உடல் மன ஆரோக்கியம்

நேர்மறையாக நாளைத் தொடங்க அற்புதமான ஆசனங்கள்

நம்மில் பலரும் ஒவ்வொரு நாளையும் அவசரத்துடன் தொடங்குகிறோம் –  கைபேசியில் செய்திகளைப் பார்ப்பது தொடங்கி காலைப்பொழுதின் வேலைகளில் அவசரகதியில் ஈடுபடுவதன் மூலம் கண்விழிக்கும் கணம் முதலே அழுத்தங்களை சுமக்கத் தொடங்குகிறோம். சில நிமிடங்களுக்காக இருந்தாலும் பயிற்சிகளில் ஒரு நாளைத் தொடங்குவது நம்முடைய ஆற்றலுக்கும், மனநிலைக்கும், நாள் முழுவதும் தெளிவோடு செயல்படுவதற்கும் பெரும் உறுதுணையாக இருக்கும்.  நேர்மறையாக நாளைத் தொடங்க அற்புதமான ஆசனங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.

காலை நேரத்தில் யோகா செய்வதால் ஏற்படும் முக்கிய நன்மைகள்

  • உடல் இயக்கத்தை இயல்பான முறையில் தூண்டுகிறது.
  • உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.
  • காலைநேர மூட்டு இறுக்கத்தைப் போக்குகிறது.
  • மனதில் தெளிவையும் அமைதியையும் உண்டாக்குகிறது.
  • நேர்மறையான மனநிலையை அளிக்கிறது.

நேர்மறையாக நாளைத் தொடங்க அற்புதமான  ஆசனங்கள் 4

1) தாடாசனம்

நின்று கொண்டு செய்யும் ஆசனமான தாடாசனம் தோற்றப்பாங்கை சரி செய்வதோடு உடலின் சமநிலையையும் மேம்படுத்துகிறது. மூச்சில் கவனத்தை வைக்க உதவும் தாடாசனம் காலை நேரத்து உடல் இயக்கத்தை மென்மையாகத் தூண்டுகிறது.

தாடாசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

2. சூரிய வணக்கம்

காலையில் சூரிய வணக்கம் செய்வது உடல் முழுமைக்கும் ஆற்றலையும் புத்துணர்வையும் தரும். இரத்தம் மற்றம் பிராண ஓட்டத்தை மேம்படுத்தவும், உடலின் நெகிழ்வுத்தன்மை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் சூரிய வணக்கம் உதவுகிறது. தினமும் காலை 3 முதல் 6 சுற்றுகள் வரை சூரிய வணக்கம் செய்வது உடலுக்கும் மனதிற்கும் மிகுந்த ஆற்றலைத் தரும்.

3. புஜங்காசனம்

புஜங்காசனம் முதுகெலும்பின் நீட்சிக்கு உதவுகிறது. நுரையீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. தோள் மற்றும் முதுகின் இறுக்கத்தைப் போக்குகிறது. காலையில் புஜங்காசனம் பயில்வதால் ஆற்றல் அதிகரிக்கிறது.

புஜங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

4. அதோ முக ஸ்வானாசனம்

உடல் முழுமையையும் நீட்சிக்க வைக்கும் அதோ முக ஸ்வானாசனம் மூளைக்கு  இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. உடல் சோர்வைப் போக்கும் இந்த ஆசனம் மன ஒருங்கிணைப்பையும் மேம்படுத்துகிறது.

அதோ முக ஸ்வானாசனம் பலன்கள் மற்றும் செய்முறை பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

காலை நேர யோகப்பயிற்சிக்கான எளிய முக்கிய குறிப்புகள்

  • வெறும் வயிற்றில் பயிற்சி செய்யவும்.
  • நிதானமாகவும் ஆசனத்தில் கவனம் வைத்தும் பயிலவும்.
  • உடலை வருத்தி பயில்வதைத் தவிர்க்கவும்.
  • சுவாசத்தில் கவனம் வைக்கவும்.

யோகாசன பயிற்சியோடு நாளைத் தொடங்குவது அமைதி நிறைந்த ஆற்றல் மிக்க துவக்கத்தைக் கொடுப்பதற்காகவே. இந்த எளிய பழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் அன்றைய நாளின் அனுபவங்களை நேர்த்தியாக கையாள உதவும்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.
எங்களுடைய பிற வலைப்பக்கம் மற்றும் YouTube channel-கள்:
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
http://www.youtube.com/@letnaturelive_YT

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்