Yoga Pose for Day 12 – Downward Facing Dog Pose (Adho Mukha Svanasana)

வஜ்ஜிராசனத்துக்கு மாற்றாக அதோ முக ஸ்வானாசனம் செய்யப்படுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் Downward Facing Dog என்று பெயர். சரியாக சொன்னால், அதோ என்றால் downward – கீழ் நோக்கி முக என்றால் face – முகம் ஸ்வானா என்றால் dog – நாய் ஆசனம் என்றால் posture – நிலை அதாவது, Downward Facing Dog Pose. தமிழில், முகம் கீழ் நோக்கிய நாய் நிலை. இதில், நாய்க்கும் ஆசனத்துக்கும் என்ன தொடர்பு என்று முதலில் புரியவில்லை. […]
Yoga Pose for Day 11 – Thunderbolt Pose (Vajrasana)

நின்றது போதும். சற்று உட்காருவோம். அதாவது, உட்கார்ந்து செய்யும் ஆசனங்கள் சிலவற்றை இனி செய்வோம். ஏற்கனவே அமர்ந்து செய்யும் ஒரு ஆசனத்தை நாம் பார்த்துள்ளோம். ஆம், பத்மாசனம்தான். பத்மாசனத்தை போலவே ஒரு சிறப்பு வாய்ந்த ஆசனம்தான் வஜ்ஜிராசனம். வஜ்ஜிரம் என்றால் வைரம் ஆகும். இவ்வாசனத்தை செய்தால் வஜ்ஜிரம், அதாவது, வைரம் போல உறுதியான உடல் கிடைக்கும் என்றே பொதுவாக இதன் பலன்களை குறிப்பிடும்போது கூறுவார்கள். ஆனால், இப்பெயருக்கு இது மட்டுமே காரணமல்ல. வஜ்ஜிரம் என்றால் மரத்தின் நடுப்பகுதி […]
Yoga Pose for Day 10 - Standing Bow Pose

இன்று நாம் பார்க்கவிருப்பது நின்ற தனுராசனம். இதை ப்ரசாரித பாதோத்தானாசனத்திற்கு மாற்று ஆசனமாகச் செய்யலாம். தனுராசனம் என்றால் வில் நிலை ஆகும். இதை குப்புறப்படுத்தும் செய்யலாம். நின்ற நிலையிலும் செய்யலாம். இவ்வாசனத்தின் பலன்கள் நம்மை பிரமிப்படைய வைக்கிறது. இந்த ஆசனத்தைச் செய்வதனால் இரத்த ஓட்டம் செழுமையடையும், நரம்பு வீரியமாகும். உடலின் அணுக்கள் புதுப்பிக்கப்பட்டு இளமை ஓங்கியிருக்கும். இவ்வளவு உயர்ந்த நன்மைகள் நமக்கு இந்த ஆசனத்தின் மூலம் கிடைக்க என்ன காரணம்? முதலில் அதை புரிந்து கொள்வோம். முதலில் […]
Yoga Pose for Day 9 – Arc of the Moon Pose (Pirai Asana)

பின் வளையும் ஆசனங்களில் இன்று நாம் செய்யவிருப்பது பிறையாசனம். இந்த நிலையில் உடல் பிறை வடிவத்தில் காணப்படும். இந்த ஆசனம் இடுப்புக்கு வலிமையையும், வனப்பையும் அளிக்கக் கூடிய ஆசனமாகும். பாதஹஸ்தாசனத்திற்கு இதை மாற்றாக செய்யலாம். பாதஹஸ்தாசனத்தில் பாதங்களுக்குக் கீழ் வைக்கப்படுவதால் கைகள் இழுக்கப்படுவது பிறையாசனத்தில் கைகளை உயர்த்தி வளைவதால் தளர்த்தப்படுகிறது. கைகளை நேராக உயர்த்தி வளையும் போது தோள்பட்டை முதல் விரல் வரை கைகளின் உள்பக்கம் இழுக்கப்படுகிறது. உடலில் முக்கியமான இயக்கங்களான இருதயம், நுரையீரல் இரண்டுக்கும் சக்தி […]
Yoga Pose for Day 8 – Half-Wheel Pose (Ardha Chakrasana)

நின்று பின்வளையும் ஆசனங்களின் வரிசையில் இன்று நாம் செய்யவிருப்பது அர்த்த சக்ராசனம், அதாவது பாதி சக்கர நிலை. இது ஆங்கிலத்தில் Half-Wheel Pose என்று அழைக்கப்படுகிறது. இதை பாதாங்குஸ்தாசனத்துக்கு (Big Toe Pose) மாற்றாக செய்யலாம். முன் குனிவதால், கால்களின் பின்பக்கம் (hamstring) இழுக்கப்படுவது இந்த ஆசனத்தில் தளர்த்தப்படுகிறது. மேலும் முன்பக்க கால் தசைகள் இழுக்கப்பட்டு கால்களுக்கு நல்ல இரத்த ஓட்டமும் பலமும் உருவாகிறது. அர்த்த சக்ராசனத்தில் நிற்கும்போது காலிலிருந்து இடுப்பு வரை அப்படியே நிற்க வேண்டும். இடுப்பிலிருந்து […]