Yoga Pose for Day 7 – Upward Salutation Pose (Urdhva Namaskarasana)

நாம் முன்னர் குறிப்பிட்டிருந்தபடி முன் குனிந்து செய்த ஆசனங்களுக்கு மாற்று ஆசனங்களை பார்க்கவிருக்கிறோம். அதாவது, பின் நோக்கி வளையும் ஆசனங்கள் ஆகும். அதில் இப்போது உத்தானாசனத்துக்கு மாற்றாக நாம் செய்யவிருப்பது ஊர்த்துவ நமஸ்காராசனம். இது ஆங்கிலத்தில் Upward Salutation Pose என்று அழைக்கப்படுகிறது. ஊர்த்துவ என்றால் “மேல் நோக்கும்” என்று பொருள். கைகளை மேல் தூக்கி இடுப்பை பின் வளைத்து நிற்பது. முன் குனிந்து ஆசனம் செய்யும் போது, முன் இடுப்பு பூட்டப்பட்டு இரத்த ஓட்டம் பின் […]

Yoga Pose for Day 6 – Mountain Pose (Tadasana)

இதுவரை நாம் பயின்றது நின்று முன் குனியும் ஆசனங்கள். ஒழுங்கமைக்கப்பட்ட வடிவில் முன் குனிந்து பழக வேண்டிய நான்கு ஆசனங்கள் வரிசையாக முன் குனிபவையாக முதலில் பயின்றோம். ஒவ்வொரு ஆசனமும் அதன் எதிர் ஆசனத்தால்தான் முழுமையடைகிறது எனலாம். முன் குனிந்து ஒரு நிலையை செய்த பின், பின் வளைந்து ஒரு ஆசனத்தை செய்யும்போதுதான் இடுப்புப்பகுதி முழுமைக்கும் சக்தி கிடைக்கும். ஆக, நாம் பயின்ற இந்த அய்ந்து ஆசனங்களுக்கும் மாற்று ஆசனத்தை இன்று பார்க்கப் போகிறோம். முதலில் நாம் […]

Yoga Pose for Day 5 – Wide-Legged Forward Bend (Prasarita Padottanasana)

நின்று முன் குனியும் ஆசன வரிசையில் சற்று வித்தியாசமான முறையில் செய்வது Wide-Legged Forward Bend என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த ப்ரசாரித பாதோத்தானாசனம். “ப்ரசாரித” என்றால் “வெளிப்புறம் விரித்தல்” ஆகும், “பாதா” என்றால் “பாதம்”, “உட்” என்றால் “ஆற்றல்”, “தான்” என்றால் “விரித்தல்”, “ஆசனம்” என்றால் “நிலை”. ஆற்றல் வாய்ந்த கால் விரித்த நிலையில் பாதத்தை பிடித்து நீளும் நிலை. இதுவரை நாம் பார்த்தது கால்கள் சேர்ந்த அல்லது சிறிது இடைவெளி விட்டு நின்ற நிலையில் […]

Yoga Pose for Day 4 – Hand Under Foot Pose (Padahastasana)

முன் குனிந்து செய்யும் ஆசனங்களில் சற்று கூடுதல் கடினமானது பாதஹஸ்தாசனம். “பாதம்” என்றால் “கால்”; “அஸ்தா” என்றால் “கை”. பாதமும் கைகளும் இணைவது என்று பொருள். இது ஆங்கிலத்தில் Hand Under Foot Pose என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன் நாம் பார்த்த முன் குனிந்து செய்யும் ஆசனங்களின் பொதுவான பலன் இதற்கும் உண்டு எனினும் குறிப்பாக சில சிறப்புகளை இவ்வாசனம் பெற்றுள்ளது. முதலில் செய்முறையை பார்ப்போம். அப்போதுதான் இதன் முழு விளக்கத்தை புரிந்து கொள்ள முடியும். […]

English (UK)