உடல் மன ஆரோக்கியம்

தூதுவளையின் பலன்கள்

சமீப நாட்களாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Professor Edward Anderson இட்லி பிரியர்களிடம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். “உலகத்தின் அலுப்பான விஷயங்களில் ஒன்று இட்லி” (Idli are the most boring things in the world) என்று அவர் ட்விட்டரில் கூறியதுதான் அதற்குக் காரணம். இந்தியா உறங்கும் நேரத்தில் கூட தென் இந்திய twitter-க்காரர்கள் தனக்கு பதிலளித்துக் கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். இதில் அற்புதமான விடயம் என்னவென்றால் இட்லிக்கான ஆதரவுக் குரல் வந்தது தென் இந்தியாவில் இருந்து மட்டுமல்ல.

சும்மா சொல்லக் கூடாது, நம் மக்களின் சுவை உணர்வே அலாதிதான். இட்லியின் சுவைப் பற்றியும் அதை எப்படியெல்லாம் சாப்பிட முடியும் என்பது பற்றியும் பல விளக்கங்களை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். யோசித்துப் பார்த்தால் இதில் வியப்பேதும் இல்லை. மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைகளையே பல்வேறு வகைகளில் உணவில் சேர்த்துக் கொண்டவர்களின் வழித்தோன்றல்கள்தானே – இன்று நாம் பார்க்கவிருக்கும் தூதுவளை உட்பட.

நன்கு அறியப்படும் மூலிகை வகைகளில் ஒன்று தூதுவளை. தூதுவளையின் அவதாரங்கள் பலவிதமானவை – கஷாயம், குழம்பு, ரசம், சோறு, துவையல், பச்சடி, இட்லி பொடி (ஏதாவது விட்டுப் போயிருந்தால் கூறவும்) என்று பல வகைகளில் தூதுவளை உணவில் இடம் பெறுகிறது. தூதுவளை ஆங்கிலத்தில் climbing brinjal என்று அழைக்கப்படுகிறது.

தூதுவளையின் மருத்துவ குணங்கள்

தூதுவளையின் மருத்துவ குணங்களில் சில:

  • சளி, இருமலைப் போக்குகிறது
  • சைனஸ் பிரச்சினையை சரி செய்கிறது
  • மூச்சுக் கோளாறுகளைப் போக்குவதால் இயற்கையான முறையில் ஆஸ்துமாவை சரி செய்ய உதவுகிறது
  • சீரணத்தைப் பலப்படுத்துகிறது
  • வாய்வுக் கோளாறை சரி செய்கிறது
  • மலச்சிக்கலைப் போக்குகிறது
  • வயிற்று வலியைப் போக்குகிறது
  • உடலைப் பலப்படுத்துகிறது
  • இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது
  • காச நோயைத் தவிர்க்கிறது
  • புற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது
  • கல்லீரலைப் பாதுகாக்கிறது
  • காதுப் பிரச்சினைகளை சரி செய்கிறது
  • உடல் சோர்வைப் போக்க உதவுகிறது

கூடுதல் தகவல்

தூதுவளை கொசுத் தொல்லையையும் போக்கும்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் http://www.youtube.com/@PetsDiaryandMomsToo என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கும் உங்களை வரவேற்கிறோம்.

Sandhi Mudra

மூட்டழற்சியைப் போக்க உதவும் முத்திரைகள்

மூட்டழற்சியின் முக்கிய வடிவங்கள், மூட்டழற்சிக்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்த தகவல்களையும் மூட்டழற்சியைப் போக்க உதவும் 14 ஆசனங்கள் பற்றியும் முந்தைய பதிவு ஒன்றில் பார்த்திருந்தோம். மூட்டழற்சியைப் போக்க உதவும் முத்திரைகள் குறித்து இன்று

Read More »

அமிலப் பின்னோட்டத்தைச் (ஆசிட் ரிஃப்ளெக்ஸ்) சரி செய்ய உதவும் முத்திரைகள்

முந்தைய பதிவு ஒன்றில், அமிலப் பின்னோட்டத்தைச் தீர்க்க உதவும் ஆசனங்கள் பற்றிப் பார்த்திருந்தோம். இன்று, ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்று ஆங்கிலத்தில் அறியப்படுகிற அமிலப் பின்னோட்டத்தைச் சரி செய்ய உதவும் முத்திரைகள் குறித்துப் பார்க்கலாம். முத்திரை

Read More »
Abana mudra

இருதய நலன் காக்கும் 7 அற்புத முத்திரைகள்

இருதய நோய்களின் தாக்கம் அதிகமாகி வரும் சமூக சூழலை நாம் பார்க்கிறோம். இருதய நோய்களைத் தவிர்த்தலில் முத்திரைகளின் பங்கு குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இருதய நோயாளிகளுக்கு முத்திரைகள் பேருதவி புரிவதாய் தெரிய வந்துள்ளது.

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்