இன்று ஒரு ஆசனம் (53) – அர்த்த திரிகோணாசனம் (Half Triangle Pose)

நின்று செய்யும் ஆசனங்களில் இன்று நாம் பார்க்கவிருப்பது அர்த்த திரிகோணாசனம். பக்கவாட்டில் வளையும் ஆசனங்களில் சுலபமானதான இந்த ஆசனம் அடுத்து வரவிருக்கும் திரிகோணாசனத்திற்கும் ஏனைய பக்கவாட்டில் வளையும் ஆசனங்களுக்கு  நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும் உதவும். அர்த்த திரிகோணாசனத்தின் பலன்கள் முதுகுத்தண்டு பக்கவாட்டில் வளைவதால் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது முதுகு வலியைப் போக்க உதவுகிறது கைகளைப் பலப்படுத்துகிறது இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையும் கூடுகிறது கால்களை நீட்சியடைய வைக்கிறது செய்முறை தாடாசனத்தில் நிற்கவும். இரண்டு கால்களுக்கு இடையில் சுமார் ஒன்றரை முதல் […]

இன்று ஒரு ஆசனம் (52) – அர்த்த கடி சக்ராசனம் (Half Waist Wheel Pose)

நாம் முன்னர் அர்த்த சக்ராசனம் என்ற நின்று பின்னால் வளையும் ஆசனத்தைப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது அர்த்த கடி சக்ராசனம். வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘கடி’ என்றால் ‘இடுப்பு’. இந்த ஆசனத்தில் இடுப்பைப் பக்கவாட்டில் வளைப்பதால் இந்தப் பெயர் பொருத்தமாகிறது. இது ஆங்கிலத்தில் Half Waist Wheel Pose என்று அழைக்கப்படுகிறது. அர்த்த கடி சக்ராசனத்தில் இடுப்புப் பகுதி பலம் பெறுவதோடு இடுப்பில் உள்ள அதிக சதை கரைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தில் மூலாதார சக்கரமும் […]

இன்று ஒரு ஆசனம் (51) – அர்த்த நமஸ்கார் பார்சுவ கோணாசனம் (Half Prayer Twist Pose)

வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘நமஸ்கார்’ என்றால் ‘வணக்கம்’, ‘பார்சுவ’ என்றால் ‘பக்கவாட்டு’, ‘கோணா’ என்றால் ‘கோணம்’ என்று பொருள். அதாவது, இந்த ஆசனத்தில் பக்கவாட்டு கோணத்தின் அரை நிலையில் இருக்க வேண்டும், அதாவது பாதி பார்சுவ கோணாசனம். இது ஆங்கிலத்தில் Half Prayer Twist Pose என்று அழைக்கப்படுகிறது. அர்த்த நமஸ்கார் பார்சுவ கோணாசனத்தில் மணிப்பூரக சக்கரம் தூண்டப்படுகிறது. மணிப்பூரக சக்கரம் பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கிறது. நம்முள் இருக்கும் ஆற்றலை வெளிக் கொணருகிறது. தன்மதிப்பு, தன்னம்பிக்கை […]

இன்று ஒரு ஆசனம் (50) – உத்கடாசனம் (Chair Pose)

நேற்று நாம் பார்த்தது அர்த்த உத்கடாசனம். அதன் முழுமையான வடிவமான உத்கடாசனத்தை இன்று பார்க்கவிருக்கிறோம். வடமொழியில் ‘உத்கடா’ என்றால் ‘தீவிரமான’ மற்றும் ‘பலம் பொருந்திய’ என்று பொருள் என்பதை நேற்று குறிப்பிட்டிருந்தோம். முழுமையான உத்கடாசனத்தைப் பயிலும்போது இதன் பொருளை நீங்கள் மேலும் நன்றாக உணர்வீர்கள்.

இன்று ஒரு ஆசனம் (49) –அர்த்த உத்கடாசனம் (Half Chair Pose / Half Squat Pose)

இன்று முதல் தொடர்ந்து வரும் சில நாட்களுக்கு நாம் நின்று செய்யும் ஆசனங்களைப் பார்க்கலாம். இன்று நாம் பார்க்கவிருப்பது அர்த்த உத்கடாசனம். வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’ என்றும் ‘உத்கடா’ என்றால் ‘தீவிரமான’ மற்றும் ‘பலம் பொருந்திய’ என்று பொருள். இந்த ஆசன நிலையே கடினமானதும் உடலுக்கு பலம் தரக்கூடியதும் ஆகும். அர்த்த உத்கடாசனம் முதுகெலும்பு வழியாக ஆற்றல் பரவுவதை சீர் செய்கிறது. இதனால் உடம்பிலும் மனதிலும் உறுதியும் ஆற்றலும் பெருகுகின்றன. அர்த்த உத்கடாசனம் மூலாதார மற்றும் […]

தமிழ்