Yoga Pose for Day 66 - Gate Pose (Parighasana)

‘பரிக’ என்ற வடமொழி சொல்லின் பொருள் ‘உத்திரம்’ அல்லது ‘கதவை மூடப் பயன்படும் கட்டை’ என்பதாகும். இது ஆங்கிலத்தில் Gate Pose என்று அழைக்கப்படுகிறது. உத்திரம் என்பது எப்படி ஒரு கட்டடத்துக்கு இன்றியமையாததோ, அது போல் பரிகாசனம் செய்வதும் உடல் நலத்துக்கு இன்றியமையாததாகும். இவ்வாசனத்தில் உடல் முழுதும் நீட்சியடைவதோடு மூலாதாரம், மணிப்பூரகம், அனாகதம், ஆக்ஞா மற்றும் குரு சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. பரிகாசனத்தைத் தொடர்ந்து பழகும் போது நிலையான தன்மை வளர்கிறது. பரிகாசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுத்தண்டை […]