அழியும் அபாயத்தில் 7 இந்திய மருத்துவ மரங்கள்
சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற சில பண்டைய காலத்து இந்திய மருத்துவ முறைகளில் மரங்களுக்கு மிக முக்கிய பங்கிருந்தது. அமைதியான, அற்புதமான இந்த மரங்கள் மருத்துவத் தன்மை மிக்கவை. பல்வேறு நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் வாய்ந்த இந்த மருத்துவ குணம் மிக்க மரங்களுக்கு இந்த மண்ணோடு கலாச்சாரத் தொடர்பும் தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிறது. ஆனால், அவற்றுள் பல மரங்கள் இன்று ஆபத்தின் விளிம்பில் இருக்கின்றன. இந்தக் கட்டுரையில் 7 இந்திய மருத்துவ மரங்கள் பற்றியும் அவற்றின் முக்கிய மருத்துவ குணங்கள் மற்றும் அவற்றைக் காக்க நாம் என்ன செய்யலாம் என்பதைக் குறித்தும் பார்க்கலாம்.
1) அசோக மரம்
பலன்கள்
அசோக மரத்தின் பலன்களில் சில:
- மாதவிடாய் காலத்தில் அதீத இரத்தப் போக்கு, வலி மற்றும் சீரற்ற மாதவிடாய் உள்ளிட்ட மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
- வலி, வீக்கம் போன்றவற்றைப் போக்க உதவுகிறது.
- இரத்தத்தைச் சுத்தப்படுத்த உதவுகிறது
- சரும நலனை மேம்படுத்துகிறது
2) மருத மரம்
பலன்கள்
மருத மரத்தின் முக்கிய பலன்களில் சில:
- இருதய நலனைப் பாதுகாக்கிறது
- இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகிறது
- உடலில் அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது
- இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
- காயங்கள் விரைவில் ஆற உதவுகிறது
3) வில்வ மரம்
Source: <a href=”https://commons.wikimedia.org/wiki/File:Trunks_and_leaves_of_Indian_bael_(Aegle_marmelos).jpg”>Billjones94</a>, <a href=”https://creativecommons.org/licenses/by-sa/4.0″>CC BY-SA 4.0</a>, via Wikimedia Commons
பலன்கள்
- வில்வ மரம் அசீரணக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
- நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது
- மூச்சுக் கோளாறுகளைப் போக்க உதவுகிறது
- வில்வ பழம் நோய் எதிர்க்கும் திறனை வளர்க்கிறது.
4) சந்தன மரம்
பலன்கள்
- சருமப் பிரச்சினைகளைப் போக்க உதவுகிறது.
- வலி, வீக்கம் போன்றவற்றைப் போக்க உதவுகிறது.
- மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது.
- உடல் சூட்டைத் தணித்து உடலைக் குளிர்விக்கிறது.
5) வேங்கை மரம்
பலன்கள்
- நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது
- காயங்களை விரைவாக ஆற்றுகிறது
- நோய்த் தொற்றுகளைப் போக்க உதவுகிறது
6) குங்கிலிய மரம்
Source:<a href=”https://commons.wikimedia.org/wiki/File:Frankincense_Trees_in_Dhofar_2.jpg”>https://www.flickr.com/photos/130649623@N05/</a>, <a href=”https://creativecommons.org/licenses/by-sa/2.0″>CC BY-SA 2.0</a>, via Wikimedia Commons
பலன்கள்
- மூட்டு வலி மற்றும் வீக்கத்தைப் போக்க உதவுகிறது
- செரிமானத்தை மேம்படுத்துகிறது
- மூச்சுக் கோளாறுகளைத் தணிக்க உதவுகிறது
7) சந்தன வேங்கை மரம்
பலன்கள்
- சளி, காய்ச்சலைப் போக்குகிறது
- சருமப் பிரச்சினைகள் தீர உதவுகிறது
- நோய்த்தொற்றுகள் குணமாக உதவுகிறது
- நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது
- மூட்டுப் பிரச்சினை தீர உதவுகிறது
- விஷக்கடிக்கு மருந்தாகிறது
- மூலம் குணமடைய உதவுகிறது
- அதீத சோர்வை சரி செய்கிறது
- இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது
அழியும் அபாயத்தில் இருக்கும் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இந்திய மருத்துவ மரங்கள் நம் வரலாறோடு பின்னிப்பிணைந்தவை. இந்த மரங்களைக் காப்பது நம் கடமை.
பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள், வழிப்பாட்டுத் தலங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் அழியும் அபாயத்தில் இருக்கும் மருத்துவ மரங்களை வளர்க்க வேண்டும்.
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் வாங்கும் போதும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லாத பொருட்களாக வாங்குதல் மிகவும் அவசியம்.

இரமா தமிழரசு
வணக்கம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். எங்களுடைய மற்ற வலைப்பக்கத்தையும் YouTube channel-களையும் பார்க்குமாறு உங்களை வரவேற்கிறோம்.
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
https://www.youtube.com/@letnaturelive1 .