உடல் மன ஆரோக்கியம்

சாவ்லா – ஒரு அழகிய வரலாறு ஆபத்தின் விளிம்பில்

இயற்கையின் படைப்பில் மனிதன் அறிந்திராத அற்புதங்கள் ஏராளம் என்பதற்கான சிறு உதாரணமாக இருப்பதுதான் சாவ்லா (Saola). 1992 வரை இப்படி ஒரு விலங்கு இருப்பதையே இந்த உலகம் அறிந்திருக்கவில்லை.  லாவோஸ் மற்றும் வியட்நாம் எல்லைகளில் அமைந்துள்ள அன்னமைட் மலைகளின் அடர்ந்த காடுகளில், உலகிலேயே மிகவும் அபூர்வமான இந்த விலங்கு வாழ்ந்து வாழ்கிறது. 

சாவ்லா என்ன வகையான விலங்கு?

சாவ்லாவின் அறிவியல் பெயர்: Pseudoryx nghetinhensis.

இது மாடு மற்றும் மான் வகையான  விலங்குகளுடன் தொடர்புடைய Bovidae குடும்பத்தைச் சேர்ந்தது.

1992ம் ஆண்டு தான் முதன்முறையாக விஞ்ஞானிகள் இது போன்ற விலங்கு இருப்பதையே கண்டறிந்தனர்.

இது அன்னமைட் மலைத் தொடர்களில் மட்டுமே காணப்படும் ஒரு அகணிய (endemic) விலங்காகும்.

ஏன் சாவ்லாவை “ஆசிய யூனிகார்ன்” என்று அழைக்கிறார்கள்?

சாவ்லாவிற்கு இரண்டு நீளமான, நேராக இருக்கும் கொம்புகள் இருப்பினும், அது மிக அரிதாக காணப்படும்  விலங்கு என்பதாலேயே “ஆசிய யூனிகார்ன்” என்று அழைக்கப்படுகிறது. பல வருடங்களாக மக்கள் இதைப் பற்றி அறிந்திருந்தாலும், உலகம் முழுவதும் இது அறியப்படுவதற்கு ஒரு விலங்கின் தலைக்கோப்பு 1992ல் கண்டுபிடிக்கப்பட்டதுதான் காரணம்.

சாவ்லா குறித்த முக்கிய தகவல்கள்

  1. மிகவும் மறைந்திருக்கும் தன்மை உடையது – இதுவரை விஞ்ஞானிகள் இது காட்டில் நடமாடுவதை நேரில் பார்த்ததில்லை!

  2. அழிவின் விளிம்பில் இருக்கும் நிலை – எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே உள்ளதால், மிகக் கடுமையான அழியும் நிலையில் இருப்பதாக (Critically Endangered) வகைப்படுத்தப்பட்டுள்ளது.

  3. தனித்துவம் வாய்ந்த மரபணுக்கள் – தனக்கே உரிய பேரினத்தில் (Genus) உள்ள ஒரே உயிரினம்!

  4. சார்ந்த இனங்கள் கிடையாது – காண்பதற்கு மான் போன்று இருந்தாலும், மரபணு அடிப்படையில் இது தனித்துவமானது.

  5. அச்சுறுத்தல்கள் – சாவ்லா வேட்டையாடப்படுவதில்லை என்றாலும் காட்டில் வைக்கப்படும் கண்ணிகளால் தற்செயலாக பலியாகி விடுகின்றது.

  6. காடுகளுக்கான தூது விலங்கு – இது காடுகள் பாதுகாப்புக்கான முக்கியமான குறியீட்டுச் சின்னமாக விளங்குகிறது.

சாவ்லா குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்?

பரிணாம வளர்ச்சியின் வரலாற்றின் ஒரு அங்கமாக விளங்கும் சாவ்லாவைப் பாதுகாப்பதன் மூலம் நாம் அந்தக் காடுகளையும், அங்குள்ள பிற உயிரினங்களையும், மற்றும் அப்பகுதியில் வாழும் மக்களின் பாரம்பரிய அறிவையும் பாதுகாக்கிறோம்.

நாம் என்ன செய்யலாம்?

  • Saola Foundation, WWF போன்ற அமைப்புகளை ஆதரிக்கலாம்.

  • இந்த விலங்கைப் பற்றி அறிந்து, மற்றவர்களுடன் பகிர்ந்து, கவனம் செலுத்தச் செய்யலாம்.

  • பசுமைச் சுற்றுலா மற்றும் சூழலுக்கு ஆதரவான பொருட்களை விரும்புவோம்.


📌 உலகமே அறியாத இந்த அற்புத உயிரினம் மாயமடையும் முன், நாம் அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, இவ்வுலகில் அந்த விலங்கிற்கான இடத்தை உத்தரவாதப்படுத்துவோம்.


நீங்கள் சாவ்லா பற்றி இதற்கு முன் கேட்டிருக்கிறீர்களா? உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சேனலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்