் பருக்களின் மீது பற்றுப் போடவும். உலர்ந்த பின் முகத்தைக் கழுவவும்.

7) சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழையில் இருக்கும் antibacterial தன்மைகள் பருக்களை அழிக்கவும் தவிர்க்கவும் உதவும். மேலும் சோற்றுக் கற்றாழை collagen உற்பத்தியைத் தூண்டுவதால், பருக்களின் தடம் விரைவில் மறைந்து சரும நலன் பாதுகாக்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழையைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் பருக்கள் தோன்றுவதைத் தவிர்க்கலாம். பருக்கள் காரணமாக வரும் எரிச்சல், வீக்கம் ஆகியவற்றை இது போக்குகிறது.

8) ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர் antibacterial மற்றும் antiseptic தன்மைகள் கொண்டது.

ஆப்பிள் சிடர் வினிகரை சிறிது எடுத்து அதோடு தண்ணீரை சம அளவு சேர்த்துக் கலக்கவும். சுத்தமான பஞ்சை இதில் நனைத்து பருக்கள் மீது தடவி காய விடவும்.

பருக்களைப் போக்க எசன்சியல் எண்ணெய்கள்

பருக்களைப் போக்கும் எசன்சியல் எண்ணெய்களில் சில:

1) Tea Tree Essential Oil  – Tea tree essential oil antiseptic தன்மைகள் கொண்டது. இது பருக்களைப் போக்கவும் சரும நலத்தைப் பாதுகாக்கவும் உகந்தது.

2) Lavender Essential Oil – Lavender essential oil antibacterial மற்றும் anti-inflammatory தன்மைகள் கொண்டது. இது பருவைப் போக்க உதவுவதுடன் பரு மீண்டும் வராமலும் தடுக்கிறது.

3) Sandalwood Essential Oil – Sandalwood essential oil, antibacterial, antioxidant மற்றும் anti-inflammatory தன்மைகள் கொண்டது. இது பருக்களைப் போக்கவும் மீண்டும் பரு உருவாகமல் தடுக்கவும் உதவுகிறது.

4) Lemon Essential Oil – Lemon essential oil antioxidant தன்மை கொண்டது. மேலும் இதில் vitamin C-யும் அதிக அளவில் உள்ளது. இது இறந்த சரும அணுக்களை அகற்றவும் சருமத்தைப் பொலிவோடு வைக்கவும் உதவுகிறது. சருமத் துளைகளில் இருக்கும் bacteria-க்களை அழித்து பருக்கள் உருவாகாமலும் தடுக்கிறது.

5) Cinnamon Essential Oil – Cinnamon essential oil சருமத்தில் உள்ள bacteria-வை அழித்து பருக்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

6) Rosemary Essential Oil – Rosemary essential oil சரும மெழுகின் (sebum) உற்பத்தியை சரி செய்து சருமத் துளைகளில் உள்ள அடைப்புகளை நீக்கி சுத்தம் செய்து பருக்களை போக்கவும் மீண்டும் வராமல் தவிர்க்கவும் உதவுகிறது.

7) Carrot Seed Essential Oil – Carrot seed essential oil, antioxidant, antiseptic மற்றும் antifungal தன்மைகள் கொண்டதால் அது பருக்களைப் போக்கவும் தவிர்க்கவும் உதவுகிறது.

8) Frankincense Essential Oil – Frankincense essential oil bacteria-வை அழிக்கும் திறன் கொண்டது. அது சருமத்தில் எண்ணெய் சுரப்பையும் கட்டுப்படுத்தி பருக்கள் ஏற்படாமல் தவிர்க்க உதவுகிறது.

9) Cypress Essential Oil – Cypress essential oil சரும மெழுகு (sebum) சுரத்தலைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இது antimicrobial மற்றும் antibacterial தன்மைகள் கொண்டதால் பருக்களைப் போக்கவும் பருக்களை உருவாக்கும் bacteria-வை அழிக்கவும் உதவுகிறது.

எசன்சியல் எண்ணெய்களைப் பயன்படுத்தும் போது அவற்றை சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்தாமல், அவற்றின் வீரியத்தைக் குறைக்க carrier எண்ணெய் கலந்து பயன்படுத்த வேண்டும்.

மேற்கண்ட முறைகளைப் பின்பற்றினால் இயற்கை முறையில் வீட்டிலேயே பருக்களை அகற்ற முடியும்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்