Table of Contents
கேட்ட நொடியில் விந்தையான பெயராகத் தோன்றும் இரணகள்ளியின் மருத்துவ குணங்கள் வியப்பிற்கெல்லாம் அப்பாற்பட்டவை. இலைகளின் நுனிகளிலிருந்து புதுத் தாவரங்கள் உருவாகும் தன்மையைக் கொண்டிருப்பதால் ‘கட்டி போட்டால் குட்டி போடும்’ என்று இரணகள்ளியைப் பற்றிக் குறிப்பிடுவதுண்டு. காலம் காலமாக பல்வேறு வகை மருத்துவ முறைகளிலும் இரணகள்ளி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் இம்மூலிகை ‘Leaf of life’, ‘Life plant’, ‘Air plant’ ‘Wonder of the World’ மற்றும் ‘Miracle leaf’ என்றும் அழைக்கப்படுகிறது.
இரணகள்ளியின் தன்மைகள்
இரணகள்ளியில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம் (zinc), மக்னீசியம், சோடியம் போன்ற தாதுக்களும் தையமின், நைசின் போன்ற விட்டமின்கள் உள்ளன. மேலும் இம்மூலிகையில் பல்வேறு flavonoid, alkaloid, phenolic compound, tannin ஆகியவை உள்ளன. இரணகள்ளியின் தன்மைகளில் சில:
- Anti-inflammatory (வீக்கம், வலி போக்குதல்)
- Antifungal (fungi-யை அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Antibacterial (bacteria-வை அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Antimicrobial (bacteria, virus மற்றும் fungi-களை அழித்தல் மற்றும் தடுத்தல்)
- Analgesic (வலியைக் குறைத்தல்)
- Anti-diabetic (இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல்)
- Antimutagenic (கதிர்வீச்சு போன்றவற்றால் DNA-விற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்தல்)
- Anti-ulcer (அல்சர் ஏற்படாமல் தடுத்தல்)
- Antihypertensive (அதிக இரத்த அழுத்தத்தைக் குறைத்தல்)
- Anticonvulsant (வலிப்பு ஏற்படுவதைத் தடுத்தல் அல்லது குறைத்தல்)
- Anti-cancer (புற்று நோய் ஏற்படாமல் தடுத்தல்)
- Antileishmanial (ஒட்டுண்ணியைத் தடுத்தல் மற்றும் அழித்தல்)
- Hepatoprotective (கல்லீரலைப் பாதுகாத்தல்)
- Nephroprotective (சிறுநீரகத்தைப் பாதுகாத்தல்)
- Wound-healing (காயங்களை ஆற்றுதல்)
இரணகள்ளியின் மருத்துவ குணங்கள்
- சளி, இருமலைப் போக்குகிறது
- சைனஸ் பிரச்சினையை சரி செய்கிறது
- ஆஸ்துமாவைப் போக்க உதவுகிறது
- அசீரணத்தை சரி செய்கிறது
- வாயுத் தொல்லையைப் போக்குகிறது
- வயிற்றுப் போக்கை சரி செய்கிறது
- வாந்தியை குணப்படுத்துகிறது
- கண் பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது
- காதுவலியைப் போக்குகிறது
- முகவீக்கத்தை சரி செய்கிறது
- தலைவலியைப் போக்க உதவுகிறது
- தசைவலியைக் குணமாக்குகிறது
- தோல் நோய்களைக் குணப்படுத்துகிறது
- சிறுநீரகக் கற்களை போக்குகிறது
- சிறுநீர் மற்றும் மலத்தை இளக்குகிறது
- நீரிழிவு நோயை சரி செய்கிறது
- அதிக இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது
- முடக்கு வாதத்தை சரி செய்ய உதவுகிறது
- கர்பப்பை பிரச்சினைகளை சரி செய்கிறது
- முடி உதிர்வைத் தடுத்து கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது
- நரை முடி தோன்றுவதைத் தவிர்க்க உதவுகிறது
- இரணங்களை ஆற்றுகிறது
- வாத நோய்களைப் போக்க உதவுகிறது
- கால் ஆணியைப் போக்குகிறது
- கட்டியைக் கரைக்கிறது
சிறுநீரகக் கற்களைப் போக்க இரணகள்ளியை எப்படி பயன்படுத்துவது?
இரணகள்ளிச் செடியிலிருந்து மிகவும் துளிரான இலையைத் (இது செடியின் மிகச் சிறிய இலையாக இருக்கும்) தேர்ந்தெடுத்து காலையில் சாப்பிட்டு ஒரு கோப்பைத் தண்ணீர் அருந்தவும். இரண்டாவது நாள், சற்றே பெரிய இலையை (இது முதல் நாள் எடுத்த இலைக்குக் கீழ் இருக்கும்) சாப்பிட்டு ஒரு கோப்பைத் தண்ணீர் அருந்தவும். அடுத்தடுத்து, மொத்தமாக ஏழு நாட்களுக்கு ஒவ்வொரு இலையாக, ஒன்றை விட அடுத்தது பெரிதானதாக சாப்பிட்டுத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
கர்ப்பப்பை பிரச்சினைகளுக்கு இரணகள்ளியை எப்படி பயன்படுத்துவது?
சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கு பயன்படுத்தும் முறையையே இதற்கும் பயன்படுத்த வேண்டும். ஆனால், காலை, மாலை என இரு வேளைகள் ஏழு நாட்களுக்கு சாப்பிட்டு வர வேண்டும்.
இவை மட்டுமல்ல,
உங்கள் தோட்டத்தில் உள்ள பிற செடிகளைப் பூச்சி அண்டாமல் இருக்க இரணகள்ளியின் சாறைத் தெளித்தால் போதும்.
இரணகள்ளியின் மணம் தீய உயிரினங்களை எட்டியே வைக்கிறது.
குறிப்பு
இந்த இலையைத் தொடும்போது சிறிது அரிப்பும் தடிப்பும் ஏற்படலாம்.
இரணகள்ளி தேநீரின் பலன்கள்
இரணகள்ளியின் பலன்களைப் படித்த பின் அதைத் தேநீராகக் குடிக்கா விட்டால் எப்படி? இதோ உங்களுக்காக, இரணகள்ளி தேநீர் தயாரிக்கும் முறை:
செய்முறை
- மூன்று முதல் அய்ந்து இரணகள்ளி இலைகளையும் இளம் தண்டுகளோடு பறித்து சுத்தம் செய்து, சற்றுக் கசக்கி ஒரு கோப்பைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் தீயைக் குறைத்து மேலும் சில நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
- அடுப்பை அணைத்து, சிறிது நேரத்துக்குத் தண்ணீரை மூடி வைக்கவும்.
- வடிகட்டி, தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துப் பருகவும்.
பலன்கள்
- சளி, இருமல் ஆகியவற்றைப் போக்குகிறது
- மூச்சுக் கோளாறுகளை சரி செய்கிறது
- அசீரணக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது
- தலைவலியைப் போக்குகிறது
- இரத்தத்தை சுத்தம் செய்கிறது
- வயிற்றுப் போக்கை சரி செய்கிறது
- சிறுநீரகக் கற்களைக் கரைக்கிறது
- கல்லீரலைப் பாதுகாக்கிறது
- அதிக இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
- தசைகளுக்குப் புத்துணர்வு ஊட்டுகிறது
- மூல நோயைக் குணப்படுத்த உதவுகிறது
- சிறுநீர், மலம் வெளியேற்றத்துக்கு உதவுகிறது
- கூந்தல் நலத்தைப் பாதுகாக்கிறது

இரமா தமிழரசு
வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். பல்வேறு நோய்களுக்கான யோகப்பயிற்சிகள், இயற்கை முறையில் நோய் தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் e-புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://hiiamchezhi.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.