யோகா ரிட்ரீட்டுக்குச் செல்ல வேண்டும் என்கிற விருப்பம் இருக்கிறது; ஆனால், எந்த ரிட்ரீட்டைத் தேர்வு செய்வது என்று குழப்பமாக இருக்கிறதா?
இப்போது பல வகையான யோகா ரிட்ரீட்கள் இருக்கின்றன – கடற்கரை, மலைப்பகுதி, காடு போன்ற இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான இடங்களில் என தேர்வு செய்யப்பட்ட அற்புதமான இடங்களில் யோகா ரிட்ரீட்டுகள் அமைந்திருக்கின்றன.
சரியான ரிட்ரீட்டைத் தேர்வு செய்தால் அது உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை தரக் கூடும். ஆனால் தவறான தேர்வு ஏமாற்றத்தைத் தரலாம்.
உங்களுக்கு ஏற்ற யோகா ரிட்ரீட்டை எப்படி தேர்வு செய்வது என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
யோகா ரிட்ரீட் என்றால் என்ன?
யோகா ரிட்ரீட் என்பதை தமிழில் நாம் யோகா ஓய்வு முகாம் என்று சொல்லலாம். யோகா ரிட்ரீட்டில் பல வகைகள் உண்டு. பொதுவாக, ஒரு யோகா ரிட்ரீட்டில்,
- யோகாசன பயிற்சி
- தியானம்
- ஓய்வு
- மன அமைதி
ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். இவை பொதுவாக இயற்கை சூழலில்—கடற்கரை, மலை, காடு போன்ற இடங்களில் நடைபெறும்.
உங்களுக்கான யோகா ரிட்ரீட்டை எப்படி தேர்வு செய்வது?
உங்களுக்கான சரியான யோகா ரிட்ரீட்டை தேர்வு செய்ய முதலில் உங்கள் தேவை என்னவென்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும். பொதுவான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.
- அடிப்படை யோகாசனங்களைப் பயில
- யோகப்பயிற்சியை மேம்படுத்த
- மன அழுத்தத்தைக் குறைக்க
- உடலுக்கும் மனதுக்கும் நல்ல புத்துணர்ச்சி அளிக்க
உங்களுடைய தேவையை நீங்கள் உணர்ந்து கொண்டால், சரியான யோகா ரிட்ரீட்டைத் தேர்வு செய்வது சுலபமாகி விடும்.
அனைத்து ரிட்ரீட்களும் ஒரே மாதிரியானவை இல்லை.
ஆரம்ப நிலை ரிட்ரீட்: இது யோகாசனப் பயிற்சியில் தொடக்க நிலையில் இருப்பவர்களுக்கு
மேம்பட்ட பயிற்சிக்கான ரிட்ரீட்: கடினமான ஆசனங்களை பயில்பவர்களும் தீவிர பயிற்சி, நீண்ட நேர அமர்வுகள் பயில்பவர்களும்
நீங்கள் யோகப்பயிற்சிக்குப் புதியவராக இருந்தால், ஆரம்ப நிலை ரிட்ரீட்டைத் தேர்வு செய்யுங்கள்
யோகா ரிட்ரீட் அமைந்திருக்கும் இடம்
நல்ல யோகா ரிட்ரீட்டில் உங்களுக்கு சிறந்த யோகப்பயிற்சி கிடைக்கும். ஆனாலும், யோகா ரிட்ரீட்டைத் தேர்வு செய்யும் போது, அது அமைந்திருக்கும் இடத்தையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக யோகா ரிட்ரீட்டுகள் கடற்கரை, மலைகள் மற்றும் காடுகள் ஆகியவற்றிலேயே இருக்கும்.
- கடற்கரை: மன அமைதிக்கும், ஓய்வுக்கும் ஏற்ற இடம்.
- மலை: அமைதியான, கம்பீரமான சூழலில் நம் கவனம் குவியும், ஆழ்ந்த அனுபவம் உண்டாகும்
- காடு: இயற்கையோடு நல்ல பிணைப்பு உண்டாகும். இது நம் மனநிலையை மேம்படுத்துவதோடு உடல்நலத்தையும் மேம்படுத்தும்.
மேலே கூறியிருக்கும் அனைத்தையும் மனதில் கொண்டு உங்கள் மனதுக்கு விருப்பமான யோகா ரிட்ரீட்டைத் தேர்வு செய்யவும்.
செலவைப் பற்றிய தெளிவைப் பெற்றுக் கொள்ளுங்கள்
நீங்கள் தேர்வு செய்யும் யோகா ரிட்ரீட்களின் செலவு அவற்றின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும்.
- குறைந்த செலவு:சாதாரண வசதிகள்
- அதிக செலவு: வசதியான தங்குமிடம், சமச்சீரான உணவு, கூடுதல் பயிற்சிகள்
யோகா ரிட்ரீட்டை பதிவு செய்யும் முன் நாம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியவை:
- கட்டணத் தொகையில் உணவுக்கான தொகையும் சேர்க்கப்பட்டுள்ளதா?
- தங்குமிடம் பாதுகாப்பாக, சுத்தமாக உள்ளதா?
- மறைமுக செலவுகள் ஏதேனும் உள்ளனவா?
யோகா ரிட்ரீட்டுக்கு ஆகும் செலவு குறித்து தெளிவான விவரங்களைக் கேட்டுப் பெறுவதில் எந்தத் தயக்கமும் காட்டாதீர்கள்.
எவ்வளவு நாள் யோகா ரிட்ரீட் தேவைப்படும்?
நீங்கள் யோகப்பயிற்சிக்குப் புதியவராக இருந்தால் 3 முதல் 7 நாட்கள் ரிட்ரீட் சரியான தேர்வாக இருக்கும்.
ஏனென்றால், யோகப்பயிற்சிக்கு உங்கள் உடலும் மனமும் முதலில் பழகியாக வேண்டும். எனவே குறைந்த கால ரிட்ரீட்டில் துவங்குவதே சரியாக இருக்கும். யோகா ரிட்ரீட் புத்துணர்வு அளிக்கக் கூடியது என்றாலும் முதல்முறை பயிற்சியாளர்கள் நீண்ட காலம் பயில்வது சோர்வை ஏற்படுத்தக் கூடும்.
யோகா ரிட்ரீட் மதிப்பீடுகளைப் (Reviews) படிக்கவும்
உங்களுக்கான யோகா ரிட்ரீட்டைப் பதிவு செய்வதற்கு முன்:
- மற்றவர்களின் அனுபவங்களை ப் பற்றி தெரிந்து கொள்ளவும்.
- பயிற்சியாளர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளவும்
- ரிட்ரீட் நடத்துபவர்களிடம் பேசும் போது புகைப்படங்களை அனுப்பச் சொல்லவும்.
இது தவறான தேர்வைத் தவிர்க்க உதவும்.
நீங்கள் ஒரு நல்ல யோகா ரிட்ரீட்டைத் தேர்வு செய்ய விரும்பினால், இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ரிட்ரீட்டுகளை பார்வையிடுங்கள்.
பொறுமையாக, உங்களுக்குப் பொருத்தமானதைத் தேர்வு செய்யுங்கள்.
யோகா ரிட்ரீட் உண்மையில் பயனுள்ளதா?
உங்கள் தேவைகளுக்கு ஏற்ற ரிட்ரீட்டைத் தேர்வு செய்தால், யோகா ரிட்ரீட் சிறந்த பலன்களைத் தரும்.
ஒரு நல்ல யோகா ரிட்ரீட்:
- மன அழுத்தத்தைக் குறைக்கும்
- மனத் தெளிவை அதிகரிக்கும்
- உங்களை உங்களுடன் மீண்டும் இணைக்கும்
- நல்ல பழக்கத்தை உருவாக்க உதவும்
யோகா ரிட்ரீட் செல்வது என்பது ஒரு வழக்கமான சுற்றுலா அல்ல.
அது உங்கள் மனம் மற்றும் உடலை புதுப்பிக்கும் ஒரு அற்புத அனுபவம்.
உங்கள் தேவைகளுக்கேற்ப சரியான யோகா ரிட்ரீட்டைத் தேர்வு செய்து உடல், மன புத்துணர்வு பெறுங்கள்.
நீங்கள் யோகா ரிட்ரீட்டுக்கு சென்றதுண்டா? உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிருங்கள்.
இயற்கை மற்றும் நலமான வாழ்வு குறித்த தகவல்களுக்குத் தொடர்ந்து எங்களோடு இணைந்திருங்கள்.
இரமா தமிழரசு
வணக்கம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.
எங்களுடைய பிற வலைப்பக்கம் மற்றும் YouTube channel-கள்:
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
http://www.youtube.com/@letnaturelive_YT




