Yoga Pose for Day 22 – Hero Pose (Virasana)

பெயரிலேயே புரிந்திருக்கும், இது வீரம் பெறக் கூடிய ஆசனம். பயத்திற்கு எதிர்ப்பதம் வீரம். பொதுவாக பயம் அதிகமானால் கை, கால்கள் நடுங்கும். பதட்டமும் கூடவே தொற்றிக் கொள்ளும். அதன் எதிர்விளைவாக கோபமும் வரும். தொடர்ந்து பல பிரச்சினைகளை கொண்டு வரும். நாம் பலமானவர்களாக இல்லாதிருப்பதாக எண்ணிக் கொள்வதாலேயே இவையெல்லாம் வருகிறது. அந்த பயத்தைப் போக்கி பலமானவர்களாக நம்மை உணர வைப்பது இந்த வீராசனம். எப்படி? இந்த நிலையை தொடர்ந்து செய்யும் போது கணுக்கால்கள், மூட்டுகள், இடுப்பு, கழுத்து […]
Yoga Pose for Day 21 – High Plank Pose (Kumbhakasana)

இதுவரை நாம் செய்து வந்த ஆசனங்கள் உடலின் சில பகுதிகளை பலப்படுத்தவையாக இருந்தது. இந்த ஆசனம் உடலின் அனைத்து பகுதிகளையும் பலப்படுத்துகிறது. ‘கும்பக’ என்றால் ‘கொள்கலன்’. இந்த உடல் என்னும் கொள்கலனில் இரத்தமும் பிராணசக்தியும் ஊற்றுவதற்கான ஆசனம் இது என்று பொருள். இந்த நிலையில் நிற்கும்போது உடல் முழுதும் இரத்தமும், உயிர் சக்தியும் பாய்ச்சப்பட்டு கொள்கலன் நிறைகிறது. மணிக்கட்டு, கைகள், தோள்கள், முதுகு, முதுகுத்தண்டு, இடுப்பு, புட்டம், தொடை, முட்டி, முழங்கால், கணுக்கால், விரல்கள் என உடல் […]
Yoga Pose for Day 20 – Wind Relieving Pose (Pavana Mukthasana)

தனுராசனத்துக்கு மாற்றாக செய்யப்படுவது பவன முக்தாசனம். காற்று விடுவிக்கும் நிலை (Wind Relieving Pose) என்று இதற்கு பொருள். மனித உடலில் வருகின்ற நோய்கள் என்பது 4448 என்று நமது முன்னோர்களான சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்றைக்குள்ள நோய்கள் வரை அத்தனையும் இதில் அடக்கம் என்கின்றனர். இந்த 4448 நோய்களுக்கும் அடிப்படையான பிணிகள் இரண்டுதான் – ஒன்று, மலச்சிக்கல்; இரண்டு, செரியாமை. அதனால்தான், மலச்சிக்கலும் செரியாமையும் ஆதி நோய்கள், மற்றவையெல்லாம் மீதி நோய்கள்” என்றனர் சித்தர்கள். உடலின் நடுப்பகுதியை […]
Yoga Pose for Day 19 – Bow Pose (Dhanurasana)

நாம் முன்னர் நின்ற தனுராசனம் பற்றிப் பார்த்திருக்கிறோம். இப்பொழுது நாம் பார்க்க இருப்பது, பிடிலாசனத்தின் மாற்று ஆசனமான தனுராசனம். இதை படுத்த நிலையில் செய்ய வேண்டும். நின்ற தனுராசனம் போலவே தனுராசனத்தை பயிற்சி செய்வதன் மூலம் முதுகுத் தண்டின் ஆரோக்கியத்தையும் நெகிழ்வுத் தன்மையையும் பாதுகாக்கலாம். தனுராசனம் ஆங்கிலத்தில் Bow Pose என்று அழைக்கப்படுகிறது. தனுராசனத்தின் மேலும் சில பலன்கள் நுரையீரலை பலப்படுத்தி மூச்சுக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது. வயிற்றில் உள்ள அதிகக் கொழுப்பைக் கரைக்கிறது. வயிற்று […]
Yoga Pose for Day 18 – Cow Pose (Bitilasana)

இந்த ஆசனம் பூனை நிலைக்கு மாற்று ஆசனமாகும். ‘பிடிலா’ என்றால் ‘பசு’ என்று அர்த்தம். இந்த நிலையில் இருப்பது ஒரு மாட்டின் உடலமைப்பை ஒத்து இருக்கும். பூனை / மாடு நிலை (cat / cow pose) என்பது நாணயத்தின் இரு பக்கங்கள் போல. இரண்டும் சேர்ந்துதான் சிறப்பான பலன்களைத் தரும். முதுகுத்தண்டு உள்புறமாகவும் மேல்புறமாகவும் அழுத்தி உயர்த்தப்படுவதால் முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மை அதிகமாகிறது. முதுகுப் பகுதி முழுவதும் புத்துணர்வு பெறுகிறது. முக்கிய குறிப்பு: பஸ்சிமோத்தானாசனம் செய்த பின் […]