இன்று ஒரு ஆசனம் (65) – பார்சுவ பாலாசனம் (Thread the Needle Pose)

வடமொழியில் ‘பார்சுவ’ என்றால் ‘பக்கம்’, ‘பால’ என்றால் ‘குழந்தை’ என்று பொருள். இவ்வாசனத்தில் பாலாசன நிலை அல்லது பாலாசன நிலையிலிருந்து சற்றே மாறுபட்ட நிலையில் மேலுடலைப் பக்கவாட்டில் திருப்பி செய்வதால் இந்த ஆசனம் பார்சுவ பாலாசனம் என்று அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் Thread the Needle Pose என்று அழைக்கப்படுகிறது. பார்சுவ பாலாசனத்தில் மணிப்பூரக சக்கரம் தூண்டப்படுகிறது. மணிப்பூரகம் பிரபஞ்ச சக்தியை ஈர்க்கிறது, தன்மதிப்பை வளர்க்கிறது. மனதை சாந்தப்படுத்துகிறது. பார்சுவ பாலாசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுத்தண்டின் […]
தேநீர் நேரம்
தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று ஒரு ஆசனம் இன்று பதிவேற்றப்படவில்லை. ஆனாலும், இன்றைய மூலிகைப் பக்க பதிவுகளை உங்களுக்காக பதிவேற்றியிருக்கிறோம்: கற்பூரவல்லியின் பலன்கள் பற்றி அறிய இங்கே click செய்யவும். கற்பூரவல்லி தேநீரின் பலன்கள் பற்றி அறிய இங்கே click செய்யவும். நன்றி.
இன்று ஒரு ஆசனம் (64) – சக்ராசனம் (Wheel Pose)

பின் வளைந்து செய்யும் ஆசனங்களில் சவாலான ஆசனம் சக்ராசனம். இதன் பெயரிலேயே புரிந்திருக்கும், இவ்வாசனத்தில் உடல் சக்கரமாக வளைந்திருக்கும் என்று. இவ்வாசனம் ஆங்கிலத்தில் Wheel Pose என்று அழைக்கப்படுகிறது. சக்ராசனம் உடலில் உள்ள முக்கியமான எட்டு சக்கரங்களையும் (ஏழு முக்கிய சக்கரங்கள்தானே என்று நினைக்கிறீர்களா, விரைவில் இது பற்றி எழுதுவோம்) தூண்டுவதால், இவ்வாசனம் மிகவும் வலிமையான ஆசனமாகவும் உடலுக்கு ஆற்றலைத் தரும் ஆசனமாகவும் ஆகிறது. சக்ராசனம் பழகுவதால் முழு உடலுக்குமே அற்புதமான அளவில் பயிற்சி கிடைக்கிறது. சக்ராசனத்தின் […]
இன்று ஒரு ஆசனம் (63) – கருடாசனம் (Eagle Pose)

நின்று செய்யும் ஆசனங்களில் விருஷாசனம் போன்றே ஒற்றைக் காலில் நின்று செய்யப்படுவது கருடாசனம். வடமொழியில் ‘கருட’ என்றால் ‘கருடன்’ அல்லது ‘கழுகு’ என்று பொருள். கருடாசனம் ஆங்கிலத்தில் Eagle Pose என்று அழைக்கப்படுகிறது. விருஷாசனம் பற்றி படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். கருடாசனம் என்ற ஆசனத்தின் பெயருக்குப் பின்னால் இருப்பது வெறும் கழுகு அல்ல; அதன் குணாம்சங்களே. கழுகு பயமில்லாதது; எதையும் எதிர் கொள்ளும் துணிவு கொண்டது. தன் இரை எவ்வளவு பெரிதாக, வலியதாக இருந்தாலும் பின்வாங்காமல் […]
நன்றி
நேற்றைய கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடை அளித்த அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி. இதுவரை இக்கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள் மூலம் நாங்கள் அறிந்தவற்றில் முக்கியமானவை: 1) பெரும்பாலானவர்கள் சுலபமான ஆசனங்களை நாங்கள் பதிவேற்றுவதை விரும்புகிறார்கள். இது முழுக்கவே எங்களுக்கு ஏற்புடையது. ஏனென்றால், yogaaatral.com தொடங்கப்பட்ட போது இதன் முக்கியக் குறிக்கோள் எல்லாரும் செய்யும் வண்ணம் ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே. ஆனாலும், சிலர் கடினமான ஆசனங்களை விரும்புவதாகத் தெரிவித்திருப்பதால், அவர்களுக்காக சில கடினமான ஆசனங்களை […]