உடல் மன ஆரோக்கியம்

புதினாவின் பலன்கள்

வீட்டில் மிக மிக எளிதாக வளரக் கூடிய மூலிகைச் செடிகளில் புதினாவும் ஒன்று. சொல்லப் போனால் புதினா உங்கள் தோட்டத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்கு வளரக் கூடியது. புதினாவில் 600-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இன்றைய மூலிகைப் பக்கத்தில் பொதுவாகக் காணக்கூடிய புதினாவைப் பற்றிப் பார்க்கலாம். இது ஆங்கிலத்தில் peppermint என்று அழைக்கப்படுகிறது.

புதினாவின் தன்மைகள்

புதினாவில் 40%-க்கும் சற்று அதிகமாக உள்ள மென்தால் அதன் மருத்துவ குணங்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். புதினாவின் தன்மைகளில் சில:

  • Antibacterial (பாக்டீரியாவை அழித்தல் மற்றும் தடுத்தல்)
  • Anti-inflammatory (வீக்கம், வலி போக்குதல்)
  • Antiviral (வைரஸை அழித்தல் மற்றும் தடுத்தல்)
  • Analgesic (வலியைக் குறைத்தல்)
  • Antispasmodic (தசைப்பிடிப்புகளைப் போக்குதல் மற்றும் தவிர்த்தல்)
  • Antipruritic (அரிப்பைப் போக்குதல்)
  • Antiseptic (கிருமிகள் தாக்காமல் தடுத்தல்)
  • Antifungal (fungi-யை அழித்தல் மற்றும் தடுத்தல்)
  • Anaesthetic (வலியை உணர வைக்காதிருத்தல்)
  • Antiulcer (அல்சர் ஏற்படாமல் தடுத்தல்)
  • Expectorant (சளியை வெளியேற்றுதல்)

 

புதினாவின் மருத்துவ குணங்கள்

நம் சமையலில் பல பரிமாணங்கள் எடுக்கும் புதினாவின் மருத்துவ குணங்களில் சில:

  • சளி, இருமலைப் போக்குகிறது
  • அசீரணத்தைச் சரி செய்கிறது
  • வாய்வு, உப்புசம் போன்ற அசீரணக் கோளாறுகளைச் சரி செய்கிறது
  • வாந்தி மற்றும் வாந்தி ஏற்படும் உணர்வை சரி செய்கிறது
  • மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளைப் போக்குகிறது
  • தலைவலியைப் போக்க உதவுகிறது
  • பற்களின் நலனைப் பாதுகாக்க உதவுகிறது; பல் சொத்தையைப் போக்க உதவுகிறது
  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் மார்பகக் காம்புகளில் ஏற்படும் வெடிப்பு மற்றும் வலியைப் போக்க புதினா எண்ணெய் உதவுகிறது
  • சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பைப் போக்குகிறது
  • தசைப்பிடிப்பைப் போக்க உதவுகிறது
  • நினைவாற்றலை அதிகரிக்கிறது
  • மன அழுத்தத்தைப் போக்குகிறது
  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்