Yoga Pose for Day 55 - Revolved Triangle Pose (Parivrtta Trikonasana)

வடமொழியில் ‘பரிவ்ருத்த’ என்ற சொல்லுக்கு ‘சுற்றி’ என்றும், ‘த்ரி’ என்றால் ‘மூன்று’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். திரிகோணாசனத்தின் ஒரு வடிவமே பரிவ்ருத்த திரிகோணாசனம் ஆகும். இந்த ஆசனத்தில் கையைச் சுற்றி வந்து மறுபக்க காலைப் பிடிப்பதால் இந்தப் பெயர் பெற்றது. ஆங்கிலத்தில் இது Revolved Triangle Pose என்று அழைக்கப்படுகிறது. திரிகோணாசனத்தில் கூறப்பட்டுள்ளது போல், பரிவ்ருத்த திரிகோணாசனம் செய்வதாலும் மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரகச் சக்கரங்கள் தூண்டப் பெறுகின்றன. இதன் காரணமாக நிலையான […]
Yoga Pose for Day 54 - Triangle Pose (Trikonasana)

நின்று செய்யும் ஆசனங்களில் இன்று நாம் பார்க்கவிருப்பது திரிகோணாசனம். வடமொழியில் ‘த்ரி’ என்றால் ‘மூன்று’, ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்று பொருள். திரிகோணாசனத்தில் உடலில் மூன்று கோணங்கள் ஏற்படுவதால் இது இப்பெயர் பெற்றது. இது ஆங்கிலத்தில் Triangle Pose என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெயரின் பின்னால் வேறு ஒரு காரணமும் இருக்கிறது. முக்கோண வடிவம் என்பது நிலையான தன்மைக் கொண்டதாகக் காலம் காலமாகக் கருதப்பட்டு வருகிறது. மூன்று என்ற எண் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று […]
Yoga Pose for Day 53 - Half Triangle Pose (Ardha Trikonasana)

நின்று செய்யும் ஆசனங்களில் இன்று நாம் பார்க்கவிருப்பது அர்த்த திரிகோணாசனம். பக்கவாட்டில் வளையும் ஆசனங்களில் சுலபமானதான இந்த ஆசனம் அடுத்து வரவிருக்கும் திரிகோணாசனத்திற்கும் ஏனைய பக்கவாட்டில் வளையும் ஆசனங்களுக்கு நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும் உதவும். அர்த்த திரிகோணாசனத்தின் பலன்கள் முதுகுத்தண்டு பக்கவாட்டில் வளைவதால் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது முதுகு வலியைப் போக்க உதவுகிறது கைகளைப் பலப்படுத்துகிறது இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையும் கூடுகிறது கால்களை நீட்சியடைய வைக்கிறது செய்முறை தாடாசனத்தில் நிற்கவும். இரண்டு கால்களுக்கு இடையில் சுமார் ஒன்றரை முதல் […]
Yoga Pose for Day 52 - Half Waist Wheel Pose (Ardha Kati Chakrasana)

நாம் முன்னர் அர்த்த சக்ராசனம் என்ற நின்று பின்னால் வளையும் ஆசனத்தைப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது அர்த்த கடி சக்ராசனம். வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘கடி’ என்றால் ‘இடுப்பு’. இந்த ஆசனத்தில் இடுப்பைப் பக்கவாட்டில் வளைப்பதால் இந்தப் பெயர் பொருத்தமாகிறது. இது ஆங்கிலத்தில் Half Waist Wheel Pose என்று அழைக்கப்படுகிறது. அர்த்த கடி சக்ராசனத்தில் இடுப்புப் பகுதி பலம் பெறுவதோடு இடுப்பில் உள்ள அதிக சதை கரைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தில் மூலாதார சக்கரமும் […]
Yoga Pose for Day 51 - Half Prayer Twist Pose (Ardha Namaskar Parsva Konasana)

வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘நமஸ்கார்’ என்றால் ‘வணக்கம்’, ‘பார்சுவ’ என்றால் ‘பக்கவாட்டு’, ‘கோணா’ என்றால் ‘கோணம்’ என்று பொருள். அதாவது, இந்த ஆசனத்தில் பக்கவாட்டு கோணத்தின் அரை நிலையில் இருக்க வேண்டும், அதாவது பாதி பார்சுவ கோணாசனம். இது ஆங்கிலத்தில் Half Prayer Twist Pose என்று அழைக்கப்படுகிறது. அர்த்த நமஸ்கார் பார்சுவ கோணாசனத்தில் மணிப்பூரக சக்கரம் தூண்டப்படுகிறது. மணிப்பூரக சக்கரம் பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கிறது. நம்முள் இருக்கும் ஆற்றலை வெளிக் கொணருகிறது. தன்மதிப்பு, தன்னம்பிக்கை […]