சமீப நாட்களாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Professor Edward Anderson இட்லி பிரியர்களிடம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். “உலகத்தின் அலுப்பான விஷயங்களில் ஒன்று இட்லி” (Idli are the most boring things in the world) என்று அவர் ட்விட்டரில் கூறியதுதான் அதற்குக் காரணம். இந்தியா உறங்கும் நேரத்தில் கூட தென் இந்திய twitter-க்காரர்கள் தனக்கு பதிலளித்துக் கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். இதில் அற்புதமான விடயம் என்னவென்றால் இட்லிக்கான ஆதரவுக் குரல் வந்தது தென் இந்தியாவில் இருந்து மட்டுமல்ல.
சும்மா சொல்லக் கூடாது, நம் மக்களின் சுவை உணர்வே அலாதிதான். இட்லியின் சுவைப் பற்றியும் அதை எப்படியெல்லாம் சாப்பிட முடியும் என்பது பற்றியும் பல விளக்கங்களை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். யோசித்துப் பார்த்தால் இதில் வியப்பேதும் இல்லை. மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைகளையே பல்வேறு வகைகளில் உணவில் சேர்த்துக் கொண்டவர்களின் வழித்தோன்றல்கள்தானே – இன்று நாம் பார்க்கவிருக்கும் தூதுவளை உட்பட.
நன்கு அறியப்படும் மூலிகை வகைகளில் ஒன்று தூதுவளை. தூதுவளையின் அவதாரங்கள் பலவிதமானவை – கஷாயம், குழம்பு, ரசம், சோறு, துவையல், பச்சடி, இட்லி பொடி (ஏதாவது விட்டுப் போயிருந்தால் கூறவும்) என்று பல வகைகளில் தூதுவளை உணவில் இடம் பெறுகிறது. தூதுவளை ஆங்கிலத்தில் climbing brinjal என்று அழைக்கப்படுகிறது.
தூதுவளையின் மருத்துவ குணங்கள்
தூதுவளையின் மருத்துவ குணங்களில் சில:
- சளி, இருமலைப் போக்குகிறது
- சைனஸ் பிரச்சினையை சரி செய்கிறது
- மூச்சுக் கோளாறுகளைப் போக்குவதால் இயற்கையான முறையில் ஆஸ்துமாவை சரி செய்ய உதவுகிறது
- சீரணத்தைப் பலப்படுத்துகிறது
- வாய்வுக் கோளாறை சரி செய்கிறது
- மலச்சிக்கலைப் போக்குகிறது
- வயிற்று வலியைப் போக்குகிறது
- உடலைப் பலப்படுத்துகிறது
- இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது
- காச நோயைத் தவிர்க்கிறது
- புற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது
- கல்லீரலைப் பாதுகாக்கிறது
- காதுப் பிரச்சினைகளை சரி செய்கிறது
- உடல் சோர்வைப் போக்க உதவுகிறது
கூடுதல் தகவல்
தூதுவளை கொசுத் தொல்லையையும் போக்கும்.

இரமா தமிழரசு
வணக்கம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். எங்களுடைய மற்ற வலைப்பக்கத்தையும் YouTube channel-களையும் பார்க்குமாறு உங்களை வரவேற்கிறோம்.
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
https://www.youtube.com/@letnaturelive1 .

ஆரம்பகட்ட யோகா பயிற்சியாளர்களுக்கு புத்துணர்வு ஊட்டும் 5 எளிய ஆசனங்கள்
காலை எழுந்திருக்கும் போதே சோம்பலாகவோ, அலுப்பாகவோ, சோர்வாகவோ உணர்கிறீர்களா? இதோ உங்களுக்காக புத்துணர்வு ஊட்டும் 5 எளிய ஆசனங்கள். நீங்கள் யோகாசனப் பயிற்சிக்குப் புதியவராக இருந்தாலும் கூட இந்த ஆசனங்களை பயிலலாம். ஆனால், ஒவ்வொரு
பத்து இலட்சம் முயல்களை பாலைவனத்தில் விட்டதா சீனா? – The Rabbit Story and Great Green Wall of China
கடந்த ஒரு வருடமாக, சீனா, பத்து இலட்சம் முயல்களைக் பாலைவனத்தில் விட்டதாக ஒரு செய்தி பல ஊடகங்கள் மூலமாகப் பரவியது. உண்மையில் நடந்தது என்ன என்பது பற்றியும் சீனாவின் பசுமை பெருஞ்சுவர் சாதனைப் பற்றியும்

அழிவின் விளிம்பில் இருக்கும் 7 இந்திய மருத்துவ மரங்கள்
அழியும் அபாயத்தில் 7 இந்திய மருத்துவ மரங்கள் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற சில பண்டைய காலத்து இந்திய மருத்துவ முறைகளில் மரங்களுக்கு மிக முக்கிய பங்கிருந்தது. அமைதியான, அற்புதமான இந்த மரங்கள் மருத்துவத்