இன்று ஒரு ஆசனம் (27) – தண்டாசனம் (Staff Pose)

பார்ப்பதற்கு மிக எளிமையாகத் தோன்றும் தண்டாசனம் முதுகுத்தண்டை பலப்படுத்தும் அற்புதமான பயிற்சியாகும். ‘தண்டு’ என்றால் ‘கம்பு’ என்றும் ‘முதுகுத்தண்டு’ என்றும் பொருள். தண்டாசனம்  முதுகுத்தண்டை பலப்படுத்தும் ஆசனமாகும். இவ்வாசனம் முதுகுத்தண்டை நீட்சியடைய (stretches) வைக்கிறது. மேலும், இந்த ஆசனம் சரியான முறையில் சுவாசிக்க பழக்குகிறது. உடலின் சக்தியோட்டத்தில் மனதை செலுத்த இந்த ஆசனம் உதவுகிறது. அமர்ந்து செய்யக் கூடிய ஆசனங்களை துவக்குவது தண்டாசனத்தில் அமர்ந்துதான். தண்டாசனத்தின் மேலும் சில பலன்கள் முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது. மார்புப் பகுதியையும் […]

இன்று ஒரு ஆசனம் (26) – அர்த்த மத்ஸ்யேந்திராசனம் (Half Spinal Twist)

வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘அரை’, ‘’மத்ஸ்ய’ என்றால் ‘மீன்’, ‘இந்திர’ என்றால் ‘அரசன்’. ஆக, இது மீன்களின் அரசனின் பாதி நிலை ஆசனம் என்பதாகும். மத்ஸ்யேந்திரர் என்ற யோகியின் பெயரை ஒட்டி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை Half Lord of the Fishes என்றும் குறிப்பிடுவர். அர்த்த மத்ஸ்யேந்திராசனத்தில் முதுகெலும்பு நன்றாகத் திருப்பப்பட்டு, அதன் நெகிழ்வுத்தன்மை (flexibility) அதிகரிக்கப்படுகிறது. முதுகுத்தண்டிற்கு புத்துணர்ச்சி அளித்து அதன் செயல்பாட்டை சிறந்த நிலையில் வைத்திருக்க உதவுகிறது. அர்த்த மத்ஸ்யேந்திராசனத்தின்  மேலும் […]

இன்று ஒரு ஆசனம் (25) – ஜானு சிரசாசனம் (Head to Knee Pose)

வடமொழியில் ஜானு என்றால் ‘முட்டி’, ‘சிரசா’ என்றால் ‘தலை’. முட்டி தலை ஆசனம் – அதாவது, தலையை கால் முட்டியில் வைப்பது (Head to Knee Pose) ஆகும். வேறு ஒரு வகையில், ஒரு கால் பஸ்சிமோத்தானாசனம் என்றும் கூறலாம். பஸ்சிமோத்தானாசனத்தின் பலன்கள் அனைத்தும் இதற்கும் உண்டு. குறிப்பாக, ஒரு கால் மடக்கி, மற்றொரு காலை நீட்டி குனிந்து முட்டியை தொடும் போது, உடலின் நடுப்பகுதி பக்கவாட்டில் அழுத்தப்படும் போது, சீரண கருவிகள் அனைத்தும் நன்கு இயங்கும். […]

இன்று ஒரு ஆசனம் (24) – வக்கிராசனம் (Twisted Pose)

வக்கிராசனம் என்றால் முறுக்கிய நிலை ஆகும். வடமொழியில் வக்கிரம் என்றால் முறுக்குதல் (twisted) ஆகும். முதுகுத்தண்டினை இடபுறமாகவும், பின் வலபுறமாகவும் முறுக்கி செய்வது ஆகும். இதனால், முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து முதுகெலும்புகளுக்கிடையிலான இறுக்கத்தை குறைக்கிறது. உடல் முறுக்குவதால் இடுப்பு பகுதி பலப்படுகிறது. முக்கியமாக சீரண மண்டலத்தின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. வக்கிராசனத்தின் மேலும் சில பலன்கள் மலச்சிக்கலை போக்குகிறது. சீரணத்தை மேம்படுத்துகிறது. கழுத்து வலியை போக்குகிறது. தைராய்டு சுரப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. வயிற்றிலுள்ள அதிக கொழுப்பை குறைக்கிறது. மாதவிடாய் […]

இன்று ஒரு ஆசனம் (23) – சுப்த வஜ்ஜிராசனம் (Supine Thunderbolt Pose)

வஜ்ஜிராசனம் பற்றி முன்பே பார்த்திருப்போம். வஜ்ஜிராசனம் என்பது உடலை வைரம் போல் உறுதியாக்கும் ஆசனம் என்றும் பார்த்திருப்போம். சுப்த வஜ்ஜிராசனம் என்பது படுத்த நிலையில் வீராசனத்தில் இருப்பதாகும். வட மொழியில் ‘சுப்த’ என்றால் ‘படுத்திருத்தல்’ என்று அர்த்தம். ஆக, இது படுத்த நிலையில் வஜ்ஜிராசனம் செய்வதாகும். வஜ்ஜிராசனம் பற்றி படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். வஜ்ஜிராசனம் போலவே சுப்த வஜ்ஜிராசனமும் சீரணக் கோளாறுகளை சீர் செய்து சீரண உறுப்புகளை சரியாக இயங்க வைக்கிறது. வயிற்று உள் உறுப்புகளின் […]

தமிழ்