உடல் மன ஆரோக்கியம்

நம் தினசரி பழக்கங்கள் விலங்குகளைக் கொல்வதை நாம் அறிவோமா?– விலங்குகளைக் காக்க உதவும் இந்த 5 எளிய மாற்றங்கள்

விலங்குகளைக் கொல்லும் நம் தினசரி பழக்கங்கள் பற்றியும் நாம் உடனடியாக செய்ய வேண்டிய 5 எளிய மாற்றங்கள் பற்றியும் இந்தக் கட்டுரை விளக்குகிறது.

ஒரு Amazon affiliate-ஆக, இந்தப் பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்களில் தகுதி பெறும் விற்பனைகள் மூலமாக எனக்கு ஒரு சிறு தொகை கிடைக்கும்.

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளும் — அது பையோ, பாட்டிலா, ஸ்ட்ராஃவா —அது ஆற்றிலோ, கடலிலோ, காட்டிலோ கலந்து விடும். எங்கே அது கலந்தாலும், விலங்குகளுக்கான பாசக்கயிற்றை வீசி உயிரை எடுத்து விடும்.

இந்தக் காலக்கட்டத்தில், ஒரு சிறிய மாற்றமே ஒரு உயிரைக் காப்பாற்றும்.
ஒவ்வொரு மாற்றமும் பிளாஸ்டிக் குப்பையை குறைத்து, விலங்குகளை பாதுகாக்க பெரிதும் உதவும்.

பிளாஸ்டிக் எப்படி விலங்குகளுக்கு ஆபத்தாகிறது?

பிளாஸ்டிக் அழியாது. அது மிகச் சிறிய துகள்களாக உடைந்து, அதாவது மைக்ரோபிளாஸ்டிக்காக ஆகி, இயற்கையை மாசுபடுத்துகிறது. இந்த மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் மீன்கள், பறவை, கரடி போன்ற பல விலங்குகளின் உடலுக்குள் சென்று விடுகிறது.

ப்ளாஸ்டிக் பொருட்களால் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள்:

  • கடல் ஆமைகள், பிளாஸ்டிக் பைகளை ஜெல்லி மீன்கள் என எண்ணி விழுங்கி விடுகின்றன — இதுவே கடற்கழுதைகளின் உயிரிழப்புக்குக் காரணமாகி விடுகிறது.

  • பறவைகள், பிளாஸ்டிக்குத் துண்டுகளைத் தங்களின் குட்டிகளுக்கு உணவாகத் தருகின்றன.

  • வனங்களில் வாழும் மான், யானை போன்ற விலங்குகள் சுற்றுலா பயணிகள் வீசிப் போடும் பிளாஸ்டிக் குப்பைகளை விழுங்குகின்றன.

  • பவளப்பாறைகள் பிளாஸ்டிக் கழிவுகளால் மூடப்பட்டு அழிகின்றன.

இந்த நிலையை நம்மால் மாற்ற முடியும். நம்முடைய தினசரி வாழ்வில் நாம் செய்யக் கூடிய ஐந்தே மாற்றங்களால்.

இயற்கைக்கும் விலங்குகளுக்கும் உயிர் கொடுக்கும் 5 எளிய மாற்றங்கள்

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்துப் பொருட்களுமே ஆன்லைனில் கிடைக்கும். பயன்படுத்த எளிது, பயனும் அதிகம்.

1) மூங்கில் டூத்‌பிரஷ் 

ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான டூத்பிரஷ்கள் கழிவாகின்றன. மூங்கில் டூத்பிரஷ் இயற்கையில் மக்கும் தன்மை கொண்டது. பற்களுக்கும் ஆரோக்கியமானது.

அமேசானில் மூங்கில் டூத்பிரஷ் வாங்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

2) மீண்டும் பயன்படுத்தக்கூடிய பை (Reusable Bag)

ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகள் கடலில் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தக் கேன்வாஸ்/காட்டன் பைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு நீடித்து உழைக்கக் கூடியவை. தொடரக்கூடியவை.

மீண்டும் பயன்படுத்தக் கூடிய பைகளை வாங்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

குளிர்சாதனப் பெட்டிகளில் வைப்பதற்கு ஏற்ற பைகளை வாங்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

3) ஸ்டீல் ஸ்ட்ரா அல்லது கிளாஸ் ஸ்ட்ரா

கடல்களிலும் கடற்கரைகளிலும் முதன்மையாகக் காணப்படும் குப்பைகளில் ப்ளாஸ்டிக் ஸ்டிராவும் ஒன்று. ஸ்டீல் /கிளாஸ் ஸ்ட்ராக்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததோடு அழகாகவும், நீடித்தும் இருக்கும்.

ஸ்டீல் ஸ்ட்ரா வாங்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

கண்ணாடி ஸ்ட்ரா வாங்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

4) மக்கும் குப்பை பைகள் (Compostable Garbage Bags)

சாதாரண பிளாஸ்டிக் குப்பை பைகள் அழிந்து போக 500 வருடங்களுக்கும் மேலாக ஆகும். ஆனால் மக்கும் குப்பை பைகள் சுலபமாக மக்கி விடுவதால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகும்., இது இயற்கையை மாசுபடுத்தாது.

மக்கும் குப்பை பைகள் வாங்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

5) இயற்கையான சுத்தப்படுத்தும் பொருட்கள் 

பொதுவாக, பயன்பாட்டில் இருக்கும் சுத்தப்படுத்தும் பொருட்களில் இராசயனம் கலந்திருக்கும். இந்த இரசாயனம் நீர்வாழ் உயிர்களுக்கு நஞ்சாக அமைகின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்த சுத்தப்படுத்தும் பொருட்கள் உங்கள் குடும்பத்துக்கும் பாதுகாப்பானவை, இயற்கைக்கும் நன்மை செய்பவை.

சுற்றுச்சூழலுக்கு உகந்த, தரமான சுத்தப்படுத்தும் பொருட்கள் வாங்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

இந்த சிறிய மாற்றங்கள் என்ன செய்கின்றன தெரியுமா?

ஒரு சிறு மாற்றத்தின் மூலம் இயற்கையின் ஓர் உயிர் காப்பாற்றப்படுகிறது. ஒரு பாம்பூ பிரஷ், ஒரு ஸ்டீல் ஸ்ட்ரா, ஒரு பருத்தியிலான பை — இவை எல்லாம் நம் சுற்றுச்சூழல் மீது மிகப் பெரிய, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

நாம் செய்யும் இந்த மாற்றங்களால் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன என்பதுதான் நாம் இந்த பூமிக்குத் தரும் பரிசு.

நிறைவாக – இன்று ஒன்றையாவது துவங்குங்கள்!

இது வரையில், இத்தகைய பொருட்களைப் பயன்படுத்தாதிருந்தால், இன்று ஒரு பொருளையாவது மாற்றிப் பாருங்கள். உங்கள் வீட்டில் ஏற்படும் மாற்றம் நிச்சயமாக நம் பூமிக்கு புத்துயிர் அளிக்கும்.

இதை வாசிக்கும்படியும், பகிர்ந்து கொள்ளும்படியும் உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். yogaaatral-ற்கு உங்களை வரவேற்கிறோம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். உங்களுக்கு செல்லப்பிராணிகளைப் பிடிக்குமென்றால் https://voiceofapet.blogspot.com/ என்னும் எங்கள் செல்லப்பிராணி வலைதளத்திற்கும் https://www.youtube.com/@PetsDiaryPages என்கிற எங்களின் YouTube பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த எங்கள் YouTube சேனலான https://www.youtube.com/@letnaturelive1 உங்களை வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்