உடல் மன ஆரோக்கியம்

ரெய்கி ஹீலிங் மற்றும் அதன் அபார நன்மைகள்

ரெய்கி என்பது உடல், மனம் மற்றும் உணர்வுகளுக்கு சமநிலையை அளிக்கும் மென்மையான, ஆனால் ஆற்றல் வாய்ந்த சிகிச்சை முறையாகும். உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்படும் இந்த ரெய்கி கலை எளிதில் கற்றுக் கொள்ளக் கூடியதும் ஆகும்.

ரெய்கி என்றால் என்ன?

ரெய்கி என்பது ஜப்பானில் தோன்றிய சக்தி சிகிச்சை முறையாகும். இந்த பயிற்சில், ரெய்கி பயின்றவர், தன் கைகளின் மூலம் உயிர்சக்தியைக் கடத்தி சிகிச்சை அளிக்கிறார்.

ரெய்கியின் வரலாறு

ரெய்கியின் பாரம்பரிய வரலாறு மிகாவோ உசுயி என்பவரோடு தொடங்குகிறது. 1922-ல் ஜப்பானின் குறமா மலையில் 21 நாட்கள் உண்ணாநோன்பு இருந்து தியானம் செய்தபோது, அவருக்கு ஒரு சக்தி வாய்ந்த ஆன்மீக அனுபவம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் நோய்களைக் குணப்படுத்தும் “ரெய்கி” ஆற்றலைப் பெற்றார் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், வரலாற்று ஆய்வாளர்கள் இந்த 21 நாள் தியானம் என்பது அக்கால புத்த மதத்தில் ஒரு பொதுவான பயிற்சியே என்று குறிப்பிடுகின்றனர். உசுயியின் ஏற்பட்ட ஆன்மீக அனுபவத்திற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இல்லை என்றாலும், அவரது நினைவகக் கல்வெட்டில் இந்த வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரெய்கி தரும் நன்மைகள்

ரெய்கி சிகிச்சையைப் பெறுபவர்கள் பல்வேறு பலன்களை அனுபவித்துள்ளார்கள். அவற்றில் சில:

  • மன அழுத்தம் குறைகிறது
  • அமைதியான உணர்வு ஏற்படுகிறது 
  • உணர்ச்சி சமநிலை உண்டாகிறது.
  • உடல் நலத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • வாழ்க்கை அனுபவங்களால் ஏற்படும் மனதில் ஏற்படும் உணர்வுத் தேக்கங்களைப் போக்கி மன ஆற்றல் செழிக்க உதவுகிறது
  • உடல், மன நலத்தை மேம்படுத்த உதவுகிறது
  • தூக்கமின்மையைப் போக்க உதவுகிறது
  • நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீண்ட கால நோயால் துன்புறுபவர்களுக்கும் ரெய்கி சிகிச்சை ஒரு ஓய்வு நிலையை (relaxation) அளிப்பதாக ஆய்வுகள் அறிவிக்கின்றன.

ரெய்கி ஆற்றலை செல்லப்பிராணிகளுக்கும் பயன்படுத்தலாம். சொல்லப் போனால், விலங்குகளுக்கு ஆற்றலைப் பெற்றுக் கொள்ளும் தன்மை அதிகம்.

எங்கள் செல்லப்பிராணி செழிக்கு தொடர்ந்து ரெய்கி பயிற்சி அளிப்பதுண்டு. ரெய்கி பெற அவள் தயாராக இருக்கும் போது மட்டுமே நான் அவளுக்கு ரெய்கி செய்வேன். தான் தயாரா இல்லையா என்பதை செழி நன்றாகவே உணர்த்தி விடுவாள். இங்கு இணைக்கப்பட்டுள்ள காணொளியைப் பார்த்தால் அவள் எப்படி மறுக்கிறாள், எப்படி தயார் என்று உணர வைக்கிறாள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ரெய்கி பற்றிய ஆய்வுகள் என்ன கூறுகின்றன?

ரெய்கி பற்றிய பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, குறிப்பாக மன அழுத்தம், வலி மற்றும் வாழ்க்கை நலனின் தரம் (quality of life) தொடர்பில்.

சில ஆய்வுகள் ரெய்கி பின்வருவனவற்றிற்கு உதவக்கூடும் எனக் கூறுகின்றன:

  • உடல் மற்றும் மன அமைதியை மேம்படுத்துதல்
  • மன அழுத்தத்தைக் குறைத்தல்
  • வாழ்வின் தரத்தை (quality of life) மேம்படுத்துதல்
  • சிலருக்கு வலி உணர்வை குறைக்க உதவுதல்
  • Journal of Alternative and Complementary Medicine இதழில் வெளியான ஆய்வில், ரெய்கி மன அழுத்தத்தை குறைக்க உதவலாம் என்று கூறப்பட்டுள்ளது.
  • National Center for Complementary and Integrative Health அமைப்பு, ரெய்கி போன்ற சக்தி சிகிச்சைகள் அமைதியை ஏற்படுத்த உதவுகின்றன என்று கூறுகிறது, ஆனால் மேலும் ஆய்வுகள் தேவையாக உள்ளன என்றும் குறிப்பிடுகிறது.

உதாரணமாக, மதிப்பாய்வு செய்யப்பட்ட (peer-reviewed) ஆய்வுகளில், நீண்டநாள் நோய்களுடன் வாழ்பவர்கள் அல்லது சிகிச்சை பெறுபவர்கள் ஆகியோருக்கு மனஅமைதி மற்றும் நல உணர்வு மேம்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால், நாம் வேறு சிலவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்:

  • பல ஆய்வுகள் குறைந்த அளவு பங்கேற்பாளர்களுடன் நடத்தப்பட்டுள்ளன
  • ரெய்கி எப்படி செயல்படுகிறது என்பது இன்னும் விஞ்ஞான ரீதியாக தெளிவாக நிரூபிக்கப்படவில்லை

இதனால், ரெய்கி பொதுவாக ஒரு துணை முறையாக (complementary practice) கருதப்படுகிறது. அதாவது, இது வழக்கமான மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக அல்ல, அதனுடன் சேர்ந்து உதவக்கூடியது என்று பொருள்.

உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையை தொடர்ந்து பெறுவது அவசியம்.

முடிவாக, ரெய்கி என்பது ஒரு மென்மையான சுய பராமரிப்பு (self-care) முறையாக பார்க்கப்பட வேண்டும்—நீங்களாக அனுபவித்து அறிந்து கொள்ளக்கூடிய ஒன்று.

மனச் சோர்வு நீங்கி மனதும் உடலும் அமைதியடைவதால் ஏற்படும் நன்மைகள்

ரெய்கி உடல் மற்றும் மனதுக்கு ஓய்வை (relaxation) அளிக்கிறது. இது எந்த வகையில் உதவுகிறது என்று பார்க்கலாம்.

மனமும் உடலும் தளர்வடைவது (Relaxation) வெறும் நிம்மதி அடைவதை மட்டும் சார்ந்தது அல்ல. அது உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள உதவும் ஒரு அறிவியல் செயல்பாடாகும்.

  • கார்டிசோல் குறைப்பு: மன அழுத்தம் ஏற்படும்போது சுரக்கும் ‘கார்டிசோல்’ ஹார்மோன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். ரெய்கி உள்ளிட்ட தளர்வுப் பயிற்சிகள் இந்த ஹார்மோனை குறைத்து, உடல் செல்கள் மீண்டும் புதுப்பிக்க உதவுகின்றன.
  • நோய் எதிர்ப்பு சக்தி: ரெய்கி ஆற்றல் ஆழ்ந்த அமைதி நிலையை ஏற்படுத்துகிறது. ஆழ்ந்த அமைதி நிலையில், உடலின் நோய் எதிர்ப்பு செல்கள் (Immune cells) அதிக சுறுசுறுப்பாகச் செயல்பட்டு தொற்றுநோய்களைத் தடுக்கின்றன. 
  • விரைவான குணமடைதல்: இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பைக் குறைப்பதன் மூலம், உடலின் இரத்த ஓட்டம் சீராகி காயங்கள் மற்றும் நோய்கள் விரைவில் குணமாக உதவுகிறது.

ரெய்கி, நம்முள் இருக்கும் தேவையற்ற வேகத்தை மட்டுப்படுத்தி, நம்மை நிதானப்படுத்துகிறது. நம் ஆழ்மனதோடு நம் தொடர்பை மேம்படுத்துகிறது.

ரெய்கி கற்றுக் கொள்ள ஆர்வம் உள்ளவர்கள், மேலும் விவரங்களுக்கு எங்களைத்  தொடர்பு கொள்ளலாம்.

தொலைபேசி எண்: 9941221126

Picture of இரமா தமிழரசு

இரமா தமிழரசு

வணக்கம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.
எங்களுடைய பிற வலைப்பக்கம் மற்றும் YouTube channel-கள்:
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
http://www.youtube.com/@letnaturelive_YT

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்