Yoga Pose for Day 84 - Half Plough Pose (Ardha Halasana)

வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’ என்றும் ‘ஹலா’ என்றால் ‘ஏர் கலப்பை’ என்றும் பொருள். இவ்வாசனத்தில் ஏர் கலப்பை வடிவின் பாதி நிலையில் இருப்பதால் அர்த்த ஹலாசனம் என்று அழைக்கப்படுகிறது. அர்த்த ஹலாசனத்தில் மணிப்பூரக சக்கரம் தூண்டப்படுவதால் பிரபஞ்ச ஆற்றலைக் கவரும் திறன் வளர்கிறது; தன்மதிப்பு வளர்கிறது; தன்னம்பிக்கை வளர்கிறது. அர்த்த ஹலாசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது வயிற்று உள்ளுறுப்புகளை பலப்படுத்துகிறது வயிற்றுத் தசைகளைப் பலப்படுத்துகிறது மலச்சிக்கலைப் போக்குகிறது தொப்பையை கரைக்கிறது இடுப்புப் பகுதியை […]

Yoga Pose for Day 83 - One-Legged Bridge Pose (Eka Pada Setubandhasana)

நேற்றைய பதிவில் நாம் சேதுபந்தாசனம் பற்றிப் பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது ஏக பாத சேதுபந்தாசனம். இது ஆங்கிலத்தில் One-Legged Bridge Pose என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் ‘ஏக’ என்றால் ‘ஒன்று’, ‘பாத’ என்றால் ‘கால்’, ‘சேது’ என்றால் ‘பாலம்’ மற்றும் ‘பந்த’ என்றால் ‘பிணைக்கப்பட்ட’ என்று பொருள். இவ்வாசனத்தில் ஒற்றைக்காலை உயர்த்தி சேதுபந்தாசனம் பயில்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் One-Legged Bridge Pose என்று அழைக்கப்படுகிறது. ஏக பாத சேதுபந்தாசனம் பயில்வதால் மூலாதாரம், மணிப்பூரகம், […]

Yoga Pose for Day 82 - Bridge Pose (Setubandhasana)

படுத்து செய்யும் ஆசனங்களில் எளிமையான, அதே நேரத்தில் மிகுந்த பலன்களைத் தரும் ஆசனங்களில் சேதுபந்தாசனமும் ஒன்று. வடமொழியில் ‘சேது’ என்பதற்கு ‘பாலம்’ என்றும் ‘பந்த’ என்பதற்கு ‘பிணைக்கப்பட்ட’ என்றும் பொருள். உள்புற அழுத்தம் மற்றும் வெளிப்புறம் இழுக்கும் ஆற்றலும் ஒரு பாலத்தை பலமாக வைக்க உதவுவது போல், சேதுபந்தாசனத்தில் வயிற்றுப் பகுதி அழுத்தம் பெறுவதோடு முதுகுத்தண்டு பகுதி நீட்சியடைந்து உடல் பலம் பெறுகிறது. சேதுபந்தாசனம் ஆங்கிலத்தில் Bridge Pose என்று அழைக்கப்படுகிறது. சேதுபந்தாசனத்தில் மூலாதாரம், மணிப்பூரகம், அனாகதம், […]

30 Simple Standing Yoga Poses for Beginners

இதுவரை நாம் பார்த்த ஆசனங்களில் ஆரம்பக்கட்ட பயிற்சியாளர்களுக்கான நின்று செய்யும் ஆசனங்களை இப்பதிவில் தொகுத்திருக்கிறோம். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு ஆசனத்தின் செய்முறை மற்றும் பலன்களை நீங்கள் அறிவீர்கள்.  நின்று செய்யும் ஆசனங்களின் பொதுவான பலன்கள் என்ன என்று பார்ப்போம். (ஆரம்பகட்ட பயிற்சியாளர்களுக்கான 19 எளிய அமர்ந்த நிலை ஆசனங்கள் பற்றிய பதிவைப் பார்க்க, இங்கே click செய்யவும்). நின்று செய்யும் ஆசனங்களின் பொதுவான பலன்கள்: கால் தசைகளையும் மூட்டுக்களையும் பலப்படுத்துகின்றன உடல் முழுவது ஆற்றலைப் பெருக்குகின்றன நுரையீரலைப் […]

Yoga Pose for Day 81 - Lotus Peacock Pose (Padma Mayurasana)

கடந்த சில நாட்களுக்கு முன் நாம் மயூராசனம் செய்வது எப்படி என்று பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது பத்ம மயூராசனம்; அதாவது பத்மாசன நிலையில் காலை வைத்து மயூராசனம் செய்வது எப்படி என்று பார்க்கவிருக்கிறோம். ‘பத்ம’ என்றால் ‘தாமரை’ என்றும் ‘மயூர’ என்றால் ‘மயில்’ என்றும் பொருள் என்று நாம் அறிவோம். இதற்கு ஆங்கிலத்தில் Lotus Peacock Pose என்று பெயர். பத்ம மயூராசனம் மணிப்பூரக சக்கரத்தைத் தூண்டி அதன் செயல்பாட்டினை மேம்படுத்துகிறது. மணிப்பூரகம் தூண்டப்படுவதால் தன்னம்பிக்கை, […]

English (UK)